திங்கள், 19 மார்ச், 2018

நாட்காட்டி தக்கார் அவையம் புத்தாண்டு நோன்பு 17

aathi1956 aathi1956@gmail.com

16/12/17
பெறுநர்: எனக்கு
   மரபு வழித் தமிழ்த்தேசியத் தக்கார் அவையம்

17-ஆம் பதிவு

தொடர் பதிவு எண் - 51           நாள்: 15.12.2017

தொடர் நாள்: 349

------------------------------------------------------------------------------------------------------

தமிழ்த் தேசியத் தமிழ்ப்புத்தாண்டு நாள் அறிவிப்பு:-

பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இன்று 15.12.2017 கடை ஏழு நாட்களின் முதல் நாள். இன்றிலிருந்து சரியாக  ஏழு நாட்களில் இவ்வாண்டு முடியவிருக்கிறது. அந்த நாள் 21.12.2017 ஆகும். அன்றைய தொடர்நாள் சரியா   க 355. 22.12 .2017-ல்  வளர்பிறை 4-ஆம் நாளில் இனிதே கதிரவனின் நிழல் வடக்கு நோக்கித் திரும்ப தமிழ்த் தேசியத் தமிழ்ப்புத்தாண்டு வானவியல் அடிப்படையில் பிறக்கிறது.

நோன்பு:-

·         ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் கடையேழு நாட்களின் நோன்பு என்பது மாற்றமில்லாத மரபாகப் பயிலப்பட்டு வந்திருக்கிறது.

·         சனிக்கிழமை என்ற ஒன்றே இல்லாத பழந்தமிழர் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமையில் முடியும் இந்த நோன்பு. நடுவில் மறைநிலவை செவ்வாய்க் கிழமையில் பொருத்தி நிறைவில் மூன்றாம் பிறையை மேற்கு வானில் முதல் தோற்றமாகவும், ஏர் வண்ணம் எனும் அழகிய தோற்றமாகவும் கண்டு அந்தந்த மாதத்தை நறுக்கிக் காட்டியிருக்கிறது.

·         12 நோன்புகளில் ஓராண்டை, ஓர் ஆட்டையை நிறைவு செய்த பழந்தமிழர் 12வது நோன்பில் கதிரவனின் நிழல் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதையும் உறுதி செய்தனர். இன்று அத்தகைய அறிகுறி தென்படுகிறது.

·         கடந்த 05.01.2014 முதல் 21.12.2017 வரை 1447 நாட்களில் 49 கடையேழு நாட்கள் அமைந்த்துள்ளன. ஆண்டின் உட்கூடு  353, 356, 354, 29, 355 நாட்களில் அமையப் பெற்றுள்ளன. மூன்று ஆண்டுகளும் ஒரு தொங்கல் மாதமும் இன்னொரு ஆண்டும் ஆக அனைத்தும் கடையேழு நாட்களால் முறையாக நறுக்கப்பட்டவை ஆகும்.

·         கடந்த நான்கு ஆண்டுகளும் ஆண்டின் முதல்நாள் வளர்பிறை 4-ஆம் நாளில் பொருந்தியிருக்கிறது. அதே முறையில் பிறக்கவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வளர்பிறை 4-ஆம் நாளில் அமையவிருக்கிறது.







வசப்பட்டது வாய்ப்பாடு:-

            கடந்த 4 ஆண்டுகால முயற்சியில் ஆண்டு நாட்களைக் கணக்கிடும் வாய்ப்பாடு வசப்பட்டு இருக்கிறது. முழுநிலவுகளில் சில தடுமாறுவதும் ஆண்டு நாட்களில் சில குறைவதும் கண்டு கொள்ளப்பட்டுள்ளது.

            புத்தாண் டினை அறிவிப்புச் செய்து அரசே முரசறைந்து கொண்டாட வேண்டிய தகுதியை இன்று தமிழினம் முற்றாக இழந்து நிற்கிறது. ஆயினும் தனது மதிநுட்பத்தால் இனஅறிவின் வலிமையினால் வாய்ப்பாட்டை முதற்கட்டமாக மீட்டெடுத்திருக்கிறது என்று எடுத்துச் சொல்வதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் மகிழ்ச்சி அடைகிறது.

            இது பற்றித் தமிழ் இனத்தாரோடும், தமிழ் இன நலம் விரும்பிகளோடும் நெருக்கமான கருத்துப் பகிர்வை அக்கறையுடனும் முழு விழிப்புடனும் செய்து வந்திருக்கிறது.

            12 நாட்களின் விழாத்தொகுதியுடன் ஒவ்வொரு மாதமும் சீற்றத்துடன் மஞ்சு விரட்டுக் கூட்டித் தொடங்குவதும், 12வது நாளில் முழுநிலவின் பயன் கொள்வதும், 7 நாட்களின் நோன்பில் ஒவ்வொரு மாதமும் நறுக்கப்படுவதும் நிலவுகளை ஒழுங்கு செய்து ஆட்டையை நேர்த்தி செய்து பெருவெற்றி கண்டு கொற்றம் எய்துவதும் ஆன தமிழர்களின் அரச மரபு, இலக்கியங்களின் வாயிலாகவும், பெருங்கலைகளின் வாயிலாகவும், நூல் மரபாகவும் இந்த வாய்ப்பாட்டு அறிவை விட்டுச் சென்றிருக்கிறது என்று புரிந்து கொள்ளும் போது பெருமிதம் ஏற்படுகிறது.

            அந்தப் பெருமிதம் தெளிந்து வரும் தமிழர் இறையாண்மை என்று போற்றப்படும் தகுதியுடையது ஆகும். ‘தை முதல் நாள் என்பது’ தமிழர்களின் வாழ்வில் அரசத் தகைமையுடையது என்று அடித்துச் சொல்லப் போதுமான சான்றுகள் கிடைத்துள்ளபடியால் வரவிருக்கும் தமிழ்ப் புத்தாண்டினைத் தமிழ்த் தேசியத் தமிழ்ப்புத்தாண்டு என்று பெயரிட்டு அறிவிப்பதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் பெருமையடைகிறது.



அறிவிப்பு:-

§  15.12.2017-ல் கடையேழு நாள் நோன்பு வழக்கம் போலத் தொடங்குகிறபடியால் 18.12.2017- ல் மறைநிலவு நாளில் விளக்கேற்றி அவரவர் மனையுறை அணங்கைப் போற்றி 21.12.2017-ல் மேற்கு வானில் பிறைத் தோற்றம் கண்டு நோன்பை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அன்றே போகியும் ஆகும்.

§  15.12.2017-ல் கைக்குத்தல் அரிசியை ஊற வைத்து எழுநாள் அந்தியில் அதன் கழுநீரை கலம் மாற்றி, 22.12.2017 அன்று காலைக் கதிரவனுக்குப் பொங்கல் இட உலை நீராக்கி, அதன் நாற்றம் தோன்றச் செய்து காத்திருக்கும் முன்னோர் நினைவு அலைகளுக்குப் பொங்கல் இட்டு படையல் இடவேண்டும்.

§  தமிழக அரசின் நடப்புச் சட்டம் தமிழ்ப்புத்தாண்டினைச் சித்திரைத் திங்கள் முதல் நாள் என்று சுட்டுவதாலும், அதனை மறுப்போர் தைத் திங்கள் முதல் நாள் என்று சுட்டுவதாலும் மயங்கிய தமிழர்கள், பழந்தமிச் சான்றுகளின் உதவியுடன் தமிழ்த் தேசியர்கள் செதுக்கி எடுத்த தமிழ்ப் புத்தாண்டை வரவேற்றுத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் அன்புடன் வேண்டுகிறது.



22.12.2017-ல் தொடங்கவிருக்கும் தமிழ்ப்புத்தாண்டு, ஆண்டு நாட்களின் சரிவுக் காலத்துப் புத்தாண்டு என்ற மன வலி ஒரு புறம் இருக்கிறது. ஆயினும் எவ்வுயிரையும் நேசித்த பழந்தமிழர்களின் இன வலிமையின் மீது நம்பிக்கை கொண்டு நல்லனவற்றை வரவேற்போம், வருவதை எதிர்கொள்வோம் என்று உறுதி ஏற்போம்.



ஏறு தொழூ உப்புகுத்தல்:-

            தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளே மஞ்சு விரட்டின் முதல் நாளும் ஆகும். அதனால் தமிழர் மரபின் மறப்பண்பு மாறாக் கொல்லேறுகளை அந்த நாளில் போற்றுவது தமிழர்களின் அரசக் கடமையாகும்.



            இனிதே பொலிக! தமிழ்த் தேசியத் தமிழ்ப் புத்தாண்டு!



இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்அவையத்தின் வெளியீடு

___---ooo000OOO000ooo---___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக