வெள்ளி, 16 மார்ச், 2018

காமம் வகை பிரிவு இலக்கியம் இல்லறம் பாவாணர்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு Suresh N உடன்.
காமம் அதாவது ஒழுக்கம் பலவகை.. அதில் கைக்கிளை,பெருந்திணை பற்றி # பாவாணர் விளக்கம்....
அகப்பொருளின் எழு பிரிவுகள்:
1)குறிஞ்சி
2) முல்லை
3) மருதம்
4) நெய்தல்
5) பாலை
6)கைக்கிளை
7)பெருந்திணை
--------*---------
காமத்தை ஒருதலைக் காமம், இருதலைக் காமம், பொருந்தாக் காமம் என மூவகையாய் வகுத்தனர் முன்னோர்.
1.ஓர் ஆடவனும் பெண்டுமாகிய இருவருள், ஒருவர்மட்டும் காதலிப்பது ஒருதலைக் காமம்;
2.இருவரும் காதலிப்பது இருதலைக் காமம்;
3.யாரேனும் ஒருவர் நெறிதவறிக் காதலிப்பது பொருந்தாக் காமம்.
இவற்றுள் இருதலைக் காமமே சிறந்ததாகவும் நெறிப்பட்டதாகவும் கொள் ளப்பட்டது. பெற்றோரு-ம் மற்றோருமின்றித் தாமாகக் கூடுவதெல் லாம், பெரும்பாலும் இருதலைக் காமமாகவே யிருக்கும்.
காமத்தை அகப்பொருள் என்றும், ஒருதலைக் காமத்தைக் # கைக்கிளை என்றும், இருதலைக் காமத்தை அன்பின் ஐந்திணை என்றும், பொருந்தாக் காமத்தைப்
# பெருந்திணை என்றும் இலக்
கணம் கூறும். அன்பின் ஐந்திணையே நெறிப்பட்டதாகக் கொள் ளப்பட்டதினால் அதையே அகம் என்று சிறப்பித்தும், ஏனையிரண் டையும் அகப்புறம் என்று இழித்தும், கூறுவர் இலக்கணியர்.
கைக்கிளை, குறிப்பு என்றும் மணம் என்றும் இருவகையாய்ச் சொல்லப்படும். ஒருவன் காமவுணர்ச்சியில்லாத ஒரு சிறுமியிடம் அல்லது காதலில்லாத ஒரு பெண்ணிடம், சில காதற் குறிப்புச் சொற்களை மட்டும் தானே சொல்லியின்புறுதல் கைக்கிளைக் குறிப்பாம்.
பெற்றோராற் கூட்டப் பெற்ற கணவன் மனைவியருள், யாரேனும் ஒருவர் காதலில்லாமலே இசைந்திருப்பின் அது கைக்கிளை மணமாம். கைக்கிளை ஒருபக்கக் காதல். கை பக்கம். கிளை காதல்.
ஒரு பெண்ணை மணவுறவுமுறை தப்பியோ, வலிந்தோ, ஏமாற்றியோ, தூக்க நிலையிலோ, நோய் நிலையிலோ, இறந்த பின்போ பூப்பு நின்ற பின்போ கூடுவதும், தன்பாலொடும் விலங் கொடும் கூடுவதும், பெருந்திணையாம்.
இது இங்ஙனம் பலவகை யாய்ப் பெருகியிருப்பதாற் பெருந்திணை யெனப்பட்டது.
தமி ழுக்குச் சிறப்பான பொருளிலக்கணம் ஆரிய வருகைக்கு எண் ணாயிரம் ஆண்டுகட்கு முன்பே அமைந்துவிட்டதனால், ஆரிய வொழுக்க நூல்களிற் சொல்லப்பட்ட எண்வகை மணத்துள்தான் ஒன்றே நால்வகை பெற்றதினால் பெருந்திணையெனப்பட்ட தென்பது, காலமலைவும் நூன்மலைவுங் கலந்த பெருவழுவாம்.
(நூல் :பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்,பக்கம் ,56,57: பாவாணர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக