சனி, 24 பிப்ரவரி, 2018

18ஆயிரம் மறவர் தொகுதி ஒரு லட்சம் ஓட்டுகள் தேவர் பெற்றார்

aathi tamil aathi1956@gmail.com

13/11/17
பெறுநர்: எனக்கு
14.01.1962 ல் மதுரை தமுக்கம் மைதானத்தில் தேவரும் இராஜாஜியும் ஒரே
மேடையில் தோன்றினார்கள். "நீண்ட நாட்களாகிவிட்டன அடியேன் உங்களின்
ஒருமிப்பு சக்தியில் நின்று பேசி" என்று தனது உறைய ஆரம்பித்த தேவரின்
பேச்சில் உதிர்ந்த முத்துக்கள் பின்வருமாறு..

பதவியை நான் நினைத்தவனுமல்ல; அப்படி நினைத்திருந்தால் அது என்னை
பொருத்தவரையில் மிக எளிது.
தேசத்திடம் பலனை எதிர் பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவனில்லை நான்.
தேசத்திற்கு இயன்றவரை கொடுத்து சேவை செய்யும் கூட்டத்தைச் சேர்த்தவன்
நான்.
நான் யாரையும் எவரையும் எதிரியாக கருதுபவனும் அல்ல. தவறுகளை கண்டிக்கிற
என்னை யாரேனும் எதிரியாக பாவித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
நான் பேசுவது, எழுவது சிந்திப்பது சேவை செய்வது எல்லாமே
தேசத்திற்காகவேயன்றி எனக்காக அல்ல.
நியாயத்திற்காக எதிர் நீச்சல் அடிப்பதால் காங்கிரசஸ்காரர்களின்
எதிர்ப்பிற்கு நான் ஆளாகி இருக்கிறேன்.
18 ஆயிரம் ஓட்டுகளை மட்டும் கொண்ட என் வகுப்பினர் வாழும் தொகுதியில் ஒரு
லட்சம் ஓட்டுக்களை வாங்கும் நான் எப்படி வகுப்புவாதியாக இருக்கமுடியும்.
தம்மிடம் உள்ள வகுப்பு வாதத்தை மறைக்க பிறரை வகுப்புவாதி என்று கூறுவோரை
மக்கள் தெரிந்து கொள்ளாமல் இல்லை .
எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் இரண்டு கண்களில் ஒன்று. இரு கண்களும்
சம சக்தியோடு செயல்பட்டாலன்றி ஜனநாகயம் வலிமையோடு நடக்க முடியாது.
உங்கள் தலைவிதியை ஐந்து வருடங்களுக்கு ஒப்புவிக்கும் ஒரு கடமை அல்லவா
ஓட்டுபோடுவது. காசுக்காக காத்திருக்காமல் அவரவர் வசதி, சக்திக்கு
தக்கவாறு இரண்டோ மூன்றோ எடுத்துப்போய் செலவிட்டு ஓட்டுப்போடுங்கள்.
அதுதான் நல்ல மக்களுக்கு அடையாளம்.
மேற்கண்டவாறு மணிக்கணக்கில் தனது பேச்சாற்றலால், மக்களின் உளங்களை தன்
பால் ஈர்த்த தேவர் அவைகளின் கடைசி பேசும் அதுவே.

தேவர் மறவர் பள்ளர் கடைசி பேச்சு சாதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக