செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பணம் பொருட்டு மனைவி ஐ பிரிவது மரபு மீறல் இலக்கியம் இல்லறம் பொருளாதாரம்

பொருள் வயிற் பிரிவு
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே
…………………………………………
அரும்பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . நற். 337 : 1-2 ; 9 – 10

தலைவியால் பெறும் பெரிய பயனைக் கொள்ளாது ; பிரிந்துறைகின்ற மரபினவாய்ப் பொருளீட்டும் வழிகளை நாடிப் பொருளீட்டுவார் இவ்வுலகு தோன்றிய காலம் முதலாகத் தம்மை அடைந்தாரைக் காக்கின்ற மரபை மறந்தனரோ ; அங்ஙனமாயின் (இகழ்ச்சியாக ) சிறந்தவரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக