கலைச்செல்வம் சண்முகம்
நீர் எழுத்து – 15
இன்றைக்கு போல் வானிலை ஆய்வு நடுவமோ ரமணன் அவர்களோ இல்லாத அக்காலத்தில்
நம் முன்னோர்கள் மழை வருவதை எப்படிக் கண்டறிந்தனர்? இயற்கைதான்
அவர்களுக்கு வழிக்காட்டியாக இருந்தது. சில நிகழ்வுகளின் வழி அவர்கள்
மழையைக் கணித்தனர். உழவாரக் குருவிகள் குறுக்கும் நெடுக்குமாகக்
கூட்டமாகப் பறந்து திரிந்தால், தட்டான்கள் தாழப் பறந்தால், குளத்தில்
மீன்கள் துள்ளிக் குதித்தால், நண்டுகள் பொந்திலிருந்து வெளியேறினால் அவை
மழைவரும் அறிகுறிகள். அதுபோல் எருமைமாடு வான்நோக்கி எக்காளமிட்டாலோ
பசுமாடு குதித்தவாறு காதுகளை ஆட்டினாலோ அதுவும் மழையின் அறிகுறிகளே!
எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச்
சென்றால் மழைக் கட்டாயம். இதைப் புறநானூற்று பாடல் ஒன்று தெரிவிக்கிறது.
பொய்யா எழிலி பெய்விட நோக்கி
முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்
சிறு நுண் ணெறும்பின்… (173)
இங்குச் சொல்லப்பட்டிருப்பது கொஞ்சமே. இதுபோல் ஒவ்வொரு பகுதிக்கும்
தகுந்தாற்போல இன்னும் ஏராளமாக இருக்கின்றன. இதுதவிரப் பல தலைமுறைகள்
வழியாகக் கற்றுக்கொண்ட சில வானியல் பட்டறிவும் அவர்களுக்கு உதவின.
மார்கழி மாதம் என்பது சூல் மாதம். அடுத்த ஆண்டுப் பெய்யும் மழையை
அறிவிக்கும் மாதம் அது. ஏறத்தாழ டிசம்பர் 28 – ஜனவரி 11 வரைக்கும் வானம்
மப்பும் மந்தாரமுமாக இருந்தால் அடுத்து வரும் ஆண்டில் நல்ல மழை இருக்கும்
என்று பொருள்.
பங்குனி 15 தேதிக்கு மேல் ஆலங்கட்டி மழை பெய்தால் அதுவும் அடுத்து வரும்
ஆண்டின் மழையை உறுதிசெய்யும் ஒரு நிகழ்வாகும்.
வட மாவட்ட உழவர்கள் நெட்டாறல் வழி மழையளவைக் கணித்தனர். ஆடி 23க்கு
பின்னுள்ள ஏழு நாட்களும் ஆவணி 7க்கு முன்னுள்ள ஏழு நாட்களும் கொண்டதே
நெட்டாறல் நாட்கள். இந்நாட்களில் தொடர்ச்சியாக மழையிருந்தால் அதுவே
நெட்டாறல். இதன் விளக்கம் நெடிய ஆறல் என்பதாகும். முகில்கள் அலைவதால்
உண்டாகும் மழை. அதாவது மேகச்சலனத்தினால் உருவாகும் மழை. இதற்கு ஒரு
பழமொழியே இருக்கிறது. ‘நெட்டாறலில் மழை பெய்தால் கெட்ட ஆறெல்லாம்
தண்ணீர்’.
அறிவியல் கருவிகள் ஏதுமற்ற அக்காலத்தில் பறவைகளை உன்னிப்பாகக்
கண்காணித்து இரு பருவமழைக் காலங்களையும் கணித்தனர். இதில் தென்மேற்குப்
பருவமழையைக் கணிக்க உதவிய பறவை – காகம். இது சித்திரை மாதத்தில்
வேப்பமரத்தில் கூடுகட்டுவது வழக்கம். அக்கூட்டை அது மரத்தின்
வெளிப்பக்கமாகக் கட்டுகிறதா அல்லது உட்பக்கமாகக் கட்டுகிறதா என்பதைக்
கவனிப்பர். வெளிப்பக்கமாகக் கட்டினால் அவ்வாண்டு மழைக்குறைவு. ஏனெனில்
மழையால் தன் குஞ்சுகளுக்கு ஆபத்து நேராது என்கிற துணிச்சலில் காகம்
அங்குக் கட்டுகிறது. மாறாக மரத்தின் உட்பக்கம் கட்டினால் அவ்வாண்டு
பருவமழை நன்கு பெய்யும் என்று பொருள். தன் குஞ்சுகளின் பாதுகாப்புக்
கருதி காகம் அவ்வாறு கட்டுகிறது.
வடகிழக்குப் பருவமழையைக் கணிக்க உதவிய பறவை - தூக்கணாங்குருவி.
இக்குருவிக் கூட்டின் அடியிலுள்ள வாய்பகுதியானது ஒன்று இலேசாக வடக்குப்
பக்கமாகத் திரும்பியிருக்குமாம் அல்லது தெற்கு பக்கமாகத் திரும்பியிருக்க
ுமாம். வடக்கில் திரும்பியிருந்த
ால் அவ்வாண்டு மழை அதிகமிருக்காது. ஏனெனில் குஞ்சுகளுக்கு ஆபத்தில்லை
என்று அத்திசையில் வாயிலை வைக்கிறது. தென்பக்கம் திரும்பியிருந்தால் மழை
அதிகம் இருக்கும். வடமாவட்ட உழவர்கள் இதைக் கவனித்தே வேளாண்மையை முடிவு
செய்திருக்கிறார்கள்.
இந்த அனைத்து அறிவும் இன்று தொலைந்து வருகிறது. புவிவெப்பம் அதிகரிப்பதன்
காரணமாகப் பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பினால் திடீர்
வறட்சி அல்லது திடீர் வெள்ளம் ஏற்படுகிறது. பருவநிலை மாற்ற பாதிப்புத்
தமிழகத்தில் தண்ணீரைக் குறைத்து கண்ணீரைப் பெருக்கியுள்ளது. அரசுக்கோ
‘தண்ணி’ கடை குறைந்து போனது பற்றி மட்டுமே கவலை.
நக்கீரன் நக்கீரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக