திங்கள், 19 மார்ச், 2018

ஹிதேந்திரன் இதயம் வாங்கிய சிறுமி மரணம் அக்கு மருத்துவம் கார்ப்பரேட் தானம்

aathi1956 aathi1956@gmail.com

11/12/17
பெறுநர்: எனக்கு
ஹிதேந்திரன் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி சாவு
ஹிந்திரன் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி, துரதிர்ஷ்டவசமாக நேற்று இறந்தாள்.
பெங்களூரை சேர்ந்தவர் சேகர், டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அபிராமி (9). இவள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதற்காக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த ஒரு விபத்தில் மூளை செயலிழந்த திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மாணவன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை அவனது பெற்றோர் தானமாக வழங்கினார்கள். இதில், ஹிதேந்திரனின் இதயம் அபிராமிக்கு பொருத்தப்பட்டது. இதனால் சிறுமி உயிர் பிழைத்தாள். அதன்பிறகு உடல் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டது.
அதன்பின், மூளை செயலிழந்த பலரின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க, அவர்களது உறவினர்கள் முன் வந்தனர். இந்நிலையில், சிறுமி அபிராமிக்கு மீண்டும் இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சேர்க்கப்பட்டாள். சிறுமி அபிராமியின் இதயத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி நேற்று இரவு 8 மணிக்கு அபிராமி பரிதாபமாக இறந்தாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக