வியாழன், 22 பிப்ரவரி, 2018

பெரியகோவில் தூண் உடைத்தது தெலுங்கு கான்ட்ராக்கடர் 10 பழமையான கோவில் இந்தியா அறநிலையத்துறை மூலம் சிதைப்பு யுனெஸ்கோ ஆய்வு

aathi tamil aathi1956@gmail.com

2/11/17
பெறுநர்: எனக்கு
அலட்சியத்தால் சிதைக்கப்பட்ட, 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மானம்பாடி
கோயில் சிற்பங்கள்!
2 0 0
SHARES 93%
கோ யில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல... நிர்வாக
மையங்களாகவும், கல்விக்கூடங்களாகவும் விளங்கியுள்ளன. நம் நாகரிகமும்,
பண்பாடும் கோயில்களை மையமாக வைத்தே வளர்ந்திருக்கின்றன. அரசர்களால்
கட்டியெழுப்பப்பட்டு, இயற்கை சீற்றங்களையும் படையெடுப்புகளையும் தாங்கி
பலநூறு ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் பழம் பெருமை மிக்கக்
கோயில்களை நாம் உரிய முறையில் பாதுகாக்கிறோமா என்றால் வேதனை தான் விடையாக
மிஞ்சுகிறது.
யுனெஸ்கோ நிறுவனம் கோயில்களை பாதுகாப்பதில் நமக்கிருக்கும் அலட்சியத்தை
கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்த நிறுவனத்தின் உண்மை கண்டறியும்
குழு, தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற பழைமை வாய்ந்த
கோயில்களை, கடந்த மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆய்வு செய்தது. அந்த
ஆய்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. அந்த ஆய்வு முடிவுகள் தான்
தற்போது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளன.
பழம் பெருமை மிக்க கோயில்களில் தமிழக அரசு மேற்கொண்ட புனரமைப்புப்
பணிகளில் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பதாகவும், அதனால் கோயில்களின்
ஸ்திரத்தன்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் உண்மை அறியும் குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள கோயில்களில்
1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மானம்பாடி நாகநாத சுவாமி கோயிலும் இடம்
பெற்றிருக்கிறது.
Advertisement
எங்கே இருக்கிறது மானம்பாடி ?
கும்பகோணம்-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும்
சிற்றூர்தான் மானம்பாடி. இங்குதான் இருக்கிறது நாகநாத சுவாமி கோயில்.
இது, 11-ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில்
கல்வெட்டுகளில் கைலாசநாதர் கோயில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காவிரி நங்கையின் அரிய சிற்பம் ஒன்று இந்தக் கோயிலில் இருக்கிறது.
கோயிலைப் பற்றி ...
பல்வேறு பெருமைகளைக் கொண்ட இந்தக் கோயிலைப் பற்றி வரலாற்று ஆய்வாளர்
குடவாயில் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்.
"இந்தக் கோயில் கங்கை கொண்ட ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திர
சோழன் பற்றியும் அவனது பேரன் குலோத்துங்கச் சோழன் பற்றியும் ஒன்பது
கல்வெட்டுகள் இந்தக் கோயிலில் உள்ளன. எங்குமே காணக் கிடைக்காத அரிய
சிற்பங்களும் உள்ளன. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், காவிரித் தாய்
சிவலிங்கத்துக்கு பூஜை செய்யும் சிற்பமும் நடராஜப் பெருமானின்
திருவடிகளுக்கு அருகில் ராஜேந்திர சோழன் குடும்பத்துடன் இருப்பது போன்ற
சிற்பமும் ராஜேந்திர சோழனின் ஒன்றரை அடி உயர உருவச் சிற்பமும் இந்தக்
கோயிலில் உள்ளன.
Advertisement
இந்தக் கோயில் நெடுங்காலமாக சிதிலமடைந்த நிலையிலேயே இருந்தது. இதைப்பற்றி
25 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு தொல்லியல் துறையின் அப்போதைய
இயக்குனர் நாகசாமியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவரும் கோயிலைப்
பார்வையிட்டு தொல்பொருள் துறையின் ஸ்தபதிகளைக் கொண்டு பராமரிப்புப்
பணிகளை மேற்கொண்டார். ஆனால், அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு, பொறுப்புக்கு
வந்த இயக்குநர்கள் யாரும் கோயிலைக் கண்டுகொள்ளவே இல்லை. 'இந்தக் கோயில்
தொல்பொருள் துறைக்குச் சொந்தம்' என்று அரசிதழில்
வெளியிட்டிருக்கவேண்டும். அதையும் செய்யவில்லை. மற்றுமொரு சிக்கலும்
இந்தக் கோயிலுக்கு ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக
மத்திய அரசு அந்தப் பகுதியில் இருந்த நிலங்களைக் கையகப்படுத்தியது.
அப்போது இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடத்தையும் நெடுஞ்சாலைத்துறை
கைப்பற்றியது. கோயிலை இடிப்பதற்காக அடையாளக் குறியீடும் செய்யப்பட்டு
விட்டது. அப்போதுதான் ஊர்மக்கள் மூலமாக எனக்குத் தகவல்
தெரிவிக்கப்பட்டது. ஊர்மக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து அதைத் தடுத்து
நிறுத்தினோம்.
இத்தகவலைக் கேள்விப்பட்ட இந்து சமய அறநிலைத் துறையினர், தங்கள்
கட்டுப்பாட்டுக்குள் கோயிலைக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் தமிழக அரசு,
கோயில் திருப்பணிக்காக நிதி ஒதுக்கியது.
கோயில் புனரமைப்பு வேலைகள், கான்ட்ராக்டர் ஒருவரிடம்  ஒப்படைக்கப்பட்டு
வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே,
இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்டர்களுக்கும்
பிரச்னை உருவானது. அதன் பின்னர், வேறோரு கான்ட்ராக்டரிடம்
ஒப்படைக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
திருப்பணிகள் தொடங்கப்பட்டபோது சில நடைமுறைகளைப் பின்பற்றி இருக்கவேண்டும்.
* தொல்பொருள் துறையின் மேற்பார்வையில்தான் திருப்பணிகள் நடைபெற வேண்டும்.
 * திருப்பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாகக் கோயில் முழுவதுமாக புகைப்படம்
மற்றும் வீடியோ எடுக்கவேண்டும்.
* கோயிலின் தற்போதைய நிலையை, சரியான அளவீட்டுடன் பொறியாளர்களைக் கொண்டு
வரைபடம் ஒன்று தயாரித்திருக்க வேண்டும்.
* ஒவ்வொரு சிற்பத்தின் மீதும் அடையாள எண் குறிக்கப்பட வேண்டும்.
* முழுவதுமாக ஆவணப்படுத்திய பின்னர்தான் வேலைகளையே தொடங்க வேண்டும்.
* நன்றாக இருக்கும் சிற்பங்களை தொடாமல், சேதமடைந்த சிற்பங்களை மட்டும்
தனியாக எடுத்து பழுதுநீக்க வேண்டும்.
மேற்சொன்ன எந்த நடைமுறையும் மானம்பாடி கோயில் திருப்பணியில் பின்பற்றப்படவில்லை.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் என பல
தரப்பிலும் இருந்து இதற்கு எதிர்ப்பு வந்தது. உடனே சிற்பங்களை ஒன்றன்
மீது ஒன்றாக அடுக்கி வைத்துவிட்டுச் சென்று விட்டனர். அதனால் சிற்பங்கள்
பலத்த சேதமடைந்தன. அதன் பின்னர் அது கண்டுகொள்ளப் படவே இல்லை.
இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை உடனடியாக
கைப்பற்றி, தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறையிடமோ, இந்தியத் தொல்லியல்
துறையிடமோ ஒப்படைக்க வேண்டும். இதுதான் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய பணி''
என்று ஆதங்கமாகக் கூறினார் பாலசுப்பிரமணியன்.
''தொல்லியல் துறை நிர்வாகம் சிறப்பாக இருக்குமா?"
''அப்படியும் சொல்ல முடியாது. முன்பெல்லாம் தொல்லியல் துறையில் உள்ள
அனுபவம் மிக்க நிபுணர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வேலைகளும்
நிதானமாக நடந்தது. ஆனால், தற்போது கான்ட்ராக்டர்களிடம்
ஒப்படைக்கிறார்கள்.  ஒதுக்கப்படும் நிதியை, நடப்பு நிதியாண்டுக்குள்
செலவழித்து விடவேண்டும் என்பதற்காக வேகவேகமாக வேலை செய்து
கல்வெட்டுகளையும், சிற்பங்களையும் சேதப்படுத்தி விடுகின்றனர்.
இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, தஞ்சை பெரியகோயிலில்
சில ஆண்டுகளுக்கு முன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான ஒப்பந்தம்
ஆந்திராவில் உள்ள கான்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள்
ராஜராஜசோழனுடைய நான்கு கல்வெட்டுத் தூண்களை உடைத்துவிட்டனர். இதற்கான
ஆவணங்களும் என்னிடம் உள்ளன.
16 -ம் நூற்றாண்டில், வடஇந்தியாவில் இருந்து படையெடுத்து வந்து நம்
கோயில்கள் பலவற்றை இடித்தனர். நம் வரலாறுகளை அழித்தனர். அவர்கள் செய்ததை
விட அதிகமாக இந்து சமய அறநிலையத் துறையினர் தற்போது செய்து வருகின்றனர்.
நம்முடைய வரலாறு, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியனவற்றின் நிதர்சனமான
சாட்சியங்களாகவும், காப்பகங்களாகவும் திகழும் ஆலயங்களைப் பாதுகாப்பதில்
அலட்சியம் காட்டும் அதிகாரிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
அப்போதுதான் நம் கோயில்களைப்
பாதுகாத்து நம் சந்ததியினருக்கும் விட்டுவைக்க முடியும். நம் கலை,
கலாசாரம், தொன்மைப் பண்பாடு போன்றவை காலத்துக்கும் நிலைத்திருக்கச்
செய்யமுடியும்'' என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.
செய்வார்களா?

பெரியகோவில் உழவாரப்பணி கல்வெட்டு ஹிந்தியா விகடன் சிதைப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக