செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தலையா பூவா டாஸ் முறை போன்ற சங்ககால பழக்கம் கண்மூடி மணலில் வட்டமிடுதல் இலக்கியம்

கூடலிழைத்தல்
கோடு வாய் கூடாப் பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ….
நல்லந்துவனார். கலித் . 142  : 24 – 25

 தலைவி – என்னுடைய சிறிய இல்லத்தினுள்ளே அவனைக் காணப்பெறுவேனோ என்று கூடலிழைத்தேன். அக்கூடலை முற்றிலும் இழைக்கும் முன் வளைவு முழுவதும் வாய் கூடாத இளம் பிறை வடிவாகத் தோன்றியது.  (பிரிவினால் வாடும் தலைவி தலைவன் வருவானோ என்று கூடலிழைத்துக் காண்பாள் – கண்களை மூடிக்கொண்டு தரையில் விரலால் சுழன்று சுழன்று வட்டம் இடுதல் வேண்டும் – இரண்டு முனைகளும் சரியாக இணைந்தால் தலைவன் வருவான்; சேராவிட்டால் வாரான் என்று கொள்வது மரபு.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக