செவ்வாய், 26 செப்டம்பர், 2017

11 பேர் குட்டிநாடு இத்தாலி தனிநாடு

குட்டி நாடு
11 பேரை மட்டுமே கொண்ட குட்டி நாடு
 Web Team உலகம் 11 Jul, 2017 03:49 PM
0 0
சர்தீனியாவின் வடகிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள
தவோலாரா தீவு தான் உலகின் மிகச் சிறிய சாம்ராஜியம் என அழைக்கப்படுகிறது.
இத்தாலி யால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட தவோலாரா தீவின் ஒட்டுமொத்த
பரப்பளவே ஐந்து சதுர கிலோமீட்டர்தான்.
தவோலாரா குட்டித்தீவில் உள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். அங்கு
இன்றும் ராஜாவின் ஆட்சி தான் நடக்கிறது. ராஜாவின் பெயர் அந்தோனியோ
பர்த்லியோனி. இவர் உணவு விடுதியை நடத்துகிறார். சாதாரண கால்சட்டை
அணிந்து, ரப்பர் செருப்பணிந்து வாழ்ந்துவரும் அரசரின் ஆட்சிக்கு
உட்பட்டது தவோலாரா. ராஜாவை பார்க்க அப்பாயிண்மெண்ட்லாம் வாங்க வேண்டாம்.
ஆடம்பரமில்லாமல் இயல்பாக தோற்றமளிக்கும் அரசர், தன் தீவிற்கு வரும்
சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டி சுற்றி காண்பிப்பார்.
உலகிலேயே இங்குதான் மின்னும் பற்கள் கொண்ட ஆடு கள் உள்ளன. இதை
பார்ப்பதற்காகவே இங்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக