வியாழன், 22 பிப்ரவரி, 2018

பெருந்தச்சு நாட்காட்டி 47

aathi tamil aathi1956@gmail.com

2/11/17
பெறுநர்: எனக்கு
 மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்அவையம்

13-ஆம் பதிவு

தொடர் பதிவு எண் - 47           நாள்: 27.10.2017

தொடர் நாள்: 300

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழுநிலவு
விளிம்பில் வெற்றி பெற்றுள்ளது.



            முழுநிலவு தோன்ற வேண்டிய நாள், வாய்ப்பாட்டின்படி06.10.2017.
அன்று மாலை 06.40-க்கு கிழக்கு வானில் ஒருபனை உயரத்தில் முழு வட்டத்துடன்
அளவில் பெரிதாகப்பொலிவுடன் தோன்றியது. நள்ளிரவை 12.40-க்கு
கடந்தது.விடிந்த பின்னும் 06.40 வரை மேற்கு வானில் தெரிந்தது.



நேரக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டால்தோல்வியென்று தள்ளி விடலாம்.
ஆனால் அது பெற்றிருக்கும்முன்னேற்றம் புதிய படிப்பினையைத் தந்திருக்கிறது


21.09.2017-ல் மறைநிலவு கணக்கிடப்பட்ட நிலையில்,வளர்பிறையின் இரண்டாம்
பிறை நாளில் துலக்கமாகத்தோன்றிய பிறையின் முதல் தோற்றம் 06.10.2017
வரைதாக்குப் பிடித்து ஆடுதலை விலகலைச் செய்தது. தேய்வுஎன்பதே இல்லை.
07.10.2017-ல் தேயத் தொடங்கியது.

            05.10.2017-ல் முந்தித் தோன்றி, விடியும் முன் மறைந்தபடியால்
06.10.2017-ல் தோன்றிய நிலவை வெற்றி நிலவாகக்கொள்ளலாம்.


            கடந்த ஆண்டுகளில் 06.40-க்குத் தோன்றியமுழுநிலவுகளை இரண்டு
திங்கள் சேர்த்துக் கணக்கிடநேர்ந்திருக்கிறது. அப்போதெல்லாம் அவை
வெற்றிபெற்றுள்ளன.

எதுவும் நடக்கலாம்:-

            வளர்பிறை என்பது மறைநிலவுக்கு மறுநாளில்தொடங்கி முழுநிலவு
வரையில் ஆன 15 நாட்கள் என்பதுவாய்ப்பாடு. மூவைந்தான் முறை முற்றுதல்
என்பதுஇதுவேயாகும்.


            வளர்பிறையின் மூன்றாம் நாளில் பிறையின் முதல்தோற்றம் மேற்கு
வானில் மாலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரலாம், முந்தலாம் அல்லது
பிந்தலாம். எப்படியாயினும் அதுஒரு வில்லின் உறுதியான வளைவை அல்லது
உதைவைக்காட்டுகிறது. முழுநிலவு நாள் அன்று அந்த வளைவிற்கு மறுவளவை, எதிர்
வளைவைக் காட்டி நிறைவு செய்கிறது. இதுவேஓதம் அல்லது விலோதம் போலும்.
வினோதம் அல்லது நித்த வினோதம் ஒரு சமணக் கண்டுபிடிப்பு. சமண
முக்குடைகளுள் ஒன்றன் பெயர் நித்த வினோதம், தஞ்சைப் பெரிய கோயிலை
வடிவமைத்த பெருந்தச்சர்களுள் ஒருவரது பெயர் நித்த வினோதப் பெருந்தச்சன்.
நித்த வினோதப் பெருந்தெரு தஞ்சையில் இருந்தது.

            நிலவின் இந்த இரு விளிம்புகளின் முழுவட்டம் பெண்களின் கன்னக்
கதுப்புடன் ஒப்பிடப்படுகின்றன. கோள் ஒழுக்கம் அமையத் திரு நுதல் மகளிரின்
பூப்புச் சுழற்சிக் கேற்ப கன்னக் கதுப்பு உறுதிபெறும் என்று
அறிந்திருந்தினர் பழந்தமிழர். அது கடற் பரப்பில் காற்று அசைவதன்
அறிகுறியாக வியக்கப்பட்டது.

            “ஓண்குழை திகழும் ஒளிகெழு திருமுகம்

          திண்காழ் ஏற்ற வியல் இரு விலோதம்

          தெண்கடல் திரையில் அசைவளி புடைப்ப” (மதுரைக் காஞ்சி-48-50)

            ஆகையினால் ஒரு வளர்பிறையின் முதல் தோற்றத்தில் அடி
விளிம்பையும், முழுநிலவில் மறுவிளிம்பையும் கணக்கிட்டு இடை நாட்களை
அளந்து அளந்து அறுதியிட்டு தம்மைத் தாமே உறுதி செய்வது திருத்தகுதி
போலும்.

            மறைநிலவை நடுவில் வைத்து முன்னும் பின்னும் நோன்பு இருத்தல்
என்பது ‘விரதம்’ என்ற பேச்சு வழக்காக இவ்வாறு பயிலப் பட்டிருக்கலாம்
என்பது சீவக சிந்தாமணியில் உள்ள ‘விரதம்’ குறித்த செய்திகளில் இருந்து
அறியக் கிடைக்கிறது.

            இம்முறை வளர்பிறை 2-ம் நாளில் அடிவிளிம்பாகிய பிறை
தோன்றிடினும், 15-ம் நாளில் மறுவிளிம்பாகிய மதி நிறைவு பெற்ற படியால்
06.10.2017-ல் கடந்து சென்ற முழுநிலவை வெற்றி பெற்ற முழுநிலவாகக்
கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.

ஐப்பசி முழுநிலவு – பிறையும் மதியும்:-

            06.10.2017-ல் கடந்து சென்ற முழுநிலவு ஐப்பசி மாதத்து
முழுநிலவு ஆகும். பிறையின் முதல் தோற்றம் வளர்பிறையின்2-ம் நாள்.
மறுவிளிம்பு 15-ஆம் நாள். புரிந்து கொள்ள வேண்டிய புதிய செய்தி யாதெனில்,
அடி விளிம்பை பிறை என்றும், நிறைவை நோக்கிய மறு விளிம்பை மதி என்றும்
பழந்தமிழர் அழைத்தனர் என்பது. நாள் முதிர் மதியம் என்பது மதியின்
நிறைவைக் குறிப்பதாக அமைகிறது.

மிகச் சரியான வெற்றி நிலவுநாள் எது?

            பிறையின் அடிவிளிம்பு 3-ம் நாளிலும், மறு விளிம்பு 15-ம்
நாள் மாலை மிகச் சரியாக 06.00 மணிக்கும் அமைந்து அன்று நள்ளிரவில் நடு
வானில் உச்சி நின்று, குளிர்ச்சி பெற்று கொற்றக் குடைபோல நிற்கும்
தோற்றம் காட்டுவதே மிகச் சரியான வெற்றி நிலவு நாள் என்று அழுத்தமாகப்
பதிவு செய்கிறது பழந்தமிழ்.

எது மறைநிலவு நாள்?:-

            கடந்த 06.10.2017-ல் அமைந்த முழுநிலவை வெற்றி நிலவாகக்
கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த நாளைத் தவிர்த்து அதன் தொடர்நாள்
15-ல் 21.10.2017-ல் மறைநிலவு பொருந்த வேண்டும்.

            பஞ்சாங்கம் 19.10.2017-ல் மறைநிலவைக் குறிப்பிடுகிறது.
மறைநிலவு நாளில் வரவேண்டிய தீபாவளி இம்முறை 18.10.2017-ல் வந்து
விட்டதாம்! உண்மையில் இவ்வாண்டில் இதுவரை 3 முழுநிலவுகள் நாள் குறைவு
படவில்லை என்றால் மறைநிலவு அமைய வேண்டிய நாள்24.10.2017. அவ்வாறெனில் 6
நாட்கள் முன்னதாகத் தீபாவளியைத் திட்டமிட்ட கூட்டத்தார் எப்படி
நல்லவர்களாக இருக்க முடியும் என்று ஐயப்படலாம்.

விடங்கு வாரும் அவிட்டப் பூணூலும்:-

            விடங்கு என்ற சொல் உடுக்கையைக் குறிக்கும். விடங்கன் என்றால்
உடுக்கை வாசிப்பவன். தஞ்சைப் பெரிய கோயிலில் உடுக்கை வாசித்தவனுக்கு ஆலால
விடங்கன் என்று பெயர். தகளிரை மேரு விடங்கன், தஞ்சை விடங்கன் என்பன
செப்புத் திருமேனிகள் என்று கருதப்படுகின்றன. அவை உடுக்கை ஒலிக்கு ஆடும்
தலையாட்டிப் பொம்மை போன்ற பெரிய கோயிலையும் குறிக்கலாம். விடங்குவார்
என்பது உடுக்கையின் வலக்கண் இடக்கண் இரண்டையும் இணைத்து கட்டப்படும்
வார். வலக்கண்ணில் அறைந்து அது இடக் கண்ணில் ஏற்படுத்தும் அதிர்வை வார்
கொண்டு கட்டுப்படுத்திக் கையாளும் நுட்பம் சத்தியக் கிரமம் என்னும்
சதையம் செய்தல் ஆகும். அந்த முறை சம்ஹிதா, பதம், கணம், ஜடா என நான்கு
படிநிலைகள் என்று இருக்கலாம் எனச் சிலர் கருதுகிறார்கள்.
பெருந்தச்சர்களுக்கு பதம், கணம் ஆகிவந்த கலை. ஜடா அல்லது சடை எனும்
சடைதலே சதையம் போலும்.

            உடுக்கை ஒலியைச் சதையஞ்செய்து, அந்த ஒலி சுட்டும் திசையில்
கூருகிர்க் கரணம் பிடித்து தளிச் சேரிப் பெண்டுகள் ஆடல் வழிபாடு
நிகழ்த்தினர் என்று கருதலாம். விடங்குவார் இப்படி இருக்க, திருவோணம்,
சதையம் என்ற இரண்டு தொடர் நாட்களுக்குஇடையில் அவிட்டம் என்ற பொய் நாளைச்
செருகி, அந்த அவிட்ட நாளில் பூணூலையும் போட்டுக் கொண்டு,அடுத்தவனை அட
அபீஷ்டு! என்று அழைத்த அம்பிகள் எப்படி நம்பகமானவர்களாக இருக்க இயலும்?.

            பஞ்சாங்கம் சொல்கிறது, அரசு விடுமுறை விடுகிறது என்பதற்காகவே
கண்ணை மூடிக் கொண்டு விழாக் கொண்டாடும் மூடக் கூட்டம் என்று
மறுதலிக்கும்? உடனடித் தீர்வாகப் பெருந்தச்சு நாட்காட்டியையும், நிலைத்த
தீர்வாகச் செவ்வாய்க் கோட்டமும் மறைநிலவு  நாளின் உண்மை நிலையைப்
படிப்படியாகப் புரிய வைக்கும் என்று நம்பலாம்.

நிழல்வாய் நேமி! தென்னவன் கொற்றம்! அறம் தருநெஞ்சின் அறவோர்!

            நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி

          கடம் பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க்

          கோலின் செம்மையும் குடையின் தண்மையும்

          வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப்

          பதியெழு வறியாப் பண்பு மேம்பட்ட

மதுரை மூதூர் மாநாகர் கண்டாங்கு

அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய

புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து

தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும்

மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழி

– (சிலம்பு: அடைக்கலக்காதை1-10)

இவையனைத்தும் புத்தாண்டின் வெற்றிப் பெருமிதம் பற்றிய மரபு வழிச் செய்திகள்.

பெருங் கோயில்களில் முழுநிலவு:-

            எழுநிலை மாடம், நெடுநிலை மாடம், பிறங்கு நிலை மாடம் என்று
போற்றப்பட்ட பெருங்கோயில்களில் இடை நிலங்களின் சுற்றுப் பகுதிகளில்
நிலவுப் பயன் கொள்ளும் நெடுவெண் முற்றங்கள் இருந்தன. அங்கிருந்து வானத்தை
நிமிர்ந்து பார்த்தால் மகர நெற்றி, வான் தோய் வன்ன புரிசை, சிகரம்
தோன்றாச் சேண் உயர் நல்லில் என்ற ஊசிக் கூம்புகள் நடுவானில் நள்ளிரவில்
நிலவு தலைக்கு நேராக வருவதை அல்லது வரத் தவறுவதை எளிதாகவும் மிகச்
சரியாகவும் உணர்த்தி இருக்கக் கூடும்.

            இன்று சுருங்கிய வடிவங்களாகக் காட்சி தரும் கற்றளிக்
கோயில்களின் இடைநிலத்தில் புறாக்கள் கூட ஒருக்களித்து நடந்து வரும்
உள்நாட்டிய கண்டங்களே உள்ளன. ஆயினும் அத்தகைய கோயில்களின் அருகில் சென்று
சற்றுத் தள்ளி நின்று நள்ளிரவில் நிமிர்ந்து பார்த்தால் உண்மையான நிலவின்
நிலையை இன்றும் கூட எளிதாகவும் மிகச் சரியாகவும் புரிந்து கொள்ளலாம்.

            தஞ்சைப் பெரிய கோயிலின் அரிய ஆவணம் ஆன ஜகதிப்படைக்
கல்வெட்டு, பொன்னின் திருக் கொற்றக் குடை ஒன்று நன்கொடையாகத் தரப்பட்ட
செய்தியைக் குறிப்பிட்டுள்ளது. வண்ணிகைத் திருக்கொற்றக் குடை என்று
சுட்டப் பட்டுள்ளது. ஒருவேளை அது வெண்ணிலவின் குறியீடாக இருக்கலாம்.

1)   ஸ்ரீ பலி கொள்ளும் பொன்னின் கொள்கைத் தேவர் … 829 ¾ கழஞ்சு 3 மஞ்சாடி

2)   பொன்னின் பத்மாஸந ஸ்ரீபலித்தாலம்…................…..995 ½ கழஞ்சு 4 மஞ்சாடி

3)   பொன்னின் கெஷ்கு பால தேவர் …………………......… 72 ½ கழஞ்சு -----

இம்மூன்றில் ஒலியெழுப்பும் தாலம் பிற இரண்டுபடிமைகளை விடவும் எடை
மிகுதியாகவுள்ளது.மூன்றாவது படிமையின் மொத்த உயரம் ‘பாதாகிகேஸாந்தம்
மூவிரகல மூன்று தோரை!’அதாவது ஒருவரதுஉள்ளங்கையில் அடங்கும். ஒலியெழுப்பி
ஒலியினைப்பொன் படிமையில் ஏற்றி, உள்ளங்கையில் வசப்படுத்தி,ஒலியை அழுங்கச்
செய்து நிலவை அரவணைத்தானாமன்னன் என்று ஐயப்படலாம்.

      தஞ்சைப் பெரிய கோயிலில் 240 சிவயோகியர் 24 குழுக்களாகப் பிரிந்து
ஆண்டு முழுவதும் 24 விழாக்களைஒழுங்கு செய்தனர். அவற்றுள் 12
விழாக்கள்திருச்சதையத் திருவிழாக்கள் அடங்கும். கோயிலில் தங்கி,ஒரு
நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொண்டு,குழுவாக இயங்கி அவரவர்
மூச்சுக் காற்றைநாட்காட்டியோடு இணைத்து முறை செய்தனர். அவர்கள்கண்டிப்பாக
முழுநிலவைப் போற்றியிருப்பர். 24 விழாக்களுள் ஆண்டின் 312-வது நாளில்
அமையும்கார்த்திகைக் கார்த்திகைத் திங்கள் விழாவும் ஒன்று.அவ்வாறு
காத்திருந்து முழுநிலவை உறுதிசெய்தகாலத்தில் தோன்றிய வெற்றிப் பெருமிதம்
எப்படிஇருந்திருக்கும் என்பதைக் கருவூராரின் திருவிசைப்பாவில் காண
முடிகிறது.

      பருவரை ஞாங்கள் வெண் திங்கள்

     தரள வான் தெருவில் இருளெலாம் கிழியும்

     இஞ்சிசூழ் தஞ்சை இராசராசேச்சரத் திவர்க்கே ….(திருவிசைப்பா)

இன்று முழுநிலவில் யாரும் விழித்திருப்பது இல்லை.கோயிலைத் திறந்து
வைப்பதும் இல்லை. நிமிர்ந்துநிலவைப் பார்ப்பதும் இல்லை. நன்றாக உறங்கி
விட்டதுதமிழர்களின் அரசு.

திருச்சதையத் திருவிழா:-

      ஆண்டு முழுவதும் 12 சதைய விழாக்களை இராசராசன்பல இடங்களில்
கொண்டாடினான். அவற்றுள் இராசராசன்பிறந்த நாள் வைகாசிச் சதையம்.
சித்திரைச் சதையம்கொண்டாடப்படுவது இல்லை.

      சித்திரைச் சதையம் நீக்கி விழா புறமாக

     வரும் வைகாசிப் பெரிய திருவிழாவிற்கு….(திருப்புகலூர்க் கல்வெட்டு)

            சித்திரைச் சதையம் நீக்கப்பட்டதால் தை முதல் நாளில்அமையும்
சதையம் கணக்கில் கொள்ளப்பட்டது. தைமாதத்தில் மட்டும் இரண்டு சதையம் வரும்
என்பதுகுறிப்பிடத்தக்கது.

            1934-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தஞ்சைப் பெரியகோயிலில்
ஐப்பசியில் சதைய விழா எடுக்கும் வழக்கம்ஏற்படுத்தப் பட்டது. தமிழக அரசு
விடாப்பிடியாக இன்னும்நடத்தி வருகிறது.

            இம்முறை 29.10.2017 மற்றும் 30.10.2017-ல்நடத்தவிருக்கிறது.
தமிழறிஞர்கள், கல்வெட்டு ஆய்வாளர்கள்,வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்
அனைவருக்கும் இதுதெரியும். திருவிசலூர் மற்றும் திருவெண்காடு
ஆகியஇடங்களில் ஐப்பசிச் சதையம் பற்றிய குறிப்புகள் இருப்பதாகஒவ்வொரு
விழாவிலும் சொல்லப்படுகிறது.

            இராசேந்திர சோழன் தனது தந்தையாருக்கு வைகாசிச்சதையத்தில்
விழா எடுத்த செய்தியைப் புறக்கணித்துவிடுகின்றனர்.

            எது எப்படியோ ராசராசன் மீட்டெடுத்த நாட்காட்டிமீளாதவரை
இந்தப் பஞ்சாங்கம் படுத்தும் பாடு குழப்பத்தையேவிளைவிக்கும். ஒரு
குறிப்பிட்ட மகுடத்தைச் செய்து கொடுத்து,ஐப்பசிச் சதைய விழாவில் இந்த
மகுடத்தை ராசராசன்படிமையின் தலையில் வைத்து கோயிலைச் சுற்றி வரவேண்டும்
என்று ஏற்பாடு செய்திருக்கிறது சங்கர மடம். அந்தமகுடத்தை அரசு கைப்பற்றி
வல்லுநர்களிடம் ஒப்படைத்தால்அதில் எந்தச் சரபோசியின் பெயரை
எழுதியிருக்கிறார்கள்என்று கண்டு பிடித்து விடலாம்.
            தஞ்சைப் பெரிய கோயிலுக்குள் 2010-ஆம் ஆண்டில்ஆழ்துளைக் கிணறு
அமைத்த போது தலையிட்டு வழக்குத்தொடுத்த ‘தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக்
குழு’கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது. இன்றும்கோயிலின்
நடுப்பகுதியில் சுவர் இடைவெளிக்குள் செல்லஇரும்புக் குழாய்களைச் செருகி
மரப்பலகைகளைத் தைத்துப்பாலம் அமைக்கும் அத்து மீறிய செய்கையை.
மக்களின்விழிப்புணர்வே அதனைத் தடுக்க வேண்டும்.
தரள வான் தெரு:-

            வெண்மையைக் குறிக்கும் பேச்சு வழக்குச் சொல்லாகத்‘தரளம்’
என்ற சொல் கையாளப் படுகிறது. தாராளம் என்பதுகூட அச்சொல்லின் வழியே
கிளைத்திருக்கலாம். தாராளமாகவான் தெருவில் வெண்திங்கள் உயர்ந்து
தோன்றுவதாகவியக்கப்படுகிறது. விண்ணில் செல்லும் முழுநிலவு,
வானில்தோன்றும் மீன்கள், விசும்பில் இயங்கும் காற்று,
வெளியில்நிறைந்திருக்கும் உயிர்ப்பாற்றல், வெட்டவெளியின்பேராற்றல்
ஆகியவற்றை உள்வாங்கி வசப்படுத்தி நீண்டநினைவு அலைகளின் ஊடாக நிலைத்த
மரபறிவைப்புதுப்பித்துக் கொள்ளும் தமிழர்கள் ஒரு போதும்
தமிழர்அல்லாதவர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றக் கூடாது.

            தமிழர்கள் தங்களது மரபு வழி வாழ்க்கை முறையைமீட்டெடுத்து
மீண்டும் முழுநிலவின் பயன் கொள்வது அடுத்ததலை முறையை வாழ வைக்கும்
என்பதில் ஐயம் இல்லை.

கதவுகளைத் திறக்கலாம்:-

                தஞ்சைப் பெரிய கோயிலில் சதையத் திருவிழாவினைஅரசு
விழாவாகக் கொண்டாடும் தமிழக அரசு மனதுவைத்தால், கோயிலின் கருவறையைச்
சுற்றிலும் பூட்டப்பட்டிருக்கும் ஐந்து கதவுகளையும் அன்றே திறந்து
விடலாம்.அங்கே அரிய ஓவியங்கள் இருக்கின்றன. அவற்றைக்காப்பாற்றவே ஆண்டு
முழுவதும் பூட்டி வைத்திருக்கிறோம்என்று தொல்லியல் துறையினர்
கூறுவார்களேயானால்அதற்கு மதிப்பளித்து மக்கள் செல்லத் தடுப்பு
அமைத்துஒழுங்கு செய்யலாம். எது எப்படியோ மக்கள் புரிந்துகொண்டால்
ஒருவராலும் கதவடைக்க முடியாது. ‘வெற்றித்தண்டு’ என்று ராசராசன்
குறிப்பிடும் திருப்பொறி, தண்டுமாப்பொறி என்று புறநானூறு சுட்டும் ஒன்று,
ராஜகேஸரியோடுஒக்கும் மரக்கால் போன்றது என்றும் அது உலக்உருண்டையின் ஆட்டை
நிமிர்வை அல்லது தளர்வைச் சுட்டிக்காட்டும் ஏற்பாடு என்று புரிந்து
கொண்டால் தமிழர்களின்பெருந்தச்சு மரபு அசைகிறது என்று பொருள்.

மாலையும் நள்ளிரவும்:-

            முழுநிலவு நாளுக்கான அறிகுறிகளைஉறுதிசெய்வதில் மாலை நேரமும்
நள்ளிரவும் பெரும் பங்குவகிக்கின்றன. குடிகளைக் காணவரும் அரசனின்
திருமுகம்போல மாலையில் முழுநிலவு தோன்றியது என்றும்,நள்ளிரவில்
குளிர்ச்சியுடன் மதிநிறைந்து ஏர்வண்ணம்காட்டிற்று என்றும் செய்திகள்
உள்ளன.

            குட்டுவன் குடிபுறந் தருங்கால் திருமுகம் போல

          உலகு தொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்

          பலர் புகழ் மூதூர்க்குக் காட்டி நீங்க ……(37-39 – சிலம்புநடுகற்காதை)

            தண்கதிர் மதியம் தான் கடிகொள்ள ….. (45 – சிலம்பு – நடுகற்காதை)

            வதுவை வேண்மாள் மங்கல மடந்தை

          மதியேர் வண்ணம் காணிய வருவழி ……(50—51 சிலம்பு–நடுகற்காதை)


            சேர நாட்டு அரசனும் அரசியும் நள்ளிரவில் காத்திருந்துகண்ட
வெற்றி பெற்ற முழுநிலவு நாளில் நடந்த விழாவில்,பறையூர்க் கூத்தச்
சாக்கையன் நிலவு நேர் நின்ற காட்சியைநடித்துக் காட்டினான் என்பதும், அது
பதினோராடலில்கொட்டிச் சேதம் என்ற ஆடலுக்கு இணையானது என்றும்புரிந்து
கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

            சிலம்பு நடுகற்காதையில் அடி எண் 30 முதல் 78 வரையில் ஓவியக்
காட்சியாக விரியும் இந்தச் செய்தி உயர்ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டால் அது
தமிழ்ப் புத்தாண்டுப்புரிதலுக்கு மிகவும் வலிமை சேர்க்கும் என்று
கருதலாம்.

            முழுநிலவில் சரக்கைக் கூத்து நடத்தப்பட்ட செய்திசோழர்காலக்
கல்வெட்டுக்களில் பதிவாகியுள்ளது. [பேராசிரியை முனைவர் புவனேசுவரி –
அரியலூர்- முனைவர்பட்ட ஆய்வேடு]

அடிப்படைப் புரிதலில் மாற்றுப் பார்வை:

உலகம் ஒரு மண் உருண்டை. தானாகச் சுழல்கிறது. அதன்சுற்றுச் சூழலும்
கதிரவனும் நிலவும் அப்படியே! இதில்உயிர்களி முயற்சியால் ஓர் ஒழுங்கு
என்பது எப்படி இயலும்? என்ற வினா இயல்பானதே.

            “கோளின் பாடு” என்பது உலகம் என்ற மண்உருண்டையின் போக்கு
அல்ல. அந்த உலக உருண்டையைக்கவ்விக் கிடக்கும் மொழுப்பான ஒட்டு மொத்த
உயிர்களின்பாடு என்ற மாற்றுப் பார்வையைப் புதுப்பிக்கிறது
பழந்தமிழ்மரபறிவு. அது தமிழ்ப் புத்தாண்டுத் தேடலின் ஊடாக
வலிமைபெறுகிறது.

            சிலர் பேசலாம். பலர் பேசாதிருக்கலாம். பலர்உணரலாம். சிலர்
உணராது இருக்கலாம். எதுஉண்மையானது என்று தெரிந்து கொள்வது ஒருதலைமுறையின்
கடமை. அந்த வகையில் தமிழர்களின்புத்தாண்டு பற்றிய மரபறிவு அனைத்தும்
நாட்காட்டியைவசப்படுத்தியே வளர்ந்திருக்கின்றன. எந்தெந்த
அறிவுத்துறைகளுக்கு நாட்காட்டி தேவைப்படுகிறதோ அந்தந்தஅறிவுத்
துறைகளுக்கெல்லாம் அரசின் அரவணைப்புதேவைப்படுகிறது.

            மறுதலையாக அரசை அரவணைக்கும்அறிவுத்துறைகளாக அவை
விளங்கியிருக்கின்றன என்றுபுரிந்து கொள்ள முடிகிறது.

            கலைகளின் கோட்பாட்டு அடிப்படைகளைத் துலக்கமுற்படும்போது
தட்டுப்படும் முதன்மைக் கோட்பாடுதமிழ்ப்புத்தாண்டு சார்ந்ததாக
இருக்கிறது.  அதன்அடிப்படையைப் புரிந்து கொள்ள இன்று ஒரு மாற்றுப்
பார்வைதேவைப்படுகிறது.

இவ்வாண்டின் இன்றைய நிலை:-

            ஆங்கில ஆண்டு 2017, இம்முறை மிகச் சரியாகவளர்பிறை 4-ஆம்
நாளில் தொடங்கியது. இன்று வரை 3 முழுநிலவுகள் முறையே ஒவ்வொரு நாள்
முந்திக் கடந்து விட்டபடியால் 3 நாட்கள் இழப்பில் ஆண்டு நாட்கள்
நிறைவைநெருங்கி வருகின்றன.

            இன்னும் இரண்டு முழுநிலவுகளே எஞ்சியுள்ளன. நிழலும் நெருங்கி
வருகிறது. இவ்வாண்டின் 12 முழுநிலவுகளை உறுதி செய்யும் அதே நாளில்
அதனுடன் 18 நாட்களைக் கூட்டி ஆண்டுக் கணக்கை முடித்து விடலாம். நிழலின்
திருப்பத்தையும் உறுதி செய்யலாம். மறுநாள்தமிழ்ப்புத்தாண்டு. இம்முறை அது
கிறித்து பிறப்பு நாளுக்குமுன்பாக அமைய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறாகத் தமிழ்ப்புத்தாண்டு:-

            தமிழ்ப்புத்தாண்டு புரிதலே புதிய செய்தியாக உள்ளஇக்கால
வேளையில், பிறருக்குப் புரியும்படி எடுத்துச்சொல்வதற்குத் தமிழர்களே பல
பயிற்சிப் படிநிலைகளைக்கடக்க வேண்டிய தேவை இருக்கிறது.

            இந்த வாய்ப்பாடு தமிழர்களின் கண்டு பிடிப்பு. தடுமாற்றத்தை
ஏற்படுத்துவது பகைவர்களின் கண்டு பிடிப்பு. என்று மேலோட்டமாக முடிவு
செய்து விட இயலாது. தமிழர்கள்தமிழ்ப்புத்தாண்டு புரிதலில் தன்னினப்
பார்வையை முதலில்பெற்றாக வேண்டும். நிலவின் தடுமாற்றம்,
தமிழர்களின்தளர்வினாலும் இருக்கலாம். தமிழர்கள் தங்களது மரபு வழிவாழ்க்கை
முறைக்குத் திரும்பாமல் இருந்தது கூடச் சரிவைஏற்படுத்தலாம். திருப்பு
முனைகளை ஏற்படுத்த வேண்டியஇடங்களை எல்லாம் நீட்டி நீர்த்துப் போகச்
செய்யாமல் உரியமுறையில் அழுத்தமாகத் திருப்பத்தை உறுதி செய்யவேண்டும்.
அது அழகு! அருமையும் தமிழுக்குப் பெருமையும்அதுவே.

            தமிழ் திரும்பினால் தமிழ்ப்புத்தாண்டு திரும்பும்! பண்கனிந்த
பாடலால் திரும்பிய தமிழ்புத்தாண்டைபாராயணம் செய்து விரட்டியடிக்கும்
சண்டாளச் சமற்கிருதஒலிப்புகள் காதில் விழாத தொலைவில் தமிழர்கள் ஒரு
தலைமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்.



இம்முறை வளர்பிறை:-

            21.10.2017-ல் மறைநிலவு நாள் கணக்கிட்ட படியால்,
2210.2017-ல் முதல் தோற்றம் காட்டிய பிறை கணக்கில்எடுத்துக்
கொள்ளப்பட்டுள்ளது.



21.10.2017 –

22.10.2017 –

23.10.2017 –

24.10.2017 -                 ஐப்பசிக் கடைசி நாள்

05.11.2017 -                 எதிர்பார்க்கப்படும்முழுநிலவு

            மேற்கண்ட வாய்ப்பாட்டின்படி 05.11.2017-ல்
முழுநிலவுஅமைந்தால் அது வெற்றி பெற்ற கார்த்திகை முழுநிலவாகிய11-வது
முழுநிலவு. 04.11.2017-ல் அமைந்தால் கடந்த இருமுழுநிலவுகளுள் ஒன்று
தோற்றது என்று கொள்ளலாம். 03.11.2017-ல் அமைந்தால் கடந்த இரு
நிலவுகளையும்தோல்விப் பட்டியலில் சேர்க்கலாம். ஆயினும்
நமதுஎதிர்பார்ப்பும் நோன்பும் 05.11.2017 வரை வளர்பிறை தாக்குப்பிடிக்க
வேண்டும் என்பதுதான். நல்லவைகளைஎதிர்பார்ப்போம். வருவதை எதிர் கொள்வோம்.
உள்ளதுஉள்ளபடி ஆவணப் படுத்துவோம்.

இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையத்தின் வெளியீடு

___---ooo000OOO000ooo---___

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக