செவ்வாய், 13 மார்ச், 2018

குடகு பற்றி குறிப்பு காவிரி உற்பத்தி இலக்கியம் பொன்படு மலை மண்மீட்பு காவேரி தலைக்காவிரி


இவன் வாங்கும் அந்தணன்
விண்ணத்தாயன் வழங்கும் அந்தணன்
(காவிரியாற்றிலிருந்து பிரிந்து பாயும் ‘முடிகொண்டான் ஆற்றின்’ கரையில் இருக்கும் ஊர் பூச்சாற்றூர்.) இவ்வூரில் வாழ்ந்த அந்தணன் ‘கௌணியன் விண்ணத்தாயன்’ என்பவன். அவன் இருவகை வேள்விகள் செய்தான். ஒன்று நெய்யைத் தீயில் ஊற்றும் வேத-வேள்வி. மற்றொன்று கொடை-வேள்வி. புலவர் வேதவேள்வியைக் கண்ணால் பார்த்தார். கொடைவேள்வியைப் பெற்றார். அவன் தந்த கொடைவேள்விப் பொருள்களைத் தம் ஊருக்குக் கொண்டுசென்று துய்த்து மகிழ்வேன் என்கிறார். வழங்கிய அவன் இமயம் போலப் புகழ் பெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.    

  • விண்ணத்தாயனின் மூதாதையர் – நல்லது கெட்டது என்று தெளிவாக ஆராய்ந்து அறிந்தவர்கள். நீண்டுநிமிர்ந்த சடையை உடைய பிரமன் வழியில் தவறு நேராமல் ஒன்றுபட்டு வாழ்பவர்கள். அவர்கள் பின்பற்றிய நெறிநூல் ‘முதுநூல்’. அவை ஈரிரண்டு. (நான்கு வேதம்). அது வாழும் ஆற்றுநெறிகளைக் கூறுவது. அதில் 21 துறைகள் காட்டப்பட்டிருந்தன. அதன் நெறிகளோடு மாறுபட்டோரை இவனது மூதாதையர் வெல்லும் அறிவாற்றல் மிக்கவர். இவர்களின் வழிவந்தவன் இந்த விண்ணத்தாயன்.
  • இவன் தன் தொழிலைச் செய்வதற்காக பச்சைத் தருப்பைப் புல்லாலான பூணூல் அணிந்திருந்தான்.
  • இவனுக்குப் பல மனைவியர். அவர்கள் அவன் நெறிகளுக்கு மாறுபடாமல் நடக்கும் கற்பு வலையை அமைத்துக்கொண்டவர்கள். சிறிய நெற்றி, பெரிய அல்குல் (பாலுறவுறுப்பு), சில சொற்களே பேசும் பழக்கம், பலவாகித் தழைய்யிருக்கும் கூந்தல் ஆகியவற்றை உடையவர்கள். அவன் தொழிலுக்குத் தகுந்தவாறு செயலாற்றுபவர்கள்.
  • காடோ, நாடோ, ஈரேழ் இடங்களோ (கீழே 7, மேலே 7 = 14 உலகம்) எங்கும் இவன் வேள்வி செய்தான். தண்ணீர் போல நெய்யை ஊற்றிச் செய்தான். அதனால் தன் புகழைப் பரப்பியிருந்தான்.
  • அத்துடன் விருந்து வந்தபோது திருத்தமாகப் பேணினான். யாரும் புகமுடியாத தன் காப்பு இல்லத்தில் வழங்கினான். காலை வேளையில் வழங்கினான்.
இவற்றைத் தான் காணவேண்டும் என்றும், அவன் வழங்கியதைத் தன் ஊருக்குக் கொண்டுசென்று உண்ணவேண்டும், தின்னவேண்டும் என்று புலவர் விரும்பி வாழ்த்துகிறார்.

  • குடகு நாட்டுப் பொன்மலையின் இடி முழக்கத்தால் காவிரியில் நீர் பெருகும் நாட்டில் வாழ்பவன் இவன்.
  • இமயம் போல இவன் உயர்ந்தும் உதவியும் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.

பாடல்

நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது,
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்,
ஆறு உணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்,            5
மெய் அன்ன பொய் உணர்ந்து,
பொய் ஓராது மெய் கொளீஇ,
மூ ஏழ் துறையும் முட்டு இன்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக!
வினைக்கு வேண்டி நீ பூண்ட  10
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞாண்மிசைப் பொலிய;
மறம் கடிந்த அருங் கற்பின்,
அறம் புகழ்ந்த வலை சூடி,
சிறு நுதல்பேர் அகல் அல்குல்,                               15
சில சொல்லின்பல கூந்தல்நின்
நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர்
தமக்கு அமைந்த தொழில் கேட்ப;
காடு என்றா நாடு என்று ஆங்கு
ஈர் ஏழின் இடம் முட்டாது,             20
நீர் நாண நெய் வழங்கியும்,
எண் நாணப் பல வேட்டும்,
மண் நாணப் புகழ் பரப்பியும்,
அருங் கடிப் பெருங் காலை,
விருந்துற்ற நின் திருந்து ஏந்து நிலை,                                25
என்றும்காண்கதில் அம்மயாமேகுடாஅது
பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின்,
பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்,
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;                 30
செல்வல் அத்தையானேசெல்லாது,
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல,
நிலீஇயர் அத்தைநீ நிலம்மிசையானே?

திணை வாகைதுறை பார்ப்பன வாகை.
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

காலம் கி.முமூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பிஇரண்டாம் நூற்றாண்டு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக