வெள்ளி, 16 மார்ச், 2018

பங்களர் இலக்கியம் கள்ளர் வன்னியர் பட்டம் மண்மீட்பு வடக்கெல்லை

aathi1956 aathi1956@gmail.com

25/11/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு Suresh N உடன்.
பங்களவர்_கள்ளர் குல
# வன்னிய_மாதேவன் &
கங்கர்,கட்டியர்,பாணன்(வாணதிராயர்) தகவல்கள்....
அகநானூறு 44ஆம் பாட்டில் சோழனுக்கும் சேரனுக்கும் நடந்த போரில் பல சிற்றரசர்கள் சேரனுக்கு துணையாக இருந்தனர் என்றும், அவர்களுள் கட்டி என்ப வனும் ஒருவன் என்றும் அறியக் கிடைக்கின்றது.
குறுந்தொகை கூறும் கட்டியும், அகநானூறு கூறும் கட்டியும் ஒருவனே என்பது ஆராய்ச் சியில் விளங்குகின்றது. கட்டியரசர் கொங்கு நாட்டின் பகுதியை ஆண்டனர்.
அன்றியும், சேரனுக்கு உதவியாகச் சென்றவர்களுள் கங்கன் என்பவனும் கூறப்படுகின்றான் (அகம்.....) இந்தக் கங்கன் என்பவனும் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்த நாட்டினை அரசாண்ட ஒரு சிற்றரசன் ஆவான்.
சிலப்பதிகாரம் கட்டி, கங்கன் என்பவர்களைக் கட்டி கங்கர் என்று இரண்டு குழுவினராகக் கூறுகின்றது. பங்களர் என்பவர் பங்கள நாட்டை ஆண்டனர். பங்கள நாடு இப்போதை சித்தூர், வட ஆர்க்காடு மாவட்டங்களில் இருந்தது. இது வங்காள நாடு என்னும் வங்கம் அன்று.
சிலப்பதிகாரம், காட்சிக் காதை 157ஆம் அடியில் “பங்களர் கங்கர் பல்வேற்கட்டியர்” என்று பங்களரைக் கூறுகிறது.
பங்களரும் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தனர். பங்களர், கங்கர், கட்டியர் ஆகிய இவர்கள் தமிழ் நாட்டின் வடவெல்லையில் இருந்தவர் என்பதற்குச் சாசனச் சான்றுகள் உள்ளன.
“பாணன் நன்னாட் டும்பர்”
(அகம்., 113:17)
என்றும்,
“பல்வேற் பாணன் நன்னாடு” (அகம்., 325:17)
என்றும்,
கூறப்படுகிற வாணாதிராயரின் நாடும், தமிழகத்தின் வட வெல்லையில் இருந்ததாகும்.
எனவே, பங்களர், கங்கர், கட்டியர், பாணர் (வாணாதிராயர்) ஆகியோர் தமிழகத்தின் வடவெல்லையில் இருந்தவர் என்பது தெரிகின்றது.
இதுகாறும் ஆராய்ந்தவற்றால், வேங்கடமலைமட்டும் தமிழகத் தின் வடவெல்லை அன்றென்றும், மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த ஏழில்மலையும் ஓர் எல்லையென்றும், இம்மலைகளுக் கிடையில் இருந்த நாடுகளில் கங்கர், பங்களர், கட்டியர், பாணர்(வாணதிராயர்) முதலியோர் வாழ்ந்து வந்தனரென்றும், இவர்கள் வாழ்ந்த நாடுகள் தமிழகத்தின் வடவெல்லையாக இருந்தனவென்றும் அறிய முடிகிறது...
@# மயிலை_சீனு_வேங்கடசாமி ....
பண்டைய தமிழக வணிகம் நகரங்கள் மற்று பண்பாடு.. நூல் பக்கம் 243,244...
++++++
எனது கடைசி பதிவில் பங்களவர் தங்களை #வன்னிய_மாதேவன் என குறிப்பிடும் கல்வெட்டு சான்றுகள் பதிவிட்டுள்ளேன் எனவே பங்களவர் என்பாரை சங்கநூல் குறிக்கிறது,மற்
றும் அப்பங்களவர்க்கு வன்னிய மாதேவன் பட்டமுள்ளதும் அப்பங்களவர் தன்னை கள்ளர் எனக்குறிப்பிட்ட
ுள்ளதும் கவணிக்கவேண்டிய சான்றுகளாகும்.....(பின்னூட்டத்தில் லிங்க் பதிகிறேன்)
மேலும் வேங்கட மலை ஆண்ட கள்வர் கோமான் புல்லி பற்றிய சங்கப்பாடல்களையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்...
(பின்குறிப்பு>>வாணர் என்பாரது திரிபு பெயரான பாணன் என்பதும், இசைக்குடி பறையரின் பாணன் என்பதும் வெவ்வேறு என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன்)
20 நிமிடங்கள்

மயிலை சீனி கங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக