செவ்வாய், 26 செப்டம்பர், 2017

சேக்கிழார் கிழார் சொல்லாய்வு அமைச்சர் வேர்ச்சொல் கிஸான்

Logan K Nathan
பன்னிரு திருமுறைகளில் ஒன்றான பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழாரின்
இயற்பெயர் இராமதேவன். கிழார் என்று வருவதால் வேளாளர் என்றும், சைவர்
என்றும் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கல்வெட்டுகள் மூலம் அறியலாகும்
செய்தி அவ்வாறு இல்லை. கிழார் என்றால் உரிமையாளர் /தலைவர் என்பது பொருள்.
இவரது முன்னோர்களும், பின்னோர்களும் சோழ அரசர்களுக்கு அமைச்சராக
இருந்தவர்கள். இவரது தம்பி சேக்கிழார் பாலறாவாயர் என்பாரும் அமைச்சராக
இருந்தார். சேக்கிழார் வரந்தரும் பெருமாள் என்பவர் திருவூரகப் பெருமாள்
கோவிலுக்கு தானங்கள் செய்துள்ளார். சேக்கிழார் இராமதேவர்,
அருள்மொழித் தேவர் என்றும் அழைக்கப்படுகிறார். உத்தம சோழ பல்லவரையர்
என்பது இவரது பட்டப் பெயர்.


Aathimoola Perumal Prakash
கிழார் என்பது தொடக்கத்தில் வேளாளரை அதாவது விவசாயியைக் குறித்தது.
இதுவே வடக்கே இன்றும் கிஸான் என்று வழங்கப்படுகிறது என பாவாணர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக