வியாழன், 29 மார்ச், 2018

ஹார்வர்டு பல்கலை தமிழ்மொழி இருக்கை 32 லட்சம் நன்கொடை வெங்கடாச்சலம் மொழிப்பற்று தமிழன்டா சாதனை

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 3
பெறுநர்: எனக்கு

Posted Date : 14:46 (03/01/2018) Last updated : 16:29 (03/01/2018)
ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு 32 லட்ச ரூபாய்! - நட்பில் நெகிழ வைத்த முன்னாள் வங்கி அதிகாரி
ஆ.விஜயானந்த்



ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக முன்னாள் வங்கி அதிகாரி ஒருவர் 32 லட்ச ரூபாய் நன்கொடை அளித்திருப்பது தமிழ் ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சென்னையில் நடந்த தமிழ்ப் பண்பாட்டு விழாவில்தான் இந்தத் தொகையை அளித்தார் ரவி வெங்கடாச்சலம். நட்புக்காக அவர் தாராளம் காட்டியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.


Advertisement


இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

`கொடுத்தது 4; மறைத்தது 9' - ஜெயலலிதா சிகிச்சை வீடியோக்களில் என்ன இருக்கிறது?  #VikatanExclusive

தொடரும் காப்பீட்டுக் குளறுபடி... கதறும் விவசாயிகள்!

எலி கடித்த உணவுகளைச் சாப்பிடலாமா? #healthAlert
அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த ஓராண்டு காலமாக தமிழ் இருக்கைக்கான பணிகளில் கடுமையாக உழைத்து வருகின்றனர் அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன் ஆகியோர். இதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் கலைநிகழ்ச்சி, தனிப்பாடல் என அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்களும் குழந்தைகளும் தங்களது சேமிப்பை வாரிக் கொடுக்கும் நெகிழ்ச்சித் தருணங்களும் அரங்கேறி வருகின்றன.

தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஆகும் தொகையில் 10 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கிவிட்டது. இதுதவிர, தமிழ் ஆசிரியர்கள் சங்கம், சர்வதேச தமிழ் அமைப்புகள் ஆகியவை நிதி திரட்டும் பணியில் இறங்கியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மேற்கு வங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன், தன்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து 25 லட்ச ரூபாயை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக அனுப்பினார். ‘இந்தியாவிலேயே தனி ஒரு நபராக ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு மிகப் பெரிய தொகையை அளித்த நபர்’ எனப் பாராட்டப்பட்டார் பாலச்சந்திரன். இந்நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடந்த தமிழ்ப் பண்பாட்டு விழாவில் முன்னாள் வங்கி அதிகாரி ரவி வெங்கடாச்சலம், 32 லட்ச ரூபாயை ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு அளிப்பதாக அறிவித்தார். மறுநாளே முழுத் தொகையையும் ஹார்வர்டு கணக்குக்குச் செலுத்திவிட்டார்.


Advertisement


ரவி வெங்கடாச்சலத்திடம் பேசினோம். “எங்களுடைய குடும்ப பாரம்பர்யத்தில் வந்தவர்கள் எல்லாம் தமிழின் மீது மிகுந்த காதல் கொண்டவர்கள். கொல்கத்தாவில் நான் வேலை பார்த்த நாள்களில், அங்குள்ள தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் செலுத்தி வந்தேன். ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நிதி திரட்டுவதைக் கண்ட என் மகன் மனோகர், ஐந்தாயிரம் டாலர்களைக் கொடுத்தார். அடுத்து வந்த நாள்களில் என்னுடைய நீண்டகால நண்பர் பாலச்சந்திரன், 25 லட்ச ரூபாய் நிதி அளித்த தகவலை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும்' என்ற எண்ணத்தில் இருந்தேன். தமிழ்ப் பண்பாட்டு விழாவில், 'நானும் 25 லட்ச ரூபாய் நிதியளிக்கிறேன்' என அறிவித்தேன். என்னுடைய மகன் மனோகர், மருமகள் புவி மனோகர் ஆகியோரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். மறுநாள் காலையிலேயே ஹார்வர்டு கணக்கில் 25 லட்ச ரூபாயைச் சேர்த்துவிட்டேன். இதுவரையில் எங்களது குடும்பத்திலிருந்து மட்டும் 32 லட்ச ரூபாயைக் கொடுத்திருக்கிறோம். தமிழ் இருக்கைக்காக, எங்கள் குடும்பத்தின் மிகச் சிறிய பங்களிப்பு இது” என நெகிழ்ந்தார்.
இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரனிடம் பேசினோம். “தமிழ்ப் பண்பாட்டு விழாவில் இப்படியோர் அறிவிப்பை ரவி வெங்கடாச்சலம் வெளியிடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவரது தரப்பிலிருந்து மட்டும் 32 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஹார்வர்டு கணக்கில் சேர்த்திருக்கிறார். தமிழ் இருக்கைக்காக இப்படியோர் ஆரோக்கியமான போட்டி நடப்பது நெகிழ வைக்கிறது. அதேநிகழ்வில், யாமினி என்ற மாணவி உண்டியலில் சேர்த்து வைத்த இரண்டாயிரம் ரூபாயைத் தந்ததும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. தற்போது வரையில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான மொத்த நிதியான 60 லட்சம் டாலரில் 53 லட்சம் டாலர்கள் சேர்ந்துவிட்டன. இன்னும் இந்திய ரூபாய் மதிப்பில் நான்கரை கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த இலக்கை வரும் நாள்களில் எட்டிவிடுவோம் என உறுதியாக நம்புகிறேன்" என்றார் உற்சாகத்தோடு

https://www.vikatan.com/news/tamilnadu/112551-exbank-officer-donated-32-lakhs-rupees-to-harvard-tamil-chair.html
ரவி வெங்கடாச்சலம்

தமிழன்டா சாதனை  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக