திங்கள், 19 மார்ச், 2018

குழந்தை பாலியல் வல்லுறவு எந்த நடவடிக்கையும் இல்லை போலீஸ் காவல்துறை காமக்கொடூரன் பட்டியல்

aathi1956 aathi1956@gmail.com

17/12/17
பெறுநர்: எனக்கு

2010 கோவை மார்வாடி ரஞ்சித்குமார் ஜெயினுடைய குழந்தைகளை கொன்ற மோகன்குமாரை நோக்கி வெடித்த தமிழக போலீசாரின் துப்பாக்கிகள்

அதற்கு பின் எந்த தமிழ் குழந்தைகள் கொலையிலும் வெடிக்கவே இல்லை அதன் நீட்சியே

விழுப்புரம் மாணவி நவீனாவை சீரழித்த செந்தில்

ஆரணியில் மாணவி சித்ராவை போதை ஊசிபோட்டு கூட்டு பலாத்காரம் செய்த டாக்டர் ஜெயபிரகாஷ் அவன் உதவியாளர்

2016ல பென்னாகரம் கோவிந்தராஜ் குடிபோதையில் பெற்ற மகளையே பாலியல் வல்லுறவு செய்தான் (இந்த நாய் அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர்)

சென்னைல 6வயது ஹாசினியை சீரழித்த அயோக்கியன் தஷ்வந்த் அவன் அம்மாவையும் கழுத்தறுத்து கொல்ல தைரியம் தந்தது

(இந்த எச்சையை நம்ம மானமிகு ஊடகங்கள் இன்னும் அவர் இவர் என்றே குறிப்பிடுகிறது)

உச்சமாக நேற்று திண்டுக்கல் அருகே 4வயது குழந்தையை சீரழித்து கல்லால் அடித்து கொலை செய்த ராம்குமார் (இந்த போறம்போக்கு நாய் ஏற்கனவே சீர்திருத்த பள்ளியில் இருந்தவனாம்)

கடந்த சில வருடங்களாகவே பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளின் கேஸ் ஹிஸ்டரிகளை புரட்டி பார்த்தால் மயக்கமே வருகிறது. பெரும்பாலும் குழந்தைகள் பள்ளி மாணவிகளே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பல சம்பவங்கள் வெளியே வருவதே இல்லை மறைக்கப்படுகிறதெனில் நீதித்தறையும் அரசும் காவல்துறையும் வெட்கி தலைகுனிய வேண்டும்.

டூவீலர்ல வரவன்கிட்ட லைசென்ஸ் இல்லைனா வரும் கோபத்துல ஒரு சதவீதம் இந்த கயவர்களிடம் காட்டினாலே போதுமே.

பச்சிளம் குழந்தைகளையும் பார்த்து காம உணர்வு வருகிறதெனில் அவர்கள் எப்படிப்பட்ட சூழலில் வளர்கிறார்கள்.

எங்கே தவறு நடக்கிறது, யாரும் இதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வில்லையே ஏன்?

உலகத்துக்கே நாகரீகத்தை கற்றுத்தந்த தமிழ் சமூகத்தின் பேரழிவை கண்முன்னே காண்கிறோம்.

பல கொடுமைகள் சாதிய போர்வையால் மத முகமூடிகளால் அரசியல் பலத்தால் எச்சை லஞ்சப்பணங்களால் மறைக்கப்படுகிறது.

அதையும் மீறி வழக்கு நடத்த வேண்டுமெனில் யாருக்கு தைரியம் வரும்.

எல்லாவற்றையுமே சர்வ சாதாரணமாக கடந்து போகிறோம். பெங்களூரில் ரெயின்போ பள்ளியில் நடந்த சிறுமி பாலியல் வன்முறையில் அம்மக்கள் ஆற்றிய எதிர்வினை இன்றுவரை அவர்களை காக்கின்றது.

தமிழர்களின் தோல் தடித்துக்கொண்டே வருகிறது, சகிப்புத்தன்மை என்ற போர்வையில் அனைத்துமே நாம் கடந்து செல்கிறோம்

நாம்தான் இவ்வாறெனில் நேர்மையான பலநூறு அதிகாரிகளை கொண்ட நம் காவல்துறையின் துப்பாக்கிகளும், லாட்டிகளும் கூட வலுவிழந்து மௌனித்து போனது ஏன்???



வடிவேல் சுப்ரமணியம்.


அராஜகம் அலட்சியம் காவல்துறை மது குற்றவாளி சாராயம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக