செவ்வாய், 13 மார்ச், 2018

பாண்டியர் நாடு எல்லைகள் இலக்கியம் கம்பர்

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு

சுரேஷ் தேவர் சாேழநாடு , 4 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
# பதிவு_1
# பாண்டிய_நாட்டு_எல்லை :
3ஆம் குலோத்துங்கச் சோழன் ( 1178-1218 ) அவைக்களப் புலவராயிருந்த கம்பர்,
சேர,சோழ,பாண்டி,தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்:
"வெள்ளா றதுவடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார
ஆண்ட கடல்கிழக்கா மைம்பத் தறுகாதம்
பாண்டிநாட் டெல்லைப் பதி."
1.வடக்கு எல்லை - புதுக்கோட்டை மாவட்ட வெள்ளாறு நதி,
2.தெற்கு எல்லை - குமரி கடல் (ஒருகால் பண்டை குமரி ஆறாயும் இருக்கலாம்)
3.மேற்கு எல்லை -மதில்கரை எல்லைச்சுவர்(திண்டுக்கல்-திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளது)
4.கிழக்கு எல்லை- வங்க கடல்.
பாண்டிய நாட்டு எல்லைப் பற்றைய விரிவான விளக்கம்:
1.வடக்கெல்லை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - சிறுமலை - பிரான்மலை - வடவெள்ளாறு
2.மேற்கெல்லை - பெருவழி - தென்பொதிகை - திண்டுக்கல் - காரைக்காடு (திண்டுக்கல் - நத்தம் எல்லை)
3.கிழக்கெல்லை - சேது (கடல்)
4.தெற்கெல்லை - குமரி (கடல்)
19 நவம்பர், 04:27 PM ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக