வியாழன், 22 பிப்ரவரி, 2018

இசுலாமியரில் தமிழர் லெப்பை கலப்பு விவாதம்

aathi tamil aathi1956@gmail.com

3/11/17
பெறுநர்: எனக்கு
Mohamed Imran Mohamed Arieef
தமிழர் அடையாள அரசியலில் இஸ்லாமியர்களின் புரிதல்களும் சிக்கல்களும்
---------------------------------------------------------------------------
-----------------
இத்தனை நூற்றாண்டுகளாக இங்கே “தமிழர் அடையாள அரசியல்” என்பது முழுமையாக
தமிழர்நாடு என்று ஒரு எல்லை வகுத்தோ அல்லது இவர்கள் எல்லாம் தமிழர்,
தமிழர் அல்லாதவர் என்று பிரித்தோ இங்கே நடக்கவில்லை. இங்கே
பாண்டியர்களாக, சேரர்களாக, சோழர்களாக தான் தன்னை உணர்ந்து தங்கள்
எல்லைகளை விரிவுப்படுத்த போர் புரிந்து இருக்கிறார்கள்.
தங்கள் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்த மாற்றினத்தவர்களுடன் சண்டைகள்
உண்டானதே ஒழிய, நீ வேறு இனம் என்று எவரும் நினைத்து போரிடவில்லை. அதே போல
இங்கே, சாளுக்கிய சோழர்களின் ஆட்சி தொடர்ந்த போது மக்கள் அவர்களை
பிரித்து பார்க்கவில்லை, இயல்பாகவே தன் சமயத்தை பின்பற்றுகிறான் என்றே
எண்ணினார்கள்.
இங்கே சுல்தான்கள் ஆட்சி வீழ்த்தப்பட்டு விஜயநகர பேரரசு உருவான போதும்
இங்குள்ள மக்கள் அவர்களை நம்முடைய சமய வழிபாடு உடையவர்களாக தான்
பார்த்தார்கள்.
இன்றுவரை நாயக்கர்களுக்கும் தமிழ் குடிகளுக்கும் எந்த விதமான மோதல்
போக்குகளோ பிரிவினைகளோ, அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற தோற்றமோ வந்தது
இல்லை. அவர்களின் ஆட்சி நடந்த போதும் சரி, அதன் பிறகும் சரி அவர்களை
நம்மில் ஒருவராக தான் பார்த்தார்கள்.
தமிழர் என்று யோசிக்கவில்லை என்றாலும், காலம் காலமாக இங்கே தமிழ்
மொழியின் மீது பற்று கொண்டு தான் இருந்தார்கள். அது இங்கு இருப்பவர்களாக
இருந்தாலும் சரி, வெளியே இருந்து வந்த சாமானியர்களாக இருந்தாலும் சரி.
இந்த தமிழ் மொழிப்பற்று எல்லாம் ஹிந்தி திணிப்பின் போது தான்
இந்தியாவிற்கு தெரியவந்தது. அதுவரை நாம் இந்தியர்கள் என்று போராடி
வெள்ளையனை வெளியேற்றி இருந்தோம், ஆனால் ஹிந்தியர்களும் நமக்கு
அந்நியர்களே என்று விளங்க வைத்தார்கள்.
அன்று தான் தமிழ்நாட்டு மக்கள், பிராந்திய அரசியலை நோக்கி
திரும்பினார்கள். அந்த தமிழ் மொழிப்பற்றை சரியாக கையாண்ட திராவிட அடையாள
அரசியல், மொழிப்பற்றை பற்றி மேடை தோறும் பேசியது. அந்த மக்கள் புரட்சியை
தங்கள் வசப்படுத்தி ஆட்சியிலும் அமர்ந்து கொண்டது. அதுவரை பெரியாரின்
கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் இணைந்தது போல,
பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் தங்கள் மொழி பற்றின் காரணமாக தேசிய
அரசியலான காங்கிரசில் இருந்து வெளியேறி திமுகவில் முழுவதுமாக தங்களை
ஈடுபடுத்தி கொண்டார்கள்.
அந்த மொழிப்போர் காலக்கட்டத்தில், மா.பொ.சிவஞானம் அவர்களோ அல்லது
சி.பா.ஆதித்தனார் அவர்களோ தமிழ்தேசிய அரசியலை தனியாக மக்கள் முன் எடுத்து
சென்றிருந்தால், இஸ்லாமியர்கள் தமிழர் அடையாள அரசியலில் தங்களை
ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள், ஆனால் திராவிட அடையாள அரசியல் தான்
வெற்றிபெற்றது.
தற்போதைய காலக்கட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு “தமிழர் அடையாள அரசியல்”
என்பதில் வரும் புரிதல்களையும், சிக்கல்களையும் பற்றி விரிவாக பேசுவோம்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தாய்மொழியாக தமிழ், உருது, மலையாளம்
பேசுகிறார்கள். இங்கே இஸ்லாமியர்கள் வரலாறு என்று எடுத்து கொண்டால், சேர
கடற்கரையோரத்தில் தான் வரலாறு தொடங்குகிறது. ஆரம்ப காலகட்டத்தில் இங்கே
இஸ்லாமிய மார்க்கம் பரவ மிக முக்கிய காரணமே சூபி மதகுருமார்களும்,
அரபு-தமிழ் வணிக உறவு தான்.
அதன் பிறகு, பெரும்பான்மை இஸ்லாமியர்கள் தங்கள் தொழில்களாக கப்பல்
செய்வதையும், அதன் மூலம் குதிரை வணிகம் செய்யவும் ஆரம்பித்தார்கள். இதில்
கப்பல் செய்பவர்களை “மரைக்காயர்கள்” என்றும், குதிரை வணிகம்
செய்பவர்களும், குதிரை வீரர்களையும் “ராவுத்தர்கள்” என்றும் மக்கள்
அழைத்தார்கள். இஸ்லாமியர்களுக்கு இயல்பாக தமிழ் மொழிப்பற்று அதிகமாக
இருந்தது.
ஆகையால், தங்கள் மார்க்க வரலாறுகளை தமிழ் இலக்கிய நடையில் வடிக்க
எண்ணினார்கள். பதினாறாம் நூற்றாண்டில் தான் முதல் பெருங்காப்பியமான
“சீறாப்புராணம்” இயற்றப்படுகிறது. அதற்கு முன் பல இஸ்லாமிய
சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதினைந்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை
தமிழகத்தில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும்
தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய
மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் அதை தமிழ் மொழியின் “இருண்ட காலம்”
என அழைக்கிறார்கள். ஆனால் அந்த காலக்கட்டத்தில் தமிழ் மொழியில் பல புதிய
இலக்கியப் படைப்புகளையும் மற்றும் புதிய இலக்கிய வடிவங்களையும்
இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமியர்கள் தான் தமிழ் இலக்கிய சுடரை
அணையாமல் பாதுகாத்தார்கள். இதிலே அவர்கள் தங்களை தமிழர்கள் என்று
உணர்ந்து தான் தமிழ் மொழிக்கு பங்காற்றி இருக்கிறார்கள். இப்படி மொழி
பற்றிலே ஊறி திளைத்த இஸ்லாமியர்களில் உருது மொழியை தாய்மொழியாக
கொண்டவர்களும் உள்ளார்கள். இங்கே திராவிட அடையாள அரசியல் என்பது இங்கு
இருக்கும் இஸ்லாமியர்களிடையே மொழி பாகுபாடு காட்டவில்லை, அப்படி
பிரிக்கவும் இல்லை.
ஆனால், அது எங்களை சிறுபான்மை என்று ஓரங்கட்டியது. தமிழர் அரசியல் எங்களை
பெரும்பான்மை என்றும் மண்ணின் மைந்தர்கள் என்றும் எங்களை
பெருமைப்படுத்துகிறது.
ஆனால், இந்த அரசியல் பேசினால் இங்கே “யார் தமிழர்” என்ற கேள்வி இயல்பாகவே
எழும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரும் தமிழர் என்று தான் இங்குள்ள
பெரும்பான்மை மக்கள் தங்கள் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
ஏனென்றால் இந்த தமிழ் சமூகமே காலம் காலமாக குடிகளாக, சாதிகளாக,
சமுதாயங்களாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் இயல்பாகவே
தமிழ் இனம் என்று யோசித்ததே இல்லை.
இங்கு தமிழர் என்ற அடையாளம் “தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கா?” இல்லை
“தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கா?” அல்லது “தமிழ் சாதிகள் என்று
வரையறுக்கும் சாதிக்காரர்களுக்கு மட்டுமா?” என்று கேள்வி எழுகிறது.
அதனால் தான் இந்த தமிழர் அடையாள அரசியல் என்பதில் “தமிழர் அடையாளம்” யார்
யாருக்கு உண்டு என்பதில் தான் இங்கே பல குழப்பங்கள், சலசலப்புகள்
ஏற்படும்.
இப்போது “தமிழ் சாதிகள் தான் தமிழர்கள்” என்றால் என்ன என்ன சிக்கல்கள்
வரும் என்று பார்ப்போம். வேலூர், சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில்
இருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களில் பலர் சில நூறு வருடங்களுக்கு
முன் தமிழை தாய்மொழியாக மட்டும் தான் கொண்டு இருந்தனர். இவர்கள் எல்லாம்
ஹைதர் அலி, நவாப் மற்றும் நிஜாம் காலத்தில் அரசு பணிக்காகவும் மார்க்கப்
பணிக்காகவும் உருது மொழியை கற்றனர். அதன் பின்னால் தங்கள் பேசும் மொழியாக
உருது மற்றும் தமிழ் மொழியையும் இணைத்து கொண்டனர். இவர்கள் தான் லெப்பை
என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள் உருதுவும் பேசுவார்கள், தமிழும்
பேசுவார்கள்.
இவர்கள் தமிழை தான் தாய்மொழியாக கொண்டிருந்தார்கள் என்பதற்கு உதாரணமாய்
அவர்கள் குடும்ப பெயர்கள் ஆதாரமாய் இருக்கிறது. இன்றும் உருது பேசும்
இஸ்லாமியர்கள் தங்கள் குடும்ப பெயர்களாக நாட்டாமைக்காரர், சின்ன பக்கிர்,
கந்திரிக்காரர்(கந்தக பொடிக்காரர்), ஜல்லடை காரர், ஊசி வீடு, கொட்லு
காரர், ஆணைக்கார், ஏழு பானை மற்றும் பல தமிழ் பெயர்களை தன்னகத்தே
வைத்துள்ளார்கள். மேலும், உருது மொழியே தெரியாத லெப்பை இஸ்லாமியர்களும்
உள்ளார்கள்.
ஆனால் இந்த உருது இஸ்லாமியர்களில் தங்களை தெக்காணி(தக்கினி), சேக்,
செய்யது மற்றும் பதான் என்று அழைத்து கொள்பவர்கள் மட்டுமே வடநாட்டில்
இருந்து இங்கே மார்க்க பணிக்காக இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். ஆனால்
இந்த பெயர்களோ மொழியோ இஸ்லாமியர்களை பிரித்து விடவில்லை. இதில் எப்படி
நீங்கள் சாதியை வைத்து மொழியை வைத்து தமிழரை அடையாளம் காணப்போகிறீர்கள்.
இப்போது “தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்” தமிழர் அடையாளம் தரப்படுவார்கள்
என்று சொல்வார்கள் என்று எடுத்து கொள்வோம். அதில் வரும் சிக்கல்களை
இப்போது பார்ப்போம். இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் தான் இனப்பாகுபாடு
என்பது கிடையாது. இங்கே சென்னை, வேலூர் தவிர்த்து மற்ற இடங்களில் தமிழ்
இஸ்லாமியர்களும், உருது இஸ்லாமியர்களும் மிகவும் இயல்பாகவே திருமணம்
முடித்து கொள்கிறார்கள்.
கோவை, திருப்பூர் மற்றும் எல்லையோர மாவட்டங்களில் மலையாள இஸ்லாமியர்களும்
தமிழ் இஸ்லாமியர்களும் மணமுடித்து கொள்கிறார்கள். இப்படி இனக்கலப்பு
செய்வதால் ஒருவர் “தமிழர் இல்லாமல் போய் விடுவாரா” மற்றும் என்ன
அடையாளத்தில் அவர் சேர்த்து கொள்ளப்படுவார் என்ற கேள்வியும் முன்
வைக்கப்படுகிறது.
இதுவெல்லாம் “தமிழர் யார்?” என்பதில் வரும் சிக்கல்கள் மட்டுமே.
அதன்பிறகு, நாம் தமிழர்கள் என்று உணர்ந்து வரும்போது, இஸ்லாமியனிடம்
இருக்கும் வழிபாட்டு விழுமியங்களில் “தமிழர் அடையாளம்” என்ற அரசியல்
மூக்கை நுழைக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு இயல்பாகவே எழுகிறது. ஐம்பது
ஆண்டுகளாக சிறுபான்மையாக உணர்ந்தவர்களுக்கு எழும் இயல்பான அச்சம் தான்.
மலையாளிகளுக்கு இருக்கும் இன உணர்வு போல் இங்கே வரவேண்டும் என்றால்
அவர்களை போல் வழிபாட்டு விழுமியங்களில் கை வைக்காமல் தமிழர் அடையாள
அரசியலை மேம்படுத்துவது தான் ஒரே வழி.
ஏற்கனவே நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படுகிற சமூகமாக இஸ்லாமிய சமூகம்
இருக்கிறது. அது போதாது என, மார்க்க விவகாரங்களில் முரண்பாடு உடையவர்களாக
பல இயக்கங்களாக பிரிந்து கிடக்கிறோம். இதில் இனம் என்பது எங்கள்
அனைவரையும் ஒன்றிணைப்பதாக இருந்தால் தமிழர் அடையாள அரசியலை இஸ்லாமியர்கள்
முழுவதுமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த அரசியல் எங்களை மேலும் மூன்று
இனமாக பிரித்து வைத்து எங்களுக்குள்ளே கலவரம் உண்டாக்கும் என்றால் இந்த
அடையாள அரசியலை இஸ்லாமியர்கள் புறந்தள்ளிவிடுவார்கள்.
என்னுடைய கருத்து என்பது தமிழர் அடையாள அரசியல் நிச்சயம் தேவை என்பது
தான், ஆனால் அது சரியான நபரால், சரியான கருத்தியல்களால் கவனமாக
கையாளப்படவேண்டும். அது மற்றுமொரு சிவசேனாவிற்கு வழிவகுத்து விட கூடாது
என்பது மட்டுமே இஸ்லாமியர்களுடைய அச்சமாகும். இஸ்லாமியர்கள் எப்போதுமே
தங்களை தமிழர்களாக தான் காலங்காலமாக எண்ணி வருகிறார்கள், ஆனால் அது ஒரு
அரசியலாக விரிவடையும் என்றால் மேற்சொன்ன சிக்கல்கள் இயல்பாகவே எழும்
என்பது தான் சாமானியனாக என்னுடைய கருத்து.
-இறைதாசன் இம்ரான்

Aathimoola Perumal Prakash
சிறுபிள்ளைத் தனமான கட்டுரை! .
வீணாக மதப்பற்றினால் தமிழின இசுலாமியர் தியாகத்தை பிற இனத்து
இசுலாமியருக்கு தாரைவார்க்க வேண்டாம்.
தமிழின இசுலாமியரை தமிழராக ஏற்க எந்த தமிழனும் தயங்குவதில்லை.
வீணாக சந்தேகம் கொண்டு உருது, மலையாள, தெலுங்கு வந்தேறிகளை தமிழர்கள் ஆக்கவேண்டாம்.
தமிழுக்காக பாடுபட்ட உயிரையே கொடுத்த தமிழின இசுலாமியர் ஏகப்பட்ட பேர் உண்டு.
ஒரு உருது இசுலாமியனைக் காட்டிவிடுங்கள் பார்ப்போம்.
அல்லது நீங்கள் தமிழனாக ஆக்கப் பார்க்கும் தெலுங்கு வந்தேறிகளில்
தமிழுக்கு பாடுபட்ட ஒருவனைக் காட்டிவிடுங்கள் பார்ப்போம்

Aathimoola Perumal Prakash
//இவர்கள் எல்லாம் தமிழர், தமிழர் அல்லாதவர் என்று பிரித்தோ இங்கே நடக்கவில்லை//
இங்கேயே உங்கள் அறியாமை வெளிப்பட்டுவிட்டது.
தமிழரில் 90% பேர் சரியான இன அடையாளத்துடன் உள்ளனர்.
மீதி 10% பேர் மொழியை மறந்தவர்கள் அவர்களை 90% உடன் குழப்புவது வரையறை
இல்லை என்று கூறுவது தமிழருக்கு எதிரான ஆகச்சிறந்த செயல்.
// இங்கே சுல்தான்கள் ஆட்சி வீழ்த்தப்பட்டு விஜயநகர பேரரசு உருவான போதும்
இங்குள்ள மக்கள் அவர்களை நம்முடைய சமய வழிபாடு உடையவர்களாக தான்
பார்த்தார்கள்.//
இதில் உங்கள் வரலாற்று அறியாமை வெளிப்படுகிறது
துருக்கிய மங்கோலிய கலப்பினத்தார் நிறுவிய டெல்லி சுல்தானிய ஆட்சி மதுரை
வரை பரவி பாண்டியரை தோற்கடித்து மதுரை துருக்கியர் டெல்லியில் இருந்து
துண்டாகின்றனர்.
இந்த துண்டான பகுதியை தெலுங்கர் படை தோற்கடித்து வட தமிழகத்தை பிடிக்கிறது.
பிறகு தெற்கேயும் பாண்டியரை ஒழித்து முழு தமிழகத்தையும் பிடிக்கிறது.
அதற்கு முன்பு ஆட்சி எல்லை மட்டுமே மாறும். பெரிய அளவில் குடியமர்த்துதல் கிடையாது.
அதாவது மேல்தட்டு மட்டுமே பாதிக்கப்படும்.
நாயக்கர் ஆட்சி தெலுங்கு குடியேற்றம், தமிழ் ஒழிப்பு, சுரண்டல் என
அடிமட்டம் வரை சிதைக்கும் பணியை செய்கிறது.
வடக்கு வரை ஆண்ட தமிழர்கள் இதையெல்லாம் செய்யவில்லை.
அந்த மக்களிலேயே ஒருவனை நியமித்து கப்பம் மட்டுமே கேட்பார்கள்.
இது ஆங்கில ஆட்சியில் கூட நடக்கவில்லை.
ஆட்சி வீழ்ந்ததும் அவர்கள் காலி செய்ததுபோல தெலுங்கர் காலி செய்யவில்லை.
ஆங்கிலேயர் போனதும் திராவிடம் என மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர்.
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
//இன்றுவரை நாயக்கர்களுக்கும் தமிழ் குடிகளுக்கும் எந்த விதமான மோதல்
போக்குகளோ பிரிவினைகளோ, அவர்கள் தமிழர்கள் இல்லை என்ற தோற்றமோ வந்தது
இல்லை. அவர்களின் ஆட்சி நடந்த போதும் சரி, அதன் பிறகும் சரி அவர்களை
நம்மில் ஒருவராக தான் பார்த்தார்கள்.
தமிழர் என்று யோசிக்கவில்லை என்றாலும், காலம் காலமாக இங்கே தமிழ்
மொழியின் மீது பற்று கொண்டு தான் இருந்தார்கள். அது இங்கு இருப்பவர்களாக
இருந்தாலும் சரி, வெளியே இருந்து வந்த சாமானியர்களாக இருந்தாலும் சரி. //
நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு வந்தேறிகளை வேறுபாடு பார்க்காமல் தமிழர்கள்
தலையில் தூக்கிவைத்து ஆடினாலும் இதுவரை அவர்கள் தமிழருக்கு துரோகமே
செய்து வந்துள்ளனர்.
இவர்களே அடையாள மறைப்பு செய்து திராவிடம் என்ற பெயரில் கட்சிகள் அமைத்து
தலைவர்களாக கோடீஸ்வரர்களாக ஜமீன்தார்களாக உள்ளனர்.
தமிழுக்காக உழைத்த அல்லது தமிழருக்காக உழைத்த ஒரு தெலுங்கு வந்தேறியைக்
கூட காட்டமுடியாது.
தமிழகம் அழிவின் விளிம்பிற்கு வந்து நிற்க முதல் காரணம் தெலுங்கு
வந்தேறிகளான இவர்களே.
ஹிந்தியர் கூட அடுத்துதான்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
//இந்த தமிழ் மொழிப்பற்று எல்லாம் ஹிந்தி திணிப்பின் போது தான்
இந்தியாவிற்கு தெரியவந்தது.
அதுவரை நாம் இந்தியர்கள் என்று போராடி வெள்ளையனை வெளியேற்றி இருந்தோம்//
இதைவிட தமிழர்களை குறைகூற முடியாது.
1880 லேயே நீதிமன்ற வழக்காட்டு மொழிக்காக போராடிய மாயூரம் வேதநாயகம் இருந்தார்.
தமிழர் எப்பொதும் தமிழ் மீது பற்றுடனும் அதை போற்றி பாதுகாத்தும் வந்துள்ளனர்.
இமயம் வரை நமது மண் என்ற பாரம்பரிய எண்ணமே இந்திய பற்றான வெளிப்படுகிறது.
அதற்காக தமிழனை மறந்துவிட்டு இந்தியனாகிவிட்டோம் என்று கூறமுடியாது.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி

Aathimoola Perumal Prakash
//இந்த தமிழ் மொழிப்பற்று எல்லாம் ஹிந்தி திணிப்பின் போது தான்
இந்தியாவிற்கு தெரியவந்தது.
அதுவரை நாம் இந்தியர்கள் என்று போராடி வெள்ளையனை வெளியேற்றி இருந்தோம்//
இதைவிட தமிழர்களை குறைகூற முடியாது.
1880 லேயே நீதிமன்ற வழக்காட்டு மொழிக்காக போராடிய மாயூரம் வேதநாயகம் இருந்தார்.
தமிழர் எப்பொதும் தமிழ் மீது பற்றுடனும் அதை போற்றி பாதுகாத்தும் வந்துள்ளனர்.
இமயம் வரை நமது மண் என்ற பாரம்பரிய எண்ணமே இந்திய பற்றான வெளிப்படுகிறது.
அதற்காக தமிழனை மறந்துவிட்டு இந்தியனாகிவிட்டோம் என்று கூறமுடியாது.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
//ஆனால் ஹிந்தியர்களும் நமக்கு அந்நியர்களே என்று விளங்க வைத்தார்கள்.
அன்று தான் தமிழ்நாட்டு மக்கள், பிராந்திய அரசியலை நோக்கி திரும்பினார்கள்.
அந்த தமிழ் மொழிப்பற்றை சரியாக கையாண்ட திராவிட அடையாள அரசியல்,
மொழிப்பற்றை பற்றி மேடை தோறும் பேசியது.
அந்த மக்கள் புரட்சியை தங்கள் வசப்படுத்தி ஆட்சியிலும் அமர்ந்து கொண்டது.
அதுவரை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில்
இணைந்தது போல, பெரும்பான்மையான இஸ்லாமியர்களும் தங்கள் மொழி பற்றின்
காரணமாக தேசிய அரசியலான காங்கிரசில் இருந்து வெளியேறி திமுகவில்
முழுவதுமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள்//
காந்தியை தென்னாப்பிரிக்காவில் உருவாக்கியது தமிழரே!
ஜெர்மனிக்கு நெருக்கமாகி இங்கிலாந்து மீது போர் தொடுக்க வைத்தது.
நேதாஜிக்கு வழிகாட்டியாக இருந்தது செண்பகராமன் எனும் தமிழரே.
நேதாஜியை உருவாக்கியது கூட தமிழரே.
ஆக ஆங்கிலேயரை விரட்ட இந்தியத்தை கையிலெடுத்து பிறகு இந்தியரை கையாள
திராவிடத்தை கையிலெடுத்தனர்.
ஆனால் பிற தென்னிந்தியர் வடக்குக்கு எதிராக அணிதிரளவில்லை.
எனவே தற்போது திராவிடத்தை கைவிட்டு தமிழ்தேதியத்திற்கு நகர்ந்துவிட்டனர்.
தமிழ் இசுலாமியர் பெருவாரியாக தற்போது நாம்தமிழர் கட்சியில் சேர்ந்துவருகின்றனர்.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
//அந்த மொழிப்போர் காலக்கட்டத்தில், மா.பொ.சிவஞானம் அவர்களோ அல்லது
சி.பா.ஆதித்தனார் அவர்களோ தமிழ்தேசிய அரசியலை தனியாக மக்கள் முன் எடுத்து
சென்றிருந்தால், இஸ்லாமியர்கள் தமிழர் அடையாள அரசியலில் தங்களை
ஈடுபடுத்தி கொண்டிருப்பார்கள், ஆனால் திராவிட அடையாள அரசியல் தான்
வெற்றிபெற்றது.//
மீண்டும் மீண்டும் கூறுகிறேன். இந்தியெதிர்ப்பை தொடங்கயதும் நடத்தியதும்
இறுதியில் வென்றதும் தமிழரே!
திராவிடம் இடையில் வந்து இடையிலேயே துரோகம் செய்துவிட்டு ஓடிவிட்டது.
தமிழை பழித்தும் இழிவுபடுத்தியும் வந்தனர் திராவிட வந்தேறிகள்.
50 ஆண்டுகால ஆட்சியில் இன்றுவரை தமிழின் வளர்ச்சிக்காக எதுவுமே செய்ததில்லை.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
//இஸ்லாமியர்களுக்கு “தமிழர் அடையாள அரசியல்” என்பதில் வரும்
புரிதல்களையும், சிக்கல்களையும் பற்றி விரிவாக பேசுவோம்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் தாய்மொழியாக தமிழ், உருது, மலையாளம் பேசுகிறார்கள்//
முதலில் உங்களுக்கு தமிழர் வரலாறு மற்றும் அடையாள வரையறை பற்றி புரிதல் இல்லை.
தமிழின இசுலாமியர் பிற இன முஸ்லீம்களை தமது இனமாக நினைப்பதில்லை.
அதிலும் மலையாள இசுலாமியர் பிற மலையாளிகளை விட இனப்பற்று கொண்டவர்கள்.
உருது முஸ்லீம்களுக்கும் தமிழின முஸ்லீம்களுக்கும் ஒரு சாமானியன்
பார்வைக்கே பல வேறுபாடுகள் தெளிவாகத் தென்படும்.
மூன்று வெவ்வேறு இனங்களை முஸ்லீம் என்று ஒரே கொட்டகையில் அடைக்கவேண்டாம்.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 59 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
//தமிழகத்தில் ஆட்சி செய்த நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும்
தமிழைப் புறக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய
மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் அதை தமிழ் மொழியின் “இருண்ட காலம்”
என அழைக்கிறார்கள்.
ஆனால் அந்த காலக்கட்டத்தில் தமிழ் மொழியில் பல புதிய இலக்கியப்
படைப்புகளையும் மற்றும் புதிய இலக்கிய வடிவங்களையும் இஸ்லாமியர்கள்
அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமியர்கள் தான் தமிழ் இலக்கிய சுடரை
அணையாமல் பாதுகாத்தார்கள். இதிலே அவர்கள் தங்களை தமிழர்கள் என்று
உணர்ந்து தான் தமிழ் மொழிக்கு பங்காற்றி இருக்கிறார்கள்.
இப்படி மொழி பற்றிலே ஊறி திளைத்த இஸ்லாமியர்களில் உருது மொழியை
தாய்மொழியாக கொண்டவர்களும் உள்ளார்கள்//
இருண்டகாலத்தில் தமிழ் அழியும் நிலைக்கு போய்விட்டது.
தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் பெருங்காப்பியங்கள் தோன்ற தமிழோ
சிற்றிலக்கியங்கள் மூலம் மூச்சு விட்டுக்கொண்டு இருந்தது.
இதற்கு சீதக்காதி போல தமிழின இசுலாமியரின் பங்கு அளப்பரியது.
ஆனால் உருது முஸ்லீம்கள் தமிழுக்காக பாடுபட்டதாக கூறமுடியாது.
கடைசியில் ஒட்டுபோட்டு உருது இனத்தை கோர்த்துவிடவேண்டாம்.
எனக்குத் தெரிந்து உருது இசுலாமியர் அரபியை வளர்ப்பதில் மும்முரமாக
இருந்தனர். இந்தியை மனதார ஏற்றுக்கொண்டனர்.
தமிழை ஆட்சிமொழியாக்க முயற்சித்த காயிதே மில்லத் அவர்கள் உருது மக்களின்
இந்தி ஆதரவை தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
எனக்குத் தெரிந்து குரானை அரைகுறையுமாக தமிழில் மொழிபெயர்த்தவர் மட்டும்தான் உருது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 53 நிமிடங்களுக்கு முன்பு
Dharanidharan AP
பதிவின் நோக்கம் ஒன்று தான்...
"நாங்கள் இஸ்லாமியர்களாகவே தனித்து இருப்பதே நிலைபாடு; தேசிய இன அடையாளம்
பிரிப்பதை ஏற்கவில்லை"
=
தாராளமாக இருந்து கொள்ளுங்கள்..
உங்களை யாரும் தடுக்கவில்லை..
அதற்காக தமிழியத்தை சமரசம் செய்யுமாறு சொல்ல வேண்டாம்...
=
அப்படி மத வழியில் ஒன்றிணைவதே உங்கள் நோக்கம் எனில், உங்களுக்கு நான் கூறுவது...
'மத வழியில் தனித்த தேசிய இனமாக உருவாகி கொள்ளுங்கள்'
வாழ்த்துகள்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · 46 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
//இங்கே திராவிட அடையாள அரசியல் என்பது இங்கு இருக்கும்
இஸ்லாமியர்களிடையே மொழி பாகுபாடு காட்டவில்லை, அப்படி பிரிக்கவும் இல்லை.
ஆனால், அது எங்களை சிறுபான்மை என்று ஓரங்கட்டியது.
தமிழர் அரசியல் எங்களை பெரும்பான்மை என்றும் மண்ணின் மைந்தர்கள் என்றும்
எங்களை பெருமைப்படுத்துகிறது.//
ஈவேரா தன் வாழ்நாள் முழுவதும் மூன்று குலங்களை திட்டியே வந்துள்ளார்
அவர்கள் பார்ப்பனர், பறையர், இசுலாமியர்.
திமுக வெளிப்படையாக திட்டியதில்லை.
ஆனால் இசுலாமியர் வளர்ச்சிக்காக எதுவும் செய்ததில்லை.
பிற தமிழர்களைப் போல முடிந்தவரை பயன்படுத்திவிட்டு ஓரம்கட்டிவிட்டனர்.
இதை நீங்கள் உணர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ்தேசியத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாக தோன்றுகிறது.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 41 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
//இங்கே “யார் தமிழர்” என்ற கேள்வி இயல்பாகவே எழும். தமிழ்நாட்டில்
இருக்கும் அனைவரும் தமிழர் என்று தான் இங்குள்ள பெரும்பான்மை மக்கள்
தங்கள் மனதில் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் இந்த தமிழ்
சமூகமே காலம் காலமாக குடிகளாக, சாதிகளாக, சமுதாயங்களாகவே வாழ்ந்து
பழக்கப்பட்டவர்கள். அதனால் அவர்கள் இயல்பாகவே தமிழ் இனம் என்று யோசித்ததே
இல்லை.
இங்கு தமிழர் என்ற அடையாளம் “தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்கா?” இல்லை
“தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கா?” அல்லது “தமிழ் சாதிகள் என்று
வரையறுக்கும் சாதிக்காரர்களுக்கு மட்டுமா?” என்று கேள்வி எழுகிறது.
அதனால் தான் இந்த தமிழர் அடையாள அரசியல் என்பதில் “தமிழர் அடையாளம்” யார்
யாருக்கு உண்டு என்பதில் தான் இங்கே பல குழப்பங்கள், சலசலப்புகள்
ஏற்படும்.
இப்போது “தமிழ் சாதிகள் தான் தமிழர்கள்” என்றால் என்ன என்ன சிக்கல்கள்
வரும் என்று பார்ப்போம்.//
நடைமுறைக்கு வெகுதொலைவில் இருக்கிறீர்கள்.
இங்கே வேற்றினத்தில் திருமணம் செய்த தமிழனையே கூட கலப்படைந்தவனாக எண்ணும்
நிலைதான் உள்ளது.
வீட்டிலே வேறுமொழியும் வெளியே வேறுமொழியும் பேசுவோரை தமிழர்களாக ஒரு
சாமானியன் கருதுவதில்லை.
அவர்கள் வெளியிலிருந்து நம்மை நம்பி பிழைக்க வந்தவர்கள் என்ற கரிசனம்தான்
உங்களுக்கு தமிழனாக ஏற்றுக்கொண்டதாக
த் தோன்றுகிறது.
தமிழர்களின் தீவிர இனப்பற்றுதான் வேற்றினத்தார் வெளியே தெரியாமல்
உருமறைப்பு செய்து அரசியல் செய்ய காரணம்.
சாமானிய தமிழன் தமிழினத்து இசுலாமியரை தமிழராகவே பார்க்கிறான்.
நம்மாளுக மதம் மாறிட்டாங்க அவ்ளதான் என்பதுதான் அவன் மனநிலை.
யார் தமிழர் என்ற கேள்வி எப்படி இயல்பாக எழும்?
தமிழன் யாருக்கும் தான் தமிழனா என்று சந்தேகம் வருவதில்லை.
எந்த தமிழும் யாரெல்லாம் தமிழர் என்று முட்டாள்த்தனமாக கேட்பதில்லை.
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
திருத்து · 25 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
//வேலூர், சென்னை, திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் உருது பேசும்
இஸ்லாமியர்களில் பலர் சில நூறு வருடங்களுக்கு முன் தமிழை தாய்மொழியாக
மட்டும் தான் கொண்டு இருந்தனர்.
இவர்கள் எல்லாம் ஹைதர் அலி, நவாப் மற்றும் நிஜாம் காலத்தில் அரசு
பணிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் உருது மொழியை கற்றனர்.
அதன் பின்னால் தங்கள் பேசும் மொழியாக உருது மற்றும் தமிழ் மொழியையும்
இணைத்து கொண்டனர்.
இவர்கள் தான் லெப்பை என்று அழைக்கப்படுபவர்கள் இவர்கள் உருதுவும்
பேசுவார்கள், தமிழும் பேசுவார்கள்.
இவர்கள் தமிழை தான் தாய்மொழியாக கொண்டிருந்தார்கள் என்பதற்கு உதாரணமாய்
அவர்கள் குடும்ப பெயர்கள் ஆதாரமாய் இருக்கிறது.
இன்றும் உருது பேசும் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்ப பெயர்களாக
நாட்டாமைக்காரர், சின்ன பக்கிர், கந்திரிக்காரர்(கந்தக பொடிக்காரர்),
ஜல்லடை காரர், ஊசி வீடு, கொட்லு காரர், ஆணைக்கார், ஏழு பானை மற்றும் பல
தமிழ் பெயர்களை தன்னகத்தே வைத்துள்ளார்கள்.
மேலும், உருது மொழியே தெரியாத லெப்பை இஸ்லாமியர்களும் உள்ளார்கள்.
ஆனால் இந்த உருது இஸ்லாமியர்களில் தங்களை தெக்காணி(தக்கினி), சேக்,
செய்யது மற்றும் பதான் என்று அழைத்து கொள்பவர்கள் மட்டுமே வடநாட்டில்
இருந்து இங்கே மார்க்க பணிக்காக இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆனால் இந்த பெயர்களோ மொழியோ இஸ்லாமியர்களை பிரித்து விடவில்லை. இதில்
எப்படி நீங்கள் சாதியை வைத்து மொழியை வைத்து தமிழரை அடையாளம்
காணப்போகிறீர்கள்//
துருக்கிய வம்சாவழிகள்தான் மைசூர் அரசு பரவியபோது அதன்கீழ் ஆற்காடு
நவாப்களாக இருந்தனர்.
திப்பு சுல்தானும் ஐதர் அலியும் உருது பேசியவர்கள் கிடையாது.
அவர்களிடம் பணிக்கமர ஏன் உருது கற்கவேண்டும்?
இவர்கள் சென்னை தமிழில் பல உருது வார்த்தைகள் கலந்ததற்கு காரணம்.
லெப்பைகள் வெளியே இருந்து வந்தவர்கள்தான்.
இவர்கள் காலப்போக்கில் தமிழையும் பேசத்தொடங்கினர்.
1200களிலேயே பாண்டியன் அவையிலே இரண்டு மரைக்காயர் இருந்தனர்.
அருணகிரிநாதர் முருகரை ராவுத்தனே என்று பாடியுள்ளார்.
ஆனால் லெப்பை பற்றி இப்படி எந்த குறிப்பும் இல்லை.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · திருத்து · 17 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
//சென்னை, வேலூர் தவிர்த்து மற்ற இடங்களில் தமிழ் இஸ்லாமியர்களும், உருது
இஸ்லாமியர்களும் மிகவும் இயல்பாகவே திருமணம் முடித்து கொள்கிறார்கள்.
கோவை, திருப்பூர் மற்றும் எல்லையோர மாவட்டங்களில் மலையாள இஸ்லாமியர்களும்
தமிழ் இஸ்லாமியர்களும் மணமுடித்து கொள்கிறார்கள்.
இப்படி இனக்கலப்பு செய்வதால் ஒருவர் “தமிழர் இல்லாமல் போய் விடுவாரா”
மற்றும் என்ன அடையாளத்தில் அவர் சேர்த்து கொள்ளப்படுவார் என்ற கேள்வியும்
முன் வைக்கப்படுகிறது.
இதுவெல்லாம் “தமிழர் யார்?” என்பதில் வரும் சிக்கல்கள் மட்டுமே.
அதன்பிறகு, நாம் தமிழர்கள் என்று உணர்ந்து வரும்போது, இஸ்லாமியனிடம்
இருக்கும் வழிபாட்டு விழுமியங்களில் “தமிழர் அடையாளம்” என்ற அரசியல்
மூக்கை நுழைக்குமோ என்ற அச்சம் அவர்களுக்கு இயல்பாகவே எழுகிறது.
ஐம்பது ஆண்டுகளாக சிறுபான்மையாக உணர்ந்தவர்களுக்கு எழும் இயல்பான அச்சம் தான்.
மலையாளிகளுக்கு இருக்கும் இன உணர்வு போல் இங்கே வரவேண்டும் என்றால்
அவர்களை போல் வழிபாட்டு விழுமியங்களில் கை வைக்காமல் தமிழர் அடையாள
அரசியலை மேம்படுத்துவது தான் ஒரே வழி//
வட தமிழகத்தில்தான் உருது பேசுவோர் அதிகம்.
அங்கே நடப்பதில்லை என்கிறீர்கள்.
நான் திருநெல்வேலி. இங்கே உருது இசுலாமியரும் உண்டு. ஆனால் ஒரு கலப்பு
திருமணத்தை கூட பார்த்ததில்லை.
தமிழின இசுலாமியர் உருது இசுலாமியரை மதிப்பதே கிடையாது.
ஆனால் இயல்பாக கலந்து உள்ளனர் என்று எதைவைத்து கூறுகிறீர்கள் என்றே புரியவில்லை.
பார்த்தாலே வெளியாள் என்று தெரியும் உருது மக்களை ஏன் தமிழராக மாற்றமுயல்கிறீர்கள்?
எந்த உருது இசுலாமியனும் தமிழ், தமிழர் என்று பேசி நான் பார்த்ததில்லை.
மலையாளிகள் கேட்கவே வேண்டாம்.
ஒரு மலையாள முஸ்லீம் இன்னொரு பிற மத மலையாளியை திருமணம் செய்தவதை
விரும்புவரே தவிர தமிழின இசுலாமியரை திருமணம் செய்வதில்லை.
நீங்கள் எல்லையோரம் என்று கூறுவதால் தமிழ்ச்சாதியாக இருந்து தமிழை மறந்த
மக்களாக இருக்கலாம். இது போன்ற மொழி கடந்த திருமணங்கள் மிகவும் குறைவாகவே
நடக்க வாய்ப்புள்ளது.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · திருத்து · சற்றுமுன்
Aathimoola Perumal Prakash
//இந்த அரசியல் எங்களை மேலும் மூன்று இனமாக பிரித்து வைத்து
எங்களுக்குள்ளே கலவரம் உண்டாக்கும் என்றால் இந்த அடையாள அரசியலை
இஸ்லாமியர்கள் புறந்தள்ளிவிடுவார்கள்//
தமிழர் அடையாளம் தெளிவாக இல்லாதவர்கள்தான் புறந்தள்ளுவார்கள்.
இனப்பற்று உள்ள இசுலாமியர் உண்மையில் இசுலாமியரில் யார் தமிழர் யார்
வேற்றினம் என்று பிரித்த அறியப்படவே விரும்புவார்.
உருது மலையாள இசுலாமியருடன் கலந்துறவாடி பிறகு நாங்கள் தமிழர் என்றால்
அது சந்தேகத்தை தரும் அல்லவா?
மூன்று பேருக்கு இடையே கலவரம் வருமாம்.
மிகப்பெரும்பான்மையான தமிழின இசுலாமியரை எதிர்த்து பிற இன இசுலாமியன்
என்ன செய்துவிடமுடியு
ம்?
அதுவும் சக தமிழன் கூட நிற்கும்போது?

Mohamed Imran Mohamed Arieef
இதோ கலவரம் வந்துவிட்டதே பெரும்பான்மைவாதம்..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 13 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
பெரும்பான்மை தமிழர். தமிழர்கள் ஒரு கலவரத்தை ஆரம்பிப்பார்கள் என்று
நினைக்கிறீர்களா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 8 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
கன்னடன், மலையாளி, தெலுங்கன் தமிழரை அடித்து விரட்டியபோதெல்லாம் இங்கே
இருந்த மொழிவழி சிறுபான்மை மீது இதுவரை எத்தனை கலவரங்கள் நடந்தன என்று
கூறுங்கள் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக