சனி, 24 பிப்ரவரி, 2018

சீமான் புலிகள் தொடர்பு ஈழத்தமிழர் கட்டுரை

aathi tamil aathi1956@gmail.com

11/11/17
பெறுநர்: எனக்கு
செ பிரபாகரன், 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
சீமானுக்கும் புலிகளுக்கும் என்ன தொடர்பு.!
___ஈழ சகோதிரியின் பதிவு
நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின்
பிறந்த நாளுக்கு பலர் முகநூலில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிலர் எதிராகவும் விமர்சித்திருந்தனர். அதில் ஈழத்தை சேர்ந்தவர்களும்
இருந்தனர். அதிலை சீமானை எதிர்த்த எல்லாரும் பொதுவா வைச்ச குற்றச்சாட்டு
# சீமான் ஈழத்தமிழரின் காசில் வாலிரார். அவருக்கு புலம் பெயர் ஈழத்தமிழர்
பெட்டி, பெட்டியா காசு குடுக்கினம்.
# வீடு, கார் வாங்க பணம் எப்படி வந்தது.
# தலைவரை 2மணித்தியாலம் தான் சந்தித்தார்.
இப்படி அவருக்கு எதிரான (வயித்தெரிச்சல்) பட்டியல் கொஞ்சம் நீளம் தான்.
அவர் போலியான மனிதரெண்டு நிருபிப்பதற்கெண்டு, அதற்கான
ஆக்களைத்தேடுவதிலும் சிலர் முனைப்பு காட்டினர். ஒருவர், இருவரை சாட்சி
சொல்ல "டேக் பண்ணி" மேடையிலையும் ஏற்றினர்.
வெளிநாட்டில இருக்கிற எங்கட சனத்துக்கு உழைக்கிற காசுல தாங்கள் வாழவே
சிரமப்படுகுதுகள்!
இதில பெட்டி, பெட்டியா குடுத்தவையோ?
அந்த பெட்டி, பெட்டியா காசு கொடுத்தவரை தான் காட்ட மாட்டங்களாம்.
சீமானின் ஈழப்பயணம் பற்றியும், புலிகளின் நடைமுறை பற்றியும் சுருக்கமா பாப்பம்.
# அண்ணை (தலைவர்) போராட்டத்தை ஆரம்பித்த போது,80களில் தானாகவே
பெடியள்(பெடியள் என்றால் ஆண் புலிகள் என பொருள் )
போராட்டத்தில் இணைந்தனர். இதில பலர் வீரச்சாவைடைந்து போக, பெரும்
பங்கினர் இந்திய இராணுவத்துடன் சண்டையிட பின்வாங்கி விலகி வெளிநாடு
சென்றனர்.
அவர்களில் பலர் தான் பின்னைய நாளில் இயக்கத்தின் வெளிநாட்டு
நிர்வாகத்தில் இணைந்து காசு சேர்த்த செயல்பாட்டாளர்க
ள். அந்தக்காசுகளை 2009க்கு பின்னர் சுருட்டியவர்களில் முதன்மையானவர்கள
ும் இவங்கள் தான்.
# இதில இயக்கம் கலைச்சு விட்டவையும் அடங்கும்.
இப்ப இவையலில் பலர் "முன்னர் துவக்குடன்" எடுத்த படங்களை முகநூலில்
போட்டு "விழப்பமில்லாத பெடியளுக்கு" முகநூலிலை தளபதி ரேஞ்சுக்கு பில்டப்
பண்ணிர காமெடியலும் நடக்குது.
# அடுத்த முக்கியமான இளைஞர் இணைவு இந்திய இராணுவ காலகட்டத்தில் இயக்கம்
அழிவின் விளிம்பில் இருந்த நேரம், மரணம் நிச்சயம் என்று தெரிந்தும்
இணைந்த பெடியள்..
# அடுத்தது 1990க்கு பிறகு சண்டை ஆரம்பமான உடனை,தானாகச் சேர்ந்த பெடியள்.
# 95க்கு நடுவில இயக்கத்தின் பிரச்சாரத்தில் இணைந்த பெடியள்
# கடைசியா , விசுவமடுவுக்கு ஆமி வந்த பிறகு, "வில்லங்கத்துக்கு
இணைச்சதுகள்" முள்ளிவாய்க்காலுக்கு போறதுக்கு முன்னமே துவக்கை போட்டிட்டு
ஆமிட்ட போய் கையை தூக்கின கோஷ்டி.
இதில நான் கடைசியா சொன்ன கோஷ்டி தான் இப்ப முகநூலிலை, இயக்கத்தின்றை
ஒட்டு மொத்த பிரதிநிதியா நிண்டு அறிக்கை விடுற கோஷ்டி
# இதுகளுக்கு சண்டையெண்டா என்னெண்டு தெரியுமோ தெரியேல்லை, ஆனால்
கதையெண்டால் கைலாயம் தான்.?
அடுத்தது இன்னொரு கோஷ்டியும் இருக்கு.! அவை யாரென்டால் திண்டது
செமிக்காமல் முகநூலில சுத்திரவை, இயக்கத்த கண்ணாளை பாக்காத 2009க்கு
பிறகு வயசுக்கு வந்த கோஷ்டி. இதுகளுக்கு இயக்கத்தையும் தெரியாது,
இயக்கதின்ற கொள்கையும் தெரியாது. ஏனோ தானோ எண்டு சுத்துதுகள்.
இதில எனக்கு தெரிஞ்ச ஒருத்தனின் நண்பன் சொன்னான், SO அண்ணைக்கு(சூசை )
மோட்டர் அடிக்க கடைசி நேரம் தான் தான் காட்டி குடுத்தத்தெண்டான்.
விசாரிச்சு பாத்தா விசுவமடுவுக்கு ஆமி வந்த நேரம் இயக்கத்துக்கு வந்தது
தான் அதுவும்.
இந்த முகநூலிலை எனக்கு தெரிய 20வருஷத்துக்கு (2009 வரை) மேல சண்டையில
நிண்ட பெடியளும் இருக்கிறாங்கள். அவங்களிட்டை இருந்து, சீமானுக்கு எதிரா
எந்தவித தேவையில்லாத கருத்துக்களும் முகநூலில் வராது. எல்லாத்தையும்
பாத்தபடி இருக்கிறாங்கள்.
அடுத்தது இயக்கத்திண்ட முழுநேர ஆதரவாளராக சமையல் கூடங்களில், மற்றும்
ஆயுததொழிற்சாலையிலை இரவு பகலா வேலை செய்த எங்கட சனங்களும், இரகசிய
மாவீரர் பெற்றோரோ இதுவரை தங்களை வெளிக்காட்டி விலாசமடிக்கவில்லை.
ஆனால் இடையில ஓடிவந்ததுகளின்ட்ர அளப்பறையத் தான் தாங்க முடியேல்லை.
இப்ப தலைவருடனான சந்திப்பு பற்றி பாப்பம்.
இயக்கத்திலை ஒரு நடைமுறை இருக்கு.!
இரகசியம் பேணல்.!
தலைவருடனான சந்திப்போ அல்லது அவரது வதிவிடமோ மக்களுக்கு மட்டுமல்ல
போராளிகளுக்கும் தெரியாது. தலவருடனான சந்திப்பு, "சம்பந்தப்பட்ட
போராளிகளைத் தவிர" யாருக்கும் தெரியாது.
அதை யாரும் தெரியுமெண்டு, போராளியல்லாத ஒருவரோ அல்லது இயக்கத்தில்
இருந்து துரத்தப்பட்ட/
விலகியவர்களோ சொன்னால் அவனே பொய்யன்.
# தலைவருடனான சந்திப்புகள் பலதரப்பட்டது.
# அதில் கௌரவத்தின் நிமித்தமான சந்திப்பு
# புலம் பெயர் தேச செயற்பாட்டாளர்க
ளுடனான சந்திப்பு
# தமிழக போராட்ட ஆதரவாளர்களுடனான சந்திப்பு
இப்படி போராளிகள் தவிர்ந்து பல காரணிகளுடன் அவருடனான சந்திப்பு இருக்கும்.
இதில் பெரும் பாலும் எல்லோருடனும் ஒருமுறையே சந்திப்பு நடைபெறும். அந்த
சந்திப்பிலேயே அவர்களுடனான உரையாடல் நிறைவு பெற்றிருக்கும்.
# இதில் சிலரிடம் ஏதாவது பணிகள் கொடுத்திருந்தால் அவர்களுடன் மீண்டும்
சந்திப்பு நடைபெறும்.
இனி சீமானின் பயணம் பற்றி பார்ப்போம். சீமான் தாயகம் வருவதற்கு முன்னம்
திரைத்துறையை சேர்ந்த பலரும், ஈழ ஆதரவாளர்களும் தாயகம் வந்து
சென்றிருந்தனர்.
அவர்கள் வந்து சென்ற பின்னர் அவர்கள் பற்றியும் இயக்கம் எதுவும்
பேசியதில்லை. சீமான் தாயம் வந்த போது கேணல். சேரலாதன்(மிரோச்) தான்
பயணத்தை ஒழுங்கு செய்திருந்தான். சீமானை கவனித்ததும் மிரோச் தான்.
சேரலாதன் பொதுவெளியில் திரிந்த போராளி என்பதால் அவனுடனான சீமானின்
செயல்பாடுகள் வெளியில் தெரிய சந்தர்ப்பம் அதிகம். அதையும் தாண்டி சீமான்
வேறு துறைசார் பொறுப்பாளர்களுட
னும் உறவில் இருந்தார் என்பது பலருக்கு தெரிய சந்தர்ப்பம் இல்லை.
தமிழகத்தை பொறுத்தவரை ஆரம்பத்தில் வைகோ, மணியண்ணை, நெடுமாறன் ஐயா
போன்றவர்கள் ஈழ ஆதரவின் மூலம் பெரும் உதவியை செய்தவை தான். அதை இயக்க
பெடியளோ அல்லது அண்ணையோ எண்டைக்கும் மறக்கேல்லை.
ஆனால் அண்ணை எதிர்பாத்த தமிழக மக்களின்ட்ர" ஈழ ஆதரவு எழுச்சி"
ராஜிவ்காந்தியின்ற மரணத்துக்கு பின்னர் இல்லாமல் போயிட்டுது.
ஆரம்பத்தில ஈழ ஆதரவில் இருந்த "தமிழகத்து தலைவர் மாராலை" அதை செய்ய முடியேல்லை.
அதை செய்ய புதுசா ஒராளை உருவாக்கவேண்டிய தேவை அண்ணைக்கு வந்தது. இதுக்கு
பழைய ஆக்கள் கோவிக்கிறதிலை பயனில்லை.
அண்ணையை பொருத்தமட்டில திறமைக்கு தான் முதலிடம். முப்பது வருஷம்
இயக்கத்தில் இருந்த அப்பையா அண்ணைக்கும் லெப்.கேணல் தான் ராங், 3 வருஷம்
இயக்கத்தில இருந்த ஜோய்யுக்கும் லெப்.கேணல் தான். இயக்கத்திலை திறமைக்கு
தான் முதலிடம். இது தான் இயக்கத்தின்ற வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
சீமான் ஈழம் வந்த போது எனக்கு தெரிய,அண்ணையை இரண்டு தடவை சந்திச்சவர்.
(மூன்றாவது முறையும் சந்தித்ததாக ஒரு நண்பன் கூறினான். அது நடக்கும் போது
அங்கு நான் இல்லாததால் அதை விடுவம் )
அந்தநேரம் அண்ணையின் பாதுகாப்பு பணியில் இருந்த போராளியல் சிலர்
இண்டைக்கும் உயிரோடை தான் இருக்கினம். அதுவும் என்னுடைய முகநூலிழையும்
இருக்கினம்.
ஒரு தடவை தான் சீமானை, தலைவர் சந்திச்சவர் எண்டு "வேலி ஓணான்களில்"சாட்
சியை வச்சு கம்பு சுத்திரத்தை நிப்பாட்டுங்கோ. எத்தின முறை சந்திச்சா என்ன?
செய்யிற வேலையின்ற வேகம் தான் முக்கியம்.
எத்தனையோ பேர் தமிழகத்தில இருந்து வந்து, அண்ணையை சந்திச்சு சென்றவை.!
ஏன் எல்லோரிட்டையும் "முன்னெடுக்கச்" சொல்லி SO(சூசை) அண்ணை சொல்லேல்லை?
அதை ஏன் 2மணித்தியாலம் சந்திச்ச சீமானிட்ட சொல்லோனும்.?
இதிலை போனில கதைச்சது SO (சூசை) இல்லை எண்டோ அவற்றை குரலிலப் போல
மிமிக்கிரி பண்ணி இருக்கெண்டோ இதிலை வந்து காமடி பண்ணி புலம்பக்கூடாது.
SO(சூசை) அண்ணையை தெரியாட்டி மூடிக்கொண்டு இருக்கோனும்.
ஆரம்பத்தில சேரலாதனிண்ட தொடர்பில இருந்த சீமான், காலப்போக்கில் ஒரு சில
பணியின் நிமித்தம் அம்மானிட்ட நேரடித் தொடர்பிலிருந்த புலனாய்வுப்போரா
ளிகளால் வழிநடத்தப்பட்டார்.
அந்தப்போராளிகளும் இண்டைக்கும் உயிரோடை தான் இருக்கினம்.
அந்த போராளிகளில் முக்கிய போராளி ஒருவர் தான் ஈழ ஆதரவுத் தலைவர் மார்
எல்லாரையும் கையாண்டவர்.
இயக்கம் முள்ளிவாய்க்காலில் இறுதியில் நிண்ட நேரம், இயக்கத்தின் அழிவு
தெரிந்ததும் எல்லா ஈழ ஆதரவுத் தலைவர் மாரும் போனை ஆப் பண்ணிப்போட்டு,
திமுக கருணாதிக்கு "காங்கிரசால்" கொடுக்கப்பட்ட வேலைக்கு
முட்டுக்குடுத்து தமிழக மக்களின்ட்ர எழுச்சியை தமிழ்நாட்டில் அடக்க
இவையல் தான் உதவி செய்தவை.
அவர்களும், அவையிண்ட அரசியல் எதிர்காலம் கருதி துரோகத்துக்கு துணை போனவை.
இவையளை உன்னிப்பா அவதானிச்ச பிறகு தான், இயக்கம் சீமானை
முன்னிலைப்படுத்தினது.
ஏனெண்டால் இறுதிவரை இயக்கத்தோடை தொடர்பில இருந்தது சீமான் தான்.
இந்த விசையம் "இடையில துவக்கை போட்டிட்டு ஓடின கோஸ்ட்ரிக்கு" தெரிய
சந்தர்ப்பம் இல்லை தான்.
இண்டை வரைக்கும் தொடர்பில் இருந்த அந்த போராளிகளிகளுடன், சீமான் இப்பவும்
பேசுகின்றார்.
ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு பிறகு மந்தமாக இருந்த ஈழ ஆதரவு, சீமானின்
வருகையின் பின் பட்டி தொட்டி எங்கும் போனதென்பது மறுக்க முடியாதென்பது,
சீமானுக்கு எதிரானவையின்ற மனச்சாட்சிக்கும் தெரியும்.
2009க்கு பிறகு தாயகத்தில் மாவீரர் பற்றியோ போராளிகள், இயக்கம் பற்றியோ
கரிசனைகள் குறைந்து செல்லுறதை பாக்கிரம். அதுக்கு உதாரணம் சினிமா
நாயகனுக்கு பாலூத்த எங்கட சில காவலிகள் திரியிறது அதிகரிச்சதா நீங்கள்
காணலாம்.
அதே போல தான் வெளிநாட்டிலையும் எங்கட சனம் நலஞ்சா பிரிஞ்சு பெடியலை
நினைவுகூறினம். அதிலையும் ரோலும், கொத்துரொட்டியும் திண்டு தான்
செய்யிறம்.
இப்படியே போனால் செத்த பெடியலை காலப்போக்கில் மறந்து போடுவம்.
இந்த முகநூலில் கம்பு சுத்திர எங்கடையவை ஏத்தினபேர் அண்ணையின்ற போட்டோவை
முகப்பில போட்டிருக்கிறியள்?
நான் உட்பட போடேல்ல.
ஆனால் தமிழ்நாட்டு பெடியள் அண்ணையை உடம்பில பச்சையே குத்திக்கொண்டு
திரியிறாங்கள். அந்தளவுக்கு அவரை நேசிக்கிறார்கள். அதுக்கு காரணம்
சீமானும் என்றால் பிழையில்லை.
இயக்கம் எண்டா என்னெண்டு தெரியாத முகநூல் போராளீஸ் உங்களுக்கு
பொழுதுபோகேல்லை, லைக்கு வேணும் எண்டிறதுக்காக கண்டதையும்
எழுதாதையுங்கோடாப்பா.
"யார் குத்தி எண்டாலும் அரிசி வரட்டும்" அது சீமானா இருந்தாலும் சரி
கௌதமன், திருமுருகன் காந்தியா இருந்தாலும் சாரி. தலைவர், மாவீரரை
முன்னிறுத்துவர்களுடன் சண்டை போடாமல், பிடிக்காட்டி கடந்து போங்கோ.
எங்கட அழிவுக்கு காரணமான திராவிடக் காட்சிகளை ஒண்டா இணைஞ்சு விரட்ட
முயற்சி செய்யுங்கோடாப்பா. உங்கட உள் வீட்டு சண்டையில அவன் குளிர்
காயிறான்.
உண்மையில சீமான் யாருக்கு இடைஞ்சல் எண்டு பாத்தியல் எண்டால் அது
சிங்களவனுக்கும், இந்தியனுக்கும், திராவிடன் எண்டிறவங்களுக்கும் தான்.
சிங்கவனை பொறுத்தமட்டில் இயக்கத்தின் எந்த அடையாளமும் இலங்கையில் இருக்க
கூடாது.
அதை மக்கள் மனங்களில் இருந்தும் அகற்றவே முயற்சிக்கிறான். அதனால் தான்
இந்த வேலையை சிங்களத்துக்காக செய்யிற கூட்டமைப்பின்ட்ர சிலீப்பர்
செல்களும், இந்திய, திராவிட செம்புகளும் வரிஞ்சு கட்டி சீமானை
எதிர்க்கினம்.
சீமான் இயக்கத்தை தூக்கிப்பிடிப்பதால் தமிழ் தேசிய அரசியல் தமிழ்நாட்டில்
காலூன்றி விடும் என்பதே இவர்களின் பயம்.
எது எப்படியோ தமிழ் தேசியம் தமிழ்நாட்டில் காலூன்றிட்டது.
-ஈழ சகோதரி
9 மணி நேரம் · பொது
நீங்கள், சே.திருநா பாரதி மற்றும் 214 பேர்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/09/blog-post_21.htm
l?m=1
நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
vaettoli.blogspot.pe

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக