வெள்ளி, 22 செப்டம்பர், 2017

காமராசர் வேட்பாளர் நாடார் என தவறாக பரப்பல்

திரு.காமராஜரை பற்றி தவறான உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் நிறைய உலவி
வருகிறது.காமராஜ
ர் நாடாருக்கு அதை செய்தார் இதை செய்தார் என்று சிலர் சொல்வதை
கேட்கமுடிகிறது ஒரு கட்டத்தில் காமராஜர் வெறும் நாடார் இன தலைவராகவே
ஆக்கிவிட்டார்கள்.அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சொந்த தொகுதியிலேயே
தோற்கடித்த அவர் சொந்த இனமக்கள் இன்று அவரை தூக்கி கொண்டாடுவதை வைத்து
அளவுகோலை விதிக்க முடியாது.நாடார்களே காமராஜரை நம்மின விரோதி நம்மை
ஓடுக்குகிறார் என்ற குற்றசாட்டுகளை வைத்தார்கள்.உண்
மையில் காமராஜர் தன்னை தவிர இன்னொரு செல்வாக்கு கொண்ட நாடார் தலைமை
காங்கிரஸ்ஸில் தலையெடுத்து விட கூடாது என்றே அரசியல் செய்தார்.பெரியார்
ஆதரவு என்று பில்டப் கொடுக்கும் இன்றைய திராவிட சிகாமணிகள் ஒன்றை
புரிந்து கொள்ள வேண்டும் அதாவது இது பிராமணரல்லாத அமைச்சரவை என்றதும்
பிராமணருக்கு மந்திரி பதவி கொடுத்தார் காமராஜர்.ராஜாஜியோடு பகை ஆனாலும்
அவர் மகனுக்கு வாய்ப்பு வழங்கி செல்வி.ஜெவின் அரசியல் வியூகங்களுக்கு
அன்றே அச்சாரமிட்டவர் காமராஜர்.
1952ல் சட்டமன்ற தொகுதியில் ஆலங்குளம்/விளாத்திகுளம்/
தூத்துகுடியில் நாடாருக்கு வாய்ப்பு கொடுத்தார் என்பது தவறான தகவல்.
மறவர்/ரெட்டியார்/
பிள்ளைமாருக்கு வாய்ப்பு வழங்கினார்.பாராளுமன்றத்தில்
ஸ்ரீவில்லிபுத்தூரில் காமராஜரே நின்றார் சங்கரன்கோவிலில் பிள்ளைமாருக்கு
வாய்ப்பு கொடுத்தார் அதுவும் நாடார் என திரிக்கப்பட்டுள்ளது.1952 ல்
போகிற போக்கில் யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை # சுதந்திர
# போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள
ுக்கே பெருபாலும் வாய்ப்பு வழங்கினார்கள்.
(வன்னிய இளைஞர்களுக்கு தவறான வரலாற்றை எழுதிய அச்சமில்லை இறைவனே காரணம்
காமராசர் மீதான அவதூறு கருத்துகளுக்கு மற்றும் தேவர் இணையதளமும்)
காமராஜர் நாடார்களுக்கு துரோகம் விளைவித்தார் மெஜாரிட்டியான தொகுதிகளில்
வேண்டுமென்றே நாடார்களுக்கு வாய்ப்பை மறுக்கிறார் என்று சொல்லி 1967 ல்
முன்னாள் எம்.பி கணபதி நாடார் "நெல்லை குமரி நாடார்" என்ற அமைப்பின்
மூலம் அண்ணாவுடன் இணைகிறார்.அதாவது ்.அண்ணா கணபதி நாடாருக்கு
நாங்குநேரியில் வாய்ப்பு வழங்குகிறார்.அத
ுமட்டுமில்லாமல் குமரியை தமிழ்நாட்டோடு இணைத்ததில் பெரிய பங்கு வகித்த
மார்ஷல் நேசமணிக்கு மந்திரி பதவி வழங்காமலும் அவரை புறக்கணிப்பதிலும்
நுட்பமாக இருந்தார் ஏனென்றால் தனக்கு எதிராக தன் ஜாதிகாரர் ஒருவரை ராஜாஜி
தனக்கெதிராக உருவாக்கிவிட கூடாது என்று விழிப்புடன் இருந்தார்.அந்த
இணைப்பு விழாவில் கூட "தமிழகத்தோடு நாம் இணைந்தோம் என்ற மகிழ்சியிலேயே
நீங்கள் வாழவேண்டும்.எந்த சலுகையையும் அரசிடம் இருந்து எதிர் பார்க்க
கூடாது ஏனென்றால் படித்தவர்கள் அதிகம் உள்ள திருவிதாங்கூர்
பகுதியிலிருந்து பிரிந்து வந்துள்ளீர்கள்" என்று பேசினார் காமராஜர்.எனவே
இந்த இணைப்பில் ஆர்வமெல்லாம் அவருக்கு இல்லை காரணம் நேசமணிக்கு ஒரு
மிகப்பெரிய உருவம் கிடைக்கும் நமக்கென்ன லாபம் என்று.காமராஜரும்
அரசியல்தான் செய்தார் அதில் மாற்று கருத்தில்லை.அதன் உண்மையான பகுதிகளை
தொட்டு சொன்னால் பரவாயில்லை ஆனால் நாடார்களுக்கு காமராஜர் அள்ளிக்
கொடுத்தார் என்பது வரலாற்று முரண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக