வெள்ளி, 16 மார்ச், 2018

விவசாயம் பொருளாதாரம் மழை சேகரிப்பு யோசனை புதுமுயற்சி

aathi1956 aathi1956@gmail.com

25/11/17
பெறுநர்: எனக்கு

Kumarimainthan
5. துண்டுதுண்டாகக் கிடக்கும் நிலங்களை ஒன்றிணைத்து கூட்டாண்மைப் பண்ணைகளை உருவாக்க வேண்டும். நில உடைமையாளர்களை நிலப்பரப்புகள், அவற்றின் தரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் முதலிடுவோரின் தொகை அடிப்படையிலும் பங்கு முதலீட்டாளர்களாகக் கணக்கிட்டுப் பங்கு நிறுவனமாகப் பண்ணையை உருவாக்க வேண்டும். கால்நடை வளர்ப்பு, நீர்வளம் - மண்வளத்துக்கேற்ற பயிர்களையிட்டு அவற்றை முடிந்த, பகுதிமுடிந்த பண்டங்களாக மேம்படுத்தி நிறுவனப் பெயரிட்ட பொட்டணங்களாக்கிச் சந்தைக்கு விட வேண்டும். 10 நூற்றுமேனி காடு வளர்க்க வேண்டும். மட்காத குப்பைகளால் ஒரு சிறு குன்று உருவாக்கி அதில் முருங்கை, இலவு போன்ற மரங்களை நட்டு அது மழைநீரைப் பிடித்துவைத்துக் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தினுள் இறங்க வகை செய்ய வேண்டும். ஒரு சிறு குளமும் அமைக்க வேண்டும். எந்தப் பொருளையும் எரித்தழிக்கக் கூடாது, மறுசுழற்சி செய்ய வேண்டும்.. வேளாண்மைக்கு இடையூறு செய்யும் எலிகளையும் முயல்களையும் பிடித்து அவற்றின் இறைச்சியைச் சந்தைக்கு விட வேண்டும். தொழிலாளர்களுக்க
ு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில் பண்ணை செயல்பட வேண்டும். பணியாளர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பண்ணையிலும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்ணைகள் இணைந்து மழலைப் பள்ளிகளை உருவக்க வேண்டும். இப்பள்ளிகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்து தொடக்க, நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளைத் தேவைக்கு ஏற்ப அமைக்க வேண்டும். மழலையிலிருந்து தொடங்கி பண்ணையின் சூழலில் இயற்கையைப் பார்த்து அறிவை வளர்த்துக்கொண்ட
ே எழுத்தறிவைப் புகட்டும் கல்வி முறையை வகுக்க வேண்டும். குழந்தைகளின் அறிதிறன், ஆர்வங்கள், மனச்சாய்வு, ஆற்றல்கள், குறைபாடுகளை இனம் காணும் பயிற்சியுள்ள உளவியல் அறிந்தவர்களை மழலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்த்த வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் குழந்தைகளின் அகவைக்கேற்ப படிப்படியாக உடலுழைப்பில் பயிற்சி அளிக்க வேண்டும். எழுத்தறிவில் ஆர்வம் குறைந்த குழந்தைகளுக்கு உடலுழைப்புப் பயிற்சியில் முன்னுரிமை வழங்க வேண்டும். அவர்களுக்கு எப்போதாவது படிப்பில் நாட்டம் ஏற்பட்டால் அதை வழங்கவும் வழிவகை வேண்டும். நடுநிலைப் படிப்பு முடிந்ததும் உழைப்பு இணைந்த பகுதிநேரப் படிப்பைக் கையாள வேண்டும். அவ்வாறு உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இடைநிறுத்தி குறிப்பிட்ட ஆண்டுகள் உடலுழைப்பிலீடுபட்டு தனக்கு ஆர்வமுள்ள படிப்பில் நுழைவுத்தேர்வெழுதி படிப்பைத் தொடரும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். பொறியியல், மருத்துவம், வேளாண்மை என்று எந்தத் துறையாயிருந்தாலும் அத்துறையில் அடிப்படைத் தொழிலாளியாக நுழைந்துதான் படிப்படியாக படிப்பு → வேலை → நுழைவுத்தேர்வு → அடுத்த கட்டப் படிப்பு → வேலை என்றிவ்வாறு பட்டப்படிப்பு நோக்கி முன்னேற வேண்டும். மண்வெட்டியும் சுத்தியலும் பிடிக்கத் தெரியாத ஒருவன் பள்ளி இறுதித் தேர்வில் பங்கேற்கவோ அப்புறம் எழுத்தறிவு சார்ந்த எந்தப் படிப்பிலும் சேரவோ முடியாத நிலை வேண்டும்.
வேளாண் பண்ணைகளை அடிப்படையாகக் கொண்ட சாலைகள், தொழிலகங்கள், நகரமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள் என்று புதிய தமிழகம் உருவாக வேண்டும்.
இவ்வாறு சாதி – சமய அடிப்படையில் இனங்காணத்தக்க குடியிருப்புகளில் இன்று வாழும் மக்கள் அவற்றிலிருந்து வெளியேறி அடுக்குமாடிகளாய் அமைந்த புதிய குடியிருப்புகளில் குடியேற வேண்டும்.
- தமிழக மக்கள் பொருளியல் உரிமைக் உரிமைக் கழகத்தின் செயல்திட்டத்தில
ிருந்து.
19 நவம்பர், 12:48 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக