வெள்ளி, 16 மார்ச், 2018

சிந்துசமவெளி திருவள்ளுவர் தொடர்பு கிமு குறிப்பு ரோம் ரோமாபுரி

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு

சிந்துவெளி நாகரிகத்தின் அகழ்வுகளில் தமிழ்க் குறட்பாக்களைக்கொண்ட முத்திரைகள் கிடைத்துள்ளதெனத் திருத்தந்தை ஈராசு பாதிரியார் சொல்லியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். இவற்றிற்கு மிகத் தெளிவான சான்றுகள் காட்டப்பட வேண்டும்.
பிரான்சா வேலென்டீன் (François Valentijn 1666-1727) எனும் டச்சுக் கிறித்துவச் சமயவூழியர் தாமெழுதிய Oud en Nieuw Oost-Indien எனும் நூலில் லூசியோ ஆன்னியோ செனெக்கா (Lucius Annaeus Seneca ~கி. மு. 4-கி. பி. 65) எனும் பண்டை உரோம மெய்யியலார் திருவள்ளுவரைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“Tiriwalluwir: One of their best prayer books, composed in clear and concise verses by Thiruwalluwer. Those who can read and understand him, can also understand the most difficult poets. This writer, according to the writings of Seneca, lived over 1500 years ago at Mailapore or San Thome” (François Valentijn’s Description of Ceylon, Translated and Edited by Sinnappahrasaratnam, The Hakluyt Society, London, 1978, p 61.)
வேலென்டீன் 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர். திருவள்ளுவர் 1,500 ஆண்டுகளுக்குமுன் மயிலார்ப்பூரில் வாழ்ந்தார் என்று அவர் சொல்வது, செனெக்கா வாழ்ந்த கி. பி. முதல் நூற்றாண்டுக்கு நெருங்கிவருகிறது. ஆயினும், “செனெக்காவின் நூல்கள் திருவள்ளுவர் 1,500 ஆண்டுகளுக்குமுன் மயிலார்ப்பூரில் வாழ்ந்தார்” என்றும்கூடப் பொருள்கொள்ளும் வகையில் வேலென்டீனின் பதிவு உள்ளது. இதனால், காலமயக்கம் எழுகிறது. செனெக்கா என்னதான் சொல்கிறார் என்பதனைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டுமாயின், இணையத்தில் கிடைக்கும் செனெக்காவின் நூல்களில் தேடி அவர் எந்த இடத்தில் திருவள்ளுவரைப்ப
ற்றிக் குறிப்பிடுகிறார் என்பதை முதலில் கண்டறிய வேண்டும்.
மேலும், திருக்குறளில் நிறைய இடைச்செருகல்கள் உண்டென ஆய்ந்தோர் சொல்கின்றனர். அது போன்ற இடைச்செருகல்களைக் குறிப்பறிந்த பின்னரே திருக்குறளின் காலத்தைக் கணிக்க வேண்டும். திருக்குறளில் பொதிந்துள்ள மெய்யியல் கருத்துகளை வைத்து, அந் நூல் கி. மு. 6 அல்லது 5ஆம் நூற்றாண்டினதாயிருக்குமெனக் கூறுவாருண்டு.
எப்படியாயினும், திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் கி. மு. 31 என்று தமிழறிஞர்கள் கூடி ஒருதலையாக முடிவுசெய்தது பெரும் பிழையென்பது அகன் அவர்களின் கருத்துமாகும்.
இந் நூல்
அறிஞர் குணா 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக