செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சிவன் இராவணன் பற்றி இலக்கியம்

இலங்கை வேந்தன்
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்
 உமை அமர்ந்து உயர்மலை இருந்தனனாக
 ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையின்  கீழ்புகுத்து அம்மனை
 எடுக்கல் செல்லாது உழப்பவன்  …..
கபிலர். கலித். 38  :  1 - 5
  இமயமலையை வில்லாக வளைத்தவன் ‘; கங்கையின் ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடைய இறைவன் சிவபெருமான் – இறைவியாகிய உமையம்மையுடன் உயர்ந்த இமயமலையிலே இருந்தான்; அதுபோது பத்துத் தலைகளை உடையவனும் அரக்கர்களின் தலைவனுமாகிய இராவணன்  இமயமலையை எடுத்தற்காகத் தொடியழகு பெற்ற தடக்கைகளினால் அம்மலையை எடுக்கலாற்றாது வருந்தினன்.
( இமயவில் வாங்கி என்பதற்கு நச்சினார்க்கினியர் –” இமய மலையிடத்துப் பிறந்த மூங்கிலை வில்லாக வளைத்து” என்று பொருள் கூறுகின்றார். ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக