காதல் – சாதல் அஞ்சேன்
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே.
அம்மூவனார்.நற். 397 : 7 – 9
தலைவன் பிரிவால் வாடும் தலைவி - இவ்வுலகில் இறப்புக்கு அஞ்சேன்; இறந்து போனால் நேரும் மறுபிறப்பில் வேறுபட்டுப் போனால் என் காதலனை மறந்துவிட நேருமோ என்றே அஞ்சுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக