சனி, 24 பிப்ரவரி, 2018

சாதி பட்டங்கள் ஆண்களுக்கு மட்டும் ஏன் தேவர் விளக்கம்

aathi tamil aathi1956@gmail.com

13/11/17
பெறுநர்: எனக்கு
1954 மார்ச் மாத்தில், அன்று "சென்னை ராஜதானி" என்று அழைக்கப்பட்ட தமிழக
சட்ட மன்றத்தில், " அரிஜன முன்னேற்றம்" பற்றிய விவாதம் நடந்தி. அந்த
விவாதத்தில் கலந்து கொண்டு மார்ச் 24 அன்று தேவர் பேசியது கவனத்தில்
கொள்ளத்தக்கது ஆகும். 
அந்த உரையில்,
"ஆதி காலத்தில் தொழிலின் பேரால் ஜாதி வகுக்கப்பட்டது எனபது தான் தமிழ்ச்
சான்றுகளும், சாஸ்திரங்களும் கூறுகின்ற உண்மை. 
அதற்கு உதாரணம் ஆண்களை
அழைக்கின்ற காலத்தில் ஒரே பெயர் பலருக்கு இருக்கிறது என்பதன் காரமமாக,
ஒரே பெயருடைய பலரை கூப்பிடும் பொழுது 'இன்ன தேவர்', ' இன்ன செட்டியார்',
'இன்ன ஐயர்' என்று பெயர் வாய்த்த தமிழ் பெரியோர்கள், பெண்களை அழைக்கும்
போது அந்த பெயரின் கடைசியில் வால் வைத்து கூப்பிடாமல், அதாவது, 'இன்ன
பிராமனத்தி', 'இன்ன செட்டிச்சி' என்று கூப்பிடாமல், அனைவரையும், 'இந்த
அம்மாள்', 'அந்த அம்மாள்' என்று கூப்பிடுவதுதான் பழக்கமாக இருந்து
வருகிறது. 
இது நீண்ட காலமாக இந்த நாட்டில் அனுஷ்டித்து வருகிற
சித்தாந்தமாகும். அப்படி இருக்கும் போது ஆண்களுக்கு மாத்திரம் தொழிலின்
பெயரை பின்னால் வைத்து அழைத்து, ஒரே பெயருடைய பல நபர்கள் தொழிலின்
பெயரால் வித்தியாசப்படும் பொருட்டு செய்த சகாயமாகும்'. 
என்றும் மனிதனில் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்று குறிப்பிட்டு விட்டு, பின்வரும்
உதாரணத்தையும் சொல்கிறார்;

அடியேனுடைய உடம்பில் இரண்டு கைகள் இருக்கிறது.
ஒன்று வலது கரம்; இது உண்ணவும், என்னுடைய எண்ணத்தை எழுத்து மூலமாக
வெளிப்படுததவும் பயன்படுகிறது. இன்னொன்று இடது கரம், உடம்பிலிருந்து
வெளிவரும் அசுத்தங்களை அப்புறப்படுத்தி, உடம்பை தூய்மையாக வைத்துக்கொள்ள
பயன்படுகிறது.
ஆனால், இறைவனையோ, பெரியவர்களையோ வணங்குகிறபோது, இரண்டு கைகளையும் ஒன்றாக
சேர்த்துதான் வணங்க வேண்டும். 
இதுபோல அனைத்து சமுதாய மக்களும் இரண்டு
கைகள் போல இணைந்தால் தான் சமுதாயத்தில் மக்கள் அனைவரும் செம்மையாக
வாழ்த்திட முடியும்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக