திங்கள், 19 மார்ச், 2018

ஈவேரா கீழவெண்மணி படுகொலை உடந்தை மழுப்பல்

aathi tamil aathi1956@gmail.com

13/12/17
பெறுநர்: எனக்கு
தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய
# கீழ்வெண்மணி படுகொலை (புகைப்படம் இணைக்கப் பட்டுள்ளது)
பெரியாரின் திராவிட இயக்கம் , கீழ்வெண்மணி சம்பவத்தை எதிர்த்து மூச்சு
கூட விட்டது இல்லை.
பெரியார் ஈ .வெ .ரா சம்பவம் நடந்த உடனே அறிக்கை கூட விடவில்லை.. எப்படி
சொல்வார்...? கீழ வெண்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் # தமிழர்கள் .
கொன்றது அவரது சாதியான ஒரு
# நாயுடு ....!!! (கோபால கிருஷ்ண நாயுடு)
மேலும், வழக்கு முடிந்து வந்ததும், ஓடிப்போய் அவருக்கு சால்வை அணிவித்து
நாயுடுவை ஆரத்தழுவியது திராவிட இயக்கத்தினர் தான்....!!!
தன் சாதியினரான 'நாயுடு சாதி வெறி' யால் எற்பட்ட கீழ்வெண்மணி படுகொலையை
எதிர்த்துப் போராடவில்லை என்பதே உண்மையான வரலாறு.
.வென்மணி படுகொலையை பற்றி ராமசாமி எதிர்வினை செய்யாமல் இருந்ததை கண்டு
கீழத்ஞ்சையை சேர்ந்த தி.க.தோழர் ஆ,க,கோதண்டம் ராமசாமியை அது தொடர்பாக
கண்டன அறிக்கை விட கோரிய போது
"கம்யூனிஸ்ட் ,பாப்பானுங்க பேச்சக்கேட்டு காலித்தனம் பண்ணி
செத்துபோயிட்டானுங்க இதுல என்ன வெங்காய அறிக்கை விடறது"
என்று, பள்ளர் பறையரின் உயிர்தியாகத்தை கொச்சைப்படுத்தி
னார்.
ராமசாமியின் அடுத்த நிலையில் இருந்த வீரமணிக்கு நெருக்கடி கொடுத்தபோது
அய்யா உடல்நலமின்றி வேலூர் மருத்துவமனையில் இருந்தார் என்று புளுகி
தள்ளினார்.
தி,க என்பது ராமசாமி மட்டும்தானா வீரமணிக்கு சொந்த புத்தியில்லையா? அவர்
ஏன் விடுதலையில் ஓரு அறிக்கைகூட விடவில்லை..?
(ஆனால் கடும் அழுத்தத்துக்கு பிறகு வேறு வழியின்றி இரண்டு அறிக்கைகள்
வெளியிட்டார்..
ஒன்னு செத்தவனபத்தி இருக்கனும்,,, இல்ல கொன்னவனப் பத்தி இருக்கனும் ஆனால்
ரெண்டுகெட்டானா ஏதோ உளறியிருக்கும் ஒரு அறிக்கை அது...தி.க வினர் இதை
அறிக்கை என்று கூறுவது கொடுமை.)
தமிழ்நாட்டையே நடுங்க வைத்த கீழ்வெண்மணி படுகொலைக்கு ஈவேரா சரியான
எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை 20-1-69)ஒவ்வொரு
தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று இருக்கிறது.
‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ
வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே
கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி,
இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக்
கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்
கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
நாகை தாலுகாவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன்
காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.
கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா
இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’.
.நண்பர்களே தமிழகத்தையே அதிரவைத்த
கீழ்வெண்மணி வரலாறு..கீழே.... படித்துப்பாருங்கள்...(.தலித் எழுத்தாளர்
திரு ம.வெங்கடேசன் அவர்களின் கட்டுரை.)
தஞ்சை மாவட்டத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் வெண்மணி. அது இரிஞ்சூருக்கு
அருகில் இருக்கிறது. அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த ‘நெல்
உற்பத்தியாளர்’ சங்கத்திற்குத் தலைவராக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு
இருந்தார்.
அங்கு வாழும் தாழ்த்தப்பட்டோர
ை வஞ்சம் தீர்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்த நாயுடு தன் ஆட்களை
ஏவிவிட்டார். ஆனால் தாழ்த்தப்பட்டோர் பயப்படவில்லை. ஊரையே
கொளுத்திவிடுவேன் என்று கொக்கரித்தார் நாயுடு. இது அரசின் கவனத்திற்கு
உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
நாகை வட்டச் செயலாளராக இருந்த வே.மீனாட்சிசுந்தரம் தமிழக முதல்வருக்குக்
கடிதம் (12.12.1968) அனுப்பினார்.
அதில் –
‘கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் உள்ள நெல்உற்பத்தியாள
ர் சங்கம் வெண்மணியை எரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. விவசாயத்
தொழிலாளர்களைப் பாதுகாக்கவும்,வெண்மணி எரிக்கப்படாமலிருக்கவும்
முதலமைச்சராகிய நீங்கள் உடன் தலையிட்டுக் கோரச் சம்பவம் எதுவும்
நடந்துவிடாமல் தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
முதலமைச்சரும் காவல்துறையும் அதை அலட்சியம் செய்தனர். விளைவு….
யாரும் எதிர்ப்பார்க்காத – தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்பார்த்த – அந்தக்
கோரச் சம்பவம் நடந்தே விட்டது!
டிசம்பர் 25 மாலை 6 மணி அளவில் திடீரென சில ரவுடிகள் வந்தனர். அங்கு
டீக்கடை நடத்திக்கொண்டிருந்த முத்துச்சாமியைத் தூக்கிக்கொண்டு
போய்விட்டார்கள். சாலைத் தெருவில் உள்ள ஒரு சாதி இந்துவின் வீட்டில்
போட்டுப் பூட்டிவிட்டார்கள்.
செய்தி அறிந்த வெண்மணி கிராமத்துத் தொழிலாளர்கள் அந்த வீட்டின் முன்
கூடிவிட்டார்கள். முத்துச்சாமியை வெளியே அனுப்பு என்று கத்தினர். வீடு
தாக்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக முத்துச்சாமியைக் கொல்லைப்புறமாக
அனுப்பி விட்டார்கள்.
முத்துச்சாமி மீட்கப்பட்டுவிட்டார் என்பதை அறிந்த கோபாலகிருஷ்ண நாயுடு
ஆத்திரப்பட்டார். தானே தெருவில் இறங்கி ஆட்களைத் திரட்டினார். பல
மிராசுதார்களும் இதில் சேர்ந்தனர்.
கைகளில் பெட்ரோல் டின்கள், துப்பாக்கிகள் எடுத்துக்கொண்டு சுமார் 200
பேர் இரவு 8 மணியளவில் வெண்மணி கிராமத்திற்குள் வந்தனர்.
அங்கு இருந்த அனைவரையும் சுடு! கொளுத்து! வெட்டு!அடி!உதை என்று
பெருங்கூச்சல் போட்டுக்கொண்டே தெரு முழுவதற்கும் தீ வைத்தார்கள் பாவிகள்!
கண்மூடித்தனமாகத் துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஜெனரல் டயர் அமிர்தசரசில்
நடத்திய கொலைவெறித்தனமான துப்பாக்கிச்சூட்டிற்குச் சளைத்ததல்ல இது.
அந்தத் தெருவில் இருந்த 28 வீடுகளும் பற்றி எரிந்தன. எனினும்
தாழ்த்தப்பட்டவர்கள் எதிர்த்து நின்று போராடினார்கள்.
நிராயுதபாணிகளாக இருந்த அவர்கள் துப்பாக்கி குண்டுகளை எதிர்கொள்ள
முடியாமலும் – மேலே பாய்ந்துவிட்ட குண்டுகளோடும் – வயல் வரப்புகளுக்குள்
வீழ்ந்துவிட்டார
்கள். ஒவ்வொருவர் உடம்பிலும் நான்கு அல்லது ஐந்து குண்டுகள் வரை
பாய்ந்திருந்தன. அப்படி வீழ்ந்தவர்கள்13 பேருக்கு மேலிருக்கும்.
தெருவில் தெற்குக் கடைசி வீடு – 36க்கு 12 என்று நீள அகலம் கொண்ட ஒரு
சிறிய வீடு. கிழக்கு பக்கம் வாசல். அந்த வீட்டிற்குள் 12க்கும் 12 அடி
அளவு கொண்ட ஓர் அறையில்தான் 44 பேர் பதுங்கிக் கொண்டிருந்தார்கள்.
துப்பாக்கிச் சூடு கண்டு சிதறி ஓடியவர்களில் பெண்களும், பெரியவர்களும்,
குழந்தைகளுமாய் இருந்தவர்கள்தாம் தெருக்கோடியில் இருந்த அந்த
வீட்டிற்குள் இருந்தால் தப்பிவிடலாம் எனும் ஒரு நம்பிக்கையில் முடங்கிக்
கொண்டிருந்தார்கள்.
குடிசைகளைக் கொளுத்தியும் வெறி அடங்காதவர்கள் பெண்டு பிள்ளைகளைத்
தேடினார்கள். எரியாத அந்த வீடு அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டது.
அதற்குள் பலர் ஒளிந்திருப்பதும் தெரிந்துவிட்டது.
உற்சாகம் கரைபுரண்டோட வீட்டின் கதவை வெளிப்பக்கம் தாழ்போட்டுவிட்டுக்
கூரை மீது பெட்ரோல் ஊற்றினார்கள். வீட்டின் நாலா பக்கமும் தீ
வைத்தார்கள். ஒரே நேரத்தில் மூண்டெழுந்தது பெரு நெருப்பு!
எரியும் குடிசைக்குள்ளிருந்து ஏதோ வந்து விழுகிறது! ஒரு குழந்தை! தான்
செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே
தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக்
குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில்வீசினார்கள்!
எரிந்தது! எரிந்தது! அந்த வீடு குட்டிச்சுவராக ஆகுமட்டும் எரிந்தது! 44
மனிதர்களும் கருகி கருகிக் கரிக்கட்டைகளாக ஆகுமட்டும் எரிந்தது!
இறந்தவர்களில் 20 பேர் பெண்கள்! அவர்களில் இரண்டு பேர் கர்ப்பிணிகள்!
இறந்தவர்களில் 19 பேர் சிறுவர்கள்! 13 வயதிற்கும் குறைவானவர்கள்!
இறந்தவர்களில் 5 பேர் ஆண்கள்! அவர்களில் ஒருவர் 70 வயது பெரியவர்!
வெண்மணி கோரம் தொடர்பாகப் போலீசால் இரண்டு வழக்குகள் போடப்பட்டன. பக்கிரி
எனும் ஒரு ரவுடி இறந்ததற்காக கோபால் உள்ளிட்ட 22 விவசாயத் தொழிலாளர்கள்
மீது ஒரு வழக்கு. 44 விவசாயத் தொழிலாளர்களைத் தீ வைத்துக் கொன்ற
குற்றத்திற்காகக் கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளிட்டசிலர் மீது இன்னொரு
வழக்கு.
தீர்ப்பு என்ன தெரியுமா?
முதல் வழக்கில் கோபாலுக்கு ஆயுள் தண்டனை!
இன்னொருத்தருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை! மற்றும் 6 பேருக்கு தலா 2 ஆண்டு
சிறைவாசம்!
இரண்டாவது வழக்கில் கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் அவரைச் சார்ந்த 7
பேருக்கும் 10 வருடம் சிறைத் தண்டனை!
44 பேரை உயிரோடு சுட்டெரித்த மாபாதகர்களுக்கு ஆயுள் தண்டனை கூட இல்லை.
இதைவிட ஒரு வினோதம் உண்டு. இந்த கீழ்க்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து
வழக்குகள் உயர்நீதிமன்றம் சென்றன. முதல் வழக்கில் தண்டனை பெற்ற 8
விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. கோபாலகிருஷ்ண
நாயுடுவிற்கும் அவரோடு சேர்ந்து தண்டனை பெற்ற 7 மிராசுதார்களுக்
கும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இதற்கும் ஒரு உச்சம் இருக்கிறது. இறுதித் தீர்ப்பில் மிராசுதார்கள் 8
பேரும் உயர்நீதிமன்றத்தால் நிரபராதிகளென விடுதலை செய்யப்பட்டனர். 44 பேரை
துடிக்க துடிக்கக் கொன்ற கொலைகாரக் கூட்டத்திற்கு எந்தத் தண்டனையும்
இல்லை.
இதற்கு உயர்நீதிமன்றம் கொடுத்த காரணத்தையும் கேளுங்கள்.
‘இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ள 23 பேருமே மிராசுதார்களாக
இருப்பது வியப்பாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பணக்காரர்கள்.
மிகப்பெரிய நிலச் சொந்தக்காரர்கள். அவர்கள் கவுரவமிக்க சமூக
அந்தஸ்துள்ளவர்கள். அவர்கள் இந்த குற்றத்தை செய்திருக்க மாட்டார்கள்.
விவசாயிகளைப் பழிதீர்க்க அவர்கள் எவ்வளவுதான் ஆர்வமாக இருந்திருந்தாலும்
வேலையாட்கள் எவருடைய உதவியும் இல்லாமல் அவர்கள் சம்பவம் நடந்த
இடத்திற்குத் தாங்களாகவே நேரில் நடந்து வந்து வீடுகளுக்குத் தீ
வைத்திருப்பார்கள் என்பது நம்புவதற்குக் கடினமாக உள்ளது’
ஆக, குற்றவாளியா? நியாயவானா? என்பதைத் தீர்மானிக்க சாட்சிகள் தேவையில்லை.
விசாரணைகள் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பணக்காரர்களாக இருந்தால்
போதும். அவர்கள் கொலைகாரர்கள் இல்லை. இப்படியும் ஒரு தீர்ப்பு.
இந்த வரலாற்றுக் களங்கம்…
நியாய உள்ளம் படைத்தோரையெல்லா
ம் பதற வைத்த இந்தக் கொடூரம்…
தமிழ்ச் சமுதாயத்திற்குள் இன்னும் நில பிரபுத்துவக் கொலைவெறி இருக்கிறது
என்பதை உலகிற்கு உணர்த்திய அந்தப் படுபாதச்செயல் பற்றி ஈவேரா ஆற்றிய
எதிர்வினை என்ன?
ஈவேரா கீழ்வெண்மணிக்குச் சரியான எதிர்வினையாற்ற வில்லை என்பது ஒருபுறம்
இருக்கட்டும். ஆனால் அவர் 1969 ஜனவரியில் பேசிய பேச்சு (விடுதலை
20-1-69)ஒவ்வொரு தாழ்த்தப்பட்டவர்களின் நெஞ்சிலும் ஆணி அடிப்பதை போன்று
இருக்கிறது.
‘‘தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழ
வேண்டும் என்பதைக் கம்யூனிஸ்டு தோழர்கள் உங்களுக்கு கூறாமல் நாட்டிலே
கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி,
இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக்
கவிழ்த்துவிட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்
கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நாகை தாலுகாவிலே கலகம் செய்யத்
தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி. அதன் காரணமாக42 பேர் உயிரிழந்தனர்.
கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா
இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கிறது.’’
கூலி உயர்வுப் போராட்டமே தேவையில்லை என்று கூற வருகிறார் ஈவேரா. லாபம்
பெருகினாலும் கூலியை உயர்த்தித்தர முதலாளிகளுக்கு மனம் வருவதில்லை. அதைப்
போராடியே பெற வேண்டியிருக்கிறது என்பதைக்கூட உணராமல் வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுகிறார் ஈவேரா. கூலி உயர்வுக்காகப் போராடினால் அது கலகம்!
கீழத் தஞ்சையில் நடந்த விவசாயக்கூலிகளின் தீரமிக்க போராட்டம் ஒட்டிய
வயிறுகளின் தவிர்க்க முடியா உரிமை முழக்கம்! ‘நாகைத் தாலுக்காவிலே கலகம்
செய்யத் தூண்டியது கம்யூனிஸ்டு கட்சி’ என்று வருணித்ததன் மூலம்
நிலப்பிரபுக்களின் கொடூர ஒடுக்குமுறையை, காட்டுமிராண்டித்தனத்தை அப்படியே
புறந்தள்ளிவிட்டார் ஈவேரா. இதன் காரணமாக 44 உயிர்களைத் தீயிட்டுக்
கொளுத்திய நிலப்பிரபுக்களைக் கண்டிக்காமல் பழியை கம்யூனிஸ்டுகள் மேல்
போட்டுவிட்டார்.இன்று இவர்கள் இருவரும் சேர்ந்துக்கொண்டு இந்து
தர்மத்திற்க்கு எதிராக கொட்டம் அடிக்கிறார்கள்.
முரளி கபே ஓட்டலில் இருந்த ‘பிராமணாள்’ என்ற பெயரை அழிக்க ஒட்டல் முன்பு
கிட்டத்தட்ட ஒரு வருடகாலமாகப் போராடினார்களாம் திராவிடர் கலகக்காரர்கள்.
ஆனால் கீழ்வெண்மணி சம்பவத்திற்காக அப்படி எந்த ஒரு போராட்டமுமே
முன்னெடுக்கவில்லை திராவிடர் கலக பெரியார் ஈவெரா
.நண்பர்களே! .இச்சம்பவத்திற்கு முழுக் காரணமான நிலப்பிரபுக்கள், தனது
நாயுடு சாதியினர் என்பதால் இதை எதிர்த்துப் போராடாத இவரா பெரியார்?...
பெரியார் ஈவெ ரா. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தமிழகத்தில் ஒரு போராட்டமும்
நடத்தவில்லை என்பதே உண்மை.யாகும்

search கூலி உயர்வு கேட்டதால்தான் கீழ்வெண்மணி படுகொலை நடந்தது 
- ஈ.வே.ரா அறிக்கை vaettoli 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக