மழைக் கோள்
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.13 : 25 – 28
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் சுக்கிரன் கோள் செல்லாமல் – மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்து வரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்குகின்றன.( மழைக் கோளாகிய வெள்ளி – செவ்வாயுடன் சேர்ந்தால் மழை இலதாகும் என்பது வானியல் அறிவியலா – ஆய்க.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக