வெள்ளி, 22 செப்டம்பர், 2017

அருணகிரிநாதர் இராவணன் வதை பற்றி புகழ்ந்து வேசி பற்றி விபரித்து முருகன் இராமன் மருமகன்

முலையை மறைத்துத் திறப்ப ராடையை
நெகழி வுடுத்துப் படுப்பர் வாயிதழ்
முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல         ரணைமீதே
அலைகுலை யக்கொட்டணைப்ப ராடவர்
மனவலி யைத்தட் டழிப்பர் மால்பெரி
தவர்பொருலைக்கைப் பறிப்பர்வேசைக        ளுறவாமோ
தலைமுடி பத்துத்தெறித்து ராவண
னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு
தனுவை வளைத்துத் தொடுத்த வாளியன்      மருகோனே
கலைமதி யப்புத்தரித்த வேணிய
ருதவிய வெற்றித் திருக்கை வேலவ
கழுகு மலைக்குட் சிறக்க மேவிய         பெருமாளே.
பதவுரை
தலைமுடி பத்து தெறித்து-பத்துத் தலைமுடிகளும் தெறிப்புண்டு, ராவணன் உடல்
தொளைபட்டு, துடிக்கவே-துடித்திடவே, ஒரு தநுவை வளைத்து-ஒப்பற்றவில்லை
வளைத்து, தொடுத்த வாளியன்-அம்பை செலுத்திய ஸ்ரீராமனுடைய, மருகோனே-
திருமருகரே! கலைமதி -ஒரு கலையுடைய சந்தரனையும், அப்பு-கங்கையையும்,
தரித்த வேணியர்-தரித்துக் கொண்ட சடை முடியராம் சிவபெருமான், உதவிய-
பெற்றருளிய, வெற்றி திருக்கை வேலவ-வெற்றி வேலைத்திருக்கரத்தில்
தாங்கியவரே! கழுகுமலைக்கு உள் சிறக்க மேவிய-கழுகுமலையிற் சிறப்புடனே
வீற்றிருக்கும், பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! முலையை மறைத்து
திறப்பர்-தனத்தை மூடித்திறப்பார்கள். ஆடையை நெகிழ உடுத்து
படுப்பர்-ஆடையைத் தளர்ச்சியாக உடுத்திப் படுப்பார்கள், வாய் இதழ்
முத்தி-வாயிதழ் ஊறலையும் முத்தத்தையும், முறை முறை கொடுப்பர்-மாறி மாறித்
தருவார்கள்,பூமலர் அணைமீதே-மலர்ப் படுக்கையின் மேல், அலை குலைய கொட்டு
அணைப்பர்-நிலைகுலையக் கொண்டு அணைப்பார்கள், ஆடவர் மனவலி
அழிப்பர்-ஆண்களின் மன உறுதியைக் கலங்க வைப்பார்கள், மால் பெரிது-
மோகமயக்கத்தை மிகவுஞ் செய்து, அவர் பொருளை கைபறிப்பர்-அவர்களுடைய
பொருளைக்கவர்ந்து கொள்வார்களாகிய, வேசைகள் உறவு ஆமோ-வேசையர்களின் உறவு
ஆகுமோ? (ஆகாது).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக