திங்கள், 19 மார்ச், 2018

மறவர் கள்ளர் பெண்கள் மறுமணம் சான்று பெண்ணுரிமை திருமணம்

aathi1956 aathi1956@gmail.com

16/12/17
பெறுநர்: எனக்கு
பதிவு;Purushoth Nazzi Menon
சமூக இயங்கியல்
குறிப்பிட்ட சில வருடங்கள் முன்புவரை விதவை மறுமணம் எவரும் செய்ததில்லை ஆனால் தமிழகத்தில் இரு சமூகங்கள் விதவை மறுமணம் செய்யும் பழக்கம் கொண்டவை அப்படி மறுமணம் செய்த பெண்களை இன்று புரட்சி பேசும் சமூகங்கள் உட்பட அனைத்தும் அறுத்துக்கட்டும் கூட்டம் என பேசியும் முண்டச்சிக்கு ஆசை போகவில்லை எனவும் கீழ்த்தரமாக விமர்சித்தும் வந்தன அதற்காக எம் முன்னோர்கள் கவலைப்படவில்லை ஏனெனில் எம் சமூகத்தின் இயங்கியல் பெண்களை வைத்தே ஆகையால் அவர்கள் மூன்றுமுறை விதவையானாலு நான்காவது முறையும் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர்.
அதேப்போல அதே சமூகத்தில் விவாகரத்து செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு, குடிகாரனாகவோ சுயநலக்காரனாகவோ இருந்தால் அந்த பெண்ணே விவாகரத்து கோரலாம், விசாரித்துவிட்டு விவாகரத்து கொடுப்பார்கள் பிறகு திருமணமும் செய்து வைப்பார்கள். அந்த பெண்களை மறைமுகமாக தேவரடியாள் என விமர்சித்ததும் இன்று புரட்சி செய்யும் சமூகங்களே.
இந்த இரண்டு உரிமைகள் மூலமே வரதட்சணை கொடுமை, முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது காரணம் விவாகரத்து கேட்டு உறவை முறித்துக்கொள்ளலாம். அப்போதெல்லாம் நீதிமன்றங்களோ, வழக்கறிஞர்களோ குறிப்பாக இந்த புரட்சி பேசுபவர்களோ கிடையாது ஆனால் பெண்ணுரிமை பாதுக்காக்கப்பட்டது இந்த சமூகத்தில்.
இது ஒரு சமூகத்துக்கான இயங்கியல் இதேசமூகம்தான் தன் உறவுகளை மாற்று இனத்தில் கொடுக்கக்கூடாது என்றும் வரையறுத்து வைத்துள்ளது இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமெனில் ஒரே சமூகத்திலேயே பல உட்பிரிவுகளுக்குள் சம்மந்தம் வைத்துக்கொள்வதில்லை.
இதில் உயர்ச்சி தாழ்ச்சி கிடையாது எப்படியென்றால் அனைத்து சமூகங்களும் எம்மை திருடர்கள் என்று ஒதுக்கியபோதும் எங்களுடைய சமூக இயங்கியலை உடைத்துக்கொண்டு தங்களை புனிதராக காட்டி மாற்றினத்தினரிடம் சம்மந்தம் செய்து எங்களை உயர்த்திக்கொள்ளவில்லை மாறாக நாங்கள் நாங்களாகவே இருந்து குற்றத்திலிருந்து வெளிவந்தோம்.
வெளியில் இருந்து புரட்சி பேசுபவர்களுக்கு இதுவெறும் நாகரீக புரட்சி ஆனால் எம் சமூகத்திற்கு இதுதான் இயங்கியல், வாழ்வியலில் அவர்களுக்கு அவர்களே வகுத்துக்கொண்ட கட்டுப்பாடுகள், இதனுள் சாதிவெறி கிடையாது ஏனெனில் மாற்றுச்சமூகத்தில் வெட்டிக்கொண்டு செத்தவர்களைவிட ஒரே சமூகத்தில் வெட்டிக்கொண்டு செத்தவர்கள் அதிகம் ஆனால் ஊடகம் அதையெல்லாம் காட்டாது ஏனெனில் அரசியல் செய்ய இயலாது.
எம்முடைய நற்பண்புகளை பாராட்டாத இச்சமூகம் தற்போதைய நாகரீக கலாச்சாரத்தில் தவறாக தெரியும் ஒரு பண்பை விமர்சிப்பதில் எமக்கு எந்த குறையும் வரப்போவதில்லை.
இன்று கலப்பு மணங்கள் முற்றிலுமாக நடக்கவில்லை என யாராலும் கூறமுடியாது ஆனால் பழமை மாறாத பழங்குடி மக்களால் இந்த நாகரீக மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ளமுடிவதில்லை அதன் வெறுப்புணர்வே இந்த கொலைகள்.
அதற்காக நான் கொலையை நியாயப்படுத்தவில்லை எதற்காக செய்தாலும் கொலை கொலையே அதற்கான தண்டனைகள் கொடுக்கவேண்டும் அது மரண தண்டனையாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அதே தண்டனை அனைத்து கொலைகளுக்கும் கொடுக்கவேண்டும் என்பதே எம்முடைய இந்த தீர்ப்பின் முரண்.
தூக்கினால் முழுமையாக நாகரீகமடைந்தவர்கள் வேண்டுமானல் பயந்திருக்கலாம் ஆனால் பழங்குடியினர்கள் மாறப்போவதில்லை.
அனைவரும் சமத்துவத்திற்கு ஆதரவானவர்களே ஆனால் சுவிட்ச் போட்டவுடன் விளக்கு எரிவதுபோல் மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாது சமூகத்தில் சேர்ந்து மனமாற்றத்தை உருவாக்கிடவேண்டும்
என்னை புனிதராக காட்டிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை அதேசமயம் இதனை நியாயப்படுத்தவும் பதியவில்லை ஏன்னா ஒரே வார்த்தையில் இப்படிதான் நடக்கும்னு சொன்னால் யாரும் ஒன்றும் அசைக்கப்போவதில்லை ஆனால் என்னுடைய வாழ்வியலை வெளிப்படுத்தவே இப்பதிவு.
பின்குறிப்பு - இந்த விளக்கம் உண்மையாகவே சமத்துவம் விரும்புபவர்களுக்ககாக மட்டுமே, மற்ற புரட்சி புடலங்காய்களுக்கும் பிராஜக்ட் ஒனர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் இடது கையின் நடுவிரலை உயர்த்தி எமக்கும் இந்த கொலைகள் ஒரு பிராஜக்ட் என்பதே.

Aathimoola Perumal Prakash
தமிழகத்தில் இரு சமூகங்கள் விதவை மறுமணம் செய்யும் பழக்கம் கொண்டவை//
எந்த சமூகங்கள்?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · நேற்று, 03:33 PM க்கு

Purushoth Nazzi Menon
கொண்டயங்கோட்டை மறவர், பிறமலைக்கள்ளர்
2 · விரும்பு · புகாரளி · நேற்று, 06:31 PM க்கு

Aathimoola Perumal Prakash
சான்று எதுவும்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 11 மணி நேரம் முன்பு

Purushoth Nazzi Menon
இது தென்னிந்திய மக்களும் குலங்களும் குடிகளும் புத்தகம் அதாவது ஆங்கிலேயர் குறிப்புளை தமிழில் மொழி பெயர்த்தனர்.
ஆங்கிலேயர் குறிப்பு Martial races குறிப்பு Military Gazette என அனைத்திலுமே மறவர் கள்ளரை குறிப்பிடும்போது விதவை திருமணத்தை முதலாகவே குறிப்பிடுவார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக