சனி, 24 பிப்ரவரி, 2018

தற்சார்பு பொருளாதாரம் விவாதம் புலிகள் ஆட்சி பஞ்சாயத்துராஜ் புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

11/11/17
பெறுநர்: எனக்கு
சீனி. மாணிக்கவாசகம்
தற்சார்பு பொருளாதாரம் என்றால் என்ன?
பொருளாதாரம் பயின்றவர்கள், அல்லது, தற்சார்பு பொருளாதாரம் பற்றி
பேசுபவர்கள் யாராவது விளக்குங்களேன்.

Ganesharajah Ganesh
1990 - 1995/6 வரையான காலப்பகுதியில் தமிழீழத்தின் நிலப்பரப்புகளில்
விடுதலைப் புலிகளின் ஆட்சியில் வாழ்ந்திருந்தால் உணர்ந்திருப்பிங்கள்...
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 10:32 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
வாழவில்லை...
ஆனால், என்னென்ன செய்தார்கள் என்று ஓரளவிற்குத் தெரியும்...
குறிப்பாக பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்களில் இருந்து என்னென்ன
செய்தார்கள் என்று ஓரளவிற்கு தெரியும் Ganesharajah Ganesh
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 10:35 AM க்கு
Ganesharajah Ganesh
பனை மரத்தில் இருந்து மட்டுமில்லை,
தென்னை மரத்தை வைத்துக்கூட பல பொருட்களை செய்தோம்,
குறிப்பாக தேங்காய் எண்ணெய்யில்தான் விளக்குகள் தயாரித்தோம்...
இயற்கை விவசாயம்...ஆட்டெரு மாட்டெரு கோழி கழிவுகள்,மர இலைகுலைகள் மூலம்
பசளை தயாரித்து அதன்மூலம் விவசாய மற்றும் நீண்டகால மரங்களுக்கான பசளை
தயாரிப்பு,
பூச்சி கொல்லிகளை ஈழத்தில் இருந்த மர மூலிகைகளை கொண்டு தயாரித்தோம்,
வேப்பம்மர விதைகள்,இலைகள் மூலம் நுளம்பு(கொசு) சுருள்கள்...
சவர்க்காரம் தயாரித்தோம்...
நெல் வயல்கள் பரந்து விரிந்து இருந்தன,
செவ்வரத்தம் பூ,தேசிக்காய்(எலுமிச்சம் காய்) மூலம் சாம்பூக்களை தயாரித்தோம்,
பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் வீட்டுத்தோட்டம் இருக்கும்...
கோழி,ஆடு,மாடு வளர்ப்பு...பாற்
பண்ணைகள் ஊருக்குஊர் இருக்கும்,
சொல்லிக்கொண்டே போகலாம்...

இரா.தமிழன் பி.செங்கமுத்து
என் வீட்டில் என் மூலப்பொருள்களை கொண்டு உழைத்து வாழ்ந்து, என் நிலையை
மேம்பட செய்வதுனே,,

சீனி. மாணிக்கவாசகம்
பக்கத்து வீடு, தெரு, ஊர், சமூக மேம்பாட்டை யார் செய்வது?
அதற்கு எங்கேயிருந்து பொருளாதாரம் வரும்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 08:42 AM க்கு
இரா.தமிழன் பி.செங்கமுத்து
நான் என்பதன் தொடக்கமே பிறகு வீடு, ஊர் அப்படியே சமூக மேம்பாடு தானே
வாளர்ச்சி தானே அண்ணா.,
கிராமத்தின் வளர்சியில் பெருளாதாரம் ஈட்ட முடியுமே.,
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · இன்று, 08:46 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
கிராமத்தின் வளர்ச்சியில் இருந்து கிராமத்திற்கான பொருளாதாரம்
எங்கிருந்து (அல்லது) எப்படி வரும்?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 08:48 AM க்கு
இரா.தமிழன் பி.செங்கமுத்து
மற்ற நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்து,
பொருளாதாரம் ஈட்டலாமே அண்ணா,

சீனி. மாணிக்கவாசகம்
அப்ப,
பிற நாடுகளுக்கு - பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு
உற்பத்தி செய்வது தான் தற்சார்பு பொருளாதாரமா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:08 AM க்கு
இரா.தமிழன் பி.செங்கமுத்து
அடுத்த பதிவு வந்தாச்சு.,
இதுல அப்பீட்டு,
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:24 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
ஏற்றுமதி செய்வது மட்டும் தற்சார்பு பொருளாதாரம் அல்ல,
முதலில் தன் நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்களை வெளிநாட்டில் கை
ஏந்தாமல் இருந்து உள்நாட்டிலயே உற்பத்தி செய்ய வேண்டும். தனக்கு போக
மீதமிருப்பதை ஏற்றுமதி செய்ய வேண்டும்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:25 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
அத்தியாவசிய தேவைகளுக்கு பிற நாடுகளுக்கு கை ஏந்த கூடாது
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:26 AM க்கு
இரா.தமிழன் பி.செங்கமுத்து
ரமேஷ் முத்துச்சாமி
ஏற்றுமதி செய்வது மட்டும் தற்சார்பு பொருளாதாரம் என்று நான் எங்கே சொன்னேன்,
ஏற்றுமதி என்பதே, தன் தேவைக்கு போக மீதம் தான் என்பது அனைவரும் அறிந்ததே,
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:31 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
இரா.தமிழன் பி.செங்கமுத்து இது உங்களுக்கு இல்லை, மானிக்கவாசகம் அண்ணனுக்கு

மெய்யன் தென்பெருங்கோ
தற்சார்பு பொருளாதாரம் என்ன மாதிரியில் (model) இயங்க வேண்டும் என்று
"பஞ்சாயத்து ராஜ்" சட்டத்தில் நிறைய சொல்லி இருக்கிறார்கள்...
வேரிலிருந்து கிளை,இலை, காய் கனிகளுக்கு. கனியிலிருந்து வேருக்கல்ல.
From bottom to top approach and not from Top to bottom.

Sakkaraipalani Palani
வேறுக்கு நீர் வேண்டும்தானே சார்.நீர் இல்லை என்றால் வேர்
செத்துவிடும்.நீர் அரசியல் ஏன் செய்கிறார்கள் என்பதையும் விளக்குங்கள்
சார்.நீர் இல்லையேல் கிராமம் இல்லை விவசாயம் இல்லை.விவசாயம் அழிந்தால்
தற்சார்பு செத்துவிடும்.அத
ுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 10:00 AM க்கு
மெய்யன் தென்பெருங்கோ
ஒரு முறை இந்திய அரசியல் அமைப்பின் உறுப்பு 40 க்கான 73வது சட்ட
திருத்தத்தை முழுமையாக உள்வாங்கிக்கொள்
வீர்களானால் மக்களின் அதிகாரம் மண்,நீர், கல்வி, திட்டமிடல் எங்கே
இருக்கிறது என்பதை அறியமுடியும். வேரெதிலும் எதிரெதிர் நிலையெடுக்கும்
தி.மு.க வும் அ.தி.மு.க.வும் ஒருசேர எதிர்த்து செயல்படவிடாமல் முடக்கிய
ஒரு சட்டம் உண்டென்றால் அது பஞ்சாயத்து ராஜ்ய சட்டமே. நீங்கள்
குறிப்பிடும் வேளாண்மை உட்பட அடிப்படை வளங்களும் தொழிலும் கிராம சபையால்
மட்டுமே ஒருங்கிணைந்து மீட்டமைக்கமுடியும்.
சீனி. மாணிக்கவாசகம்
பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் ஒரேயொரு பக்கத்தைக் கூட படிக்காமல் தான்
இங்கே "தற்சார்பு பொருளாதாரம்" பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ஐயா
மெய்யன் தென்பெருங்கோ ..
என்னத்த சொல்றதுன்னு தெரியவில்லை...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 மணி நேரம் முன்பு
மெய்யன் தென்பெருங்கோ
இதனை முன்னெடுப்பது ACF (Anti Corruption Foundation)
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 11 மணி நேரம் முன்பு
Sakkaraipalani Palani
நம்ம ஊர் சட்டம் யாருக்கானது என்பதை ஐயா
மெய்யன் தென்பெருங்கோ அவர்கள் அறிவார்தானே.சட்டம் தன் கடமையை காவிரி
மேலாண்மை வாரியம் அமைப்பதில்லை செய்யவில்லையே .அதிகாரம் உள்ளவர்
வைத்ததுதான் சட்டமா ஐயா.

Sundar Sundar
ஒரு நாட்டின் மக்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் உள்நாட்டிலேயே
உற்பத்தி செய்வது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 08:46 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
சாத்தியமே இல்லாத ஒன்று சகோ Sundar Sundar ...
அப்படியொரு நாடு எங்குமே இல்லை
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 08:49 AM க்கு
Sundar Sundar
உண்மைதான் சகோ
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 08:53 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
எது அத்தியாவசியம், விவசாயம், அது நம் கையில் உள்ளது. அதை பிற
நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நமக்கு தேவையான ஆடம்பர பொருட்களை இறக்குமதி
செய்து கொள்ளலாம்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:35 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
நம் நாட்டில் அனைத்து விதமான வளங்களும் உள்ளது.

தமிழச்சி றொசானி
அதிகபட்ச # வள_பயன்பாடே தற்சார்பு...
((100% வள பயன்பாடு என்பது சாத்தியமற்றது))
தமிழகம் விவசாய நாடு உணவு உற்பத்தி, மற்றும் அடிப்படை தேவைகளில்
கண்டிப்பாக தற்சார்பு அடைய முடியும்... அதை நோகியே நகர வேண்டும்...
விவசாய மற்றும் மிகை உற்பத்திகளை ஏற்றுமதி செய்து அதைவிட குறைவான இதர
பொருட்களை இறக்குமதி செய்தல் வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்லும்....
உலகமய வலைக்குள் இருந்து வெளிவந்து 100% வீத தற்சார்பு என்பது 100%
நடைமுறை சாத்தியம் இல்லை...

Ganesharajah Ganesh
உணவு உற்பத்தியில் 100 % சாத்தியம் இருக்கு...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 10:34 AM க்கு
தமிழச்சி றொசானி
சாதியம் உண்டு ஆனால்... உணவு உபத்தியில் மட்டும் தன்றிறைவு அடைவது
தற்சார்பு அல்லவே...

சீனி. மாணிக்கவாசகம்
உணவு உற்பத்தியிலும் தேவையான அனைத்து உணவுப் பொருட்களிலும் 100%
தன்னிறைவு அடைவது சாத்தியம் இல்லை....

இரா. மணிகண்டன் இளையா
இங்கே வெறும் தற்சார்பு சாத்தியமற்றது அதோடு பண்டமாற்று முறை அவசியம்
அதற்கு பணம் என்ற ஒரு மாயய் ல இருந்து முழுசா வெளிவரனும் எனக்கு
தேவையானதையும் உற்பத்தி பண்ணி மிஞ்சியதை வெரொறுவருக்கு கொடுத்து அவரிடம்
உள்ள எனக்கு தேவையானதை நான் வாங்கனும் அதுக்கு முழுதா பணத்தை ஒழிக்கனும்
அதுதான் முழுமையான தற்சார்பு
தற்சார்பு என்பது ஒரு குடும்பம் அல்ல ஒரு சமூகம் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கும்

செம்பியன் பிரபாகரன்
சோத்துக்கும்,வாழ்க்கையின் அத்தியாவசங்களுக்கு பிற நாட்டை எதிர்பார்க்காமை.
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · இன்று, 09:18 AM க்கு
Joseph Rajarajan
அது ரொம்ப சிம்பிள்.. நோய்க்கான மருந்துகள்.. ரடார் நீர்மூழ்கி கப்பல்..
கச்சா எண்ணை.. உள்ளிட்ட அனைத்தையும் நாமலே தயாரிப்பது.. பண்டமாற்றிக்கொள
்வது. முடியாதுனு சொல்லுவிங்களா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · இன்று, 08:56 AM க்கு
லியாக்கத் நசீர் தமிழன்
கஞ்சியோ,கூலோ,நம்மகிட்ட இருப்பதை சாப்பிட்டு நிம்மதியா இருக்கனும்...பெ
ருந்தலைவர்...

Saravanan Alagesan
தற்சார்பு பொருளாதாரம் என்னைப்பொருத்தவரையில் ... ஒரு நாட்டின் அடிப்படை
வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய விடயங்களான உணவு, மின்சாரம், மக்களின்
அன்றாட பயண்பாடு பொருட்கள், அதன் உற்பத்திக்கு தேவையான மூல பொருட்கள்
அனைத்தையும் நாமே உற்பத்தி செய்ய கூடிய திறனை பெற்றிருத்தல் வேண்டும்
உதாரணமாக நமக்கு புது தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யலாம் ஆனால் அந்த
தொழில்நுட்பத்தில் உருவான பொருட்களை அல்ல அதாவது நாம் புதிய
தொழில்நுடபங்களை கற்று நம் அடிப்படை தேவைகளை உற்பத்தி செய்வதை சுலபமாக்க
முயல வேண்டுமே தவிர நேராக உற்பத்தி செய்த பொருளை மட்டும் இறக்குமதி செய்ய
கூடாது இதுவே எனக்கு தெரிந்த தற்சார்பு பொருளாதாரம் இதற்க்கு தேவை மனித
வளத்தில் இருந்து அனைத்து வரும்

சீனி. மாணிக்கவாசகம்
ம்ம்ம்ம் ஓரளவிற்கு ஓகே...
ஆனால், அரசு நிர்வாகத்தில் தற்சார்பு பொருளாதாரத்தின் பங்களிப்பு என்ன?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:16 AM க்கு
Saravanan Alagesan
அரசு நிர்வாகத்தில் முடிந்த வரை நம் பட்சட் நம்முடைய அத்தனை செலவுகளையும்
உள்ளடக்கி திட்டங்களுக்கான சேமிப்புடன் கூடியதாக இருத்தல் வேண்டும்
முடிந்த வரை மத்திய அரசை சாராமல் மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய வழி
வகைகள் இருத்தல் வேண்டும் எக்காரணம் கொண்டும் மாநிலத்தின் இயற்கை வளங்களை
அழதித்தல் அல்லது மத்திய அரசின் பங்குக்காக பிரித்தல் கூடாது அப்படியே
பிரித்தாலும் அதன் வீடோ சக்தி மாநிலத்தில் உள்ளபடி பார்த்து செயல்பட
வேண்டும் அண்ணே
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:24 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
ம்ம்ம் அருமை... இன்னும் கொஞ்சம் ஆழமாக ...
வரவு - செலவு திட்டத்திற்கான (Budget) நிதி எங்கிருந்து வரும்?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:27 AM க்கு
Saravanan Alagesan
அண்ணா பட்சட்க்கான வரவு அரசுக்கு இரண்டு வழிகளில் வரும் ஒன்று மக்களிடம்
பல வழிகளில் நாம் வசூலிக்கும் வரி .இரண்டாவதாக பொது துறை நிறுவனங்கள்
மூலம் (அவற்றை லாபத்தில் நடத்த அரசுக்கு தெரிந்திருந்தால் ) இது வரவு ,
செலவுகள் திட்டங்கள் ,மானியங்கள்,அரசு ஊழிகளின் சம்பளம் மற்றும் வருங்கால
திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என்று செலவுகள் சேர்த்து நம் வரவு செலவாக
இருக்கும் அண்ணா

சீனி. மாணிக்கவாசகம்
பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு 5% கூட தேறாது தம்பி Saravanan Alagesan...
வரிகள் தான் அதிகபட்ச பங்களிப்பை கொடுக்கும்...
தற்சார்பு பொருளாதாரத்தின் தொடக்கம் இங்கிருந்து தான்....
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 09:40 AM க்கு
Saravanan Alagesan
ஆமாம் அண்ணா அதனால் தான் பொதுத்துறை நிருவனங்களையிம் முடிந்த அளவில்
லாபத்தில் இயங்க முயற்ச்சிக்க வேண்டும். வரி கண்டிப்பாக பிரதான வருவாய்
அதனால் நீங்கள் கூறியது போல் முதலில் வரி முக்கியம் அதுவும் அனைவருக்கும்
ஒரு நியாயமான வரி இருத்தல் வேண்டும் முக்கியமாக சீனா மாதிரி வரி
மூலப்பொருட்களிலேயே முடிந்து விட வேண்டும் அதுதான் ஒரு வரி எந்த
பொருளுக்கும் வேறு வரிகள் கிடையாது மூலப்பொருளுக்கு மட்டுமே வரி இப்படி
இருந்தால் ஒரு வேளை நமக்கு வரி கட்டுபவர்களின் எண்ணிக்கையும் உயரும் வரி
ஏய்ப்பும் தவிர்க்கப்படும்

Dharmaraj Raj
நான் புரிந்து கொன்ட நாம்தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதாரம் என்பது
பசுமை தற்சார்பு பொருளாதாரம் ../// நமக்கு தேவையான விவசாய விலை பொருட்களை
நம்மலே (அரசாங்கம் சேர்த்து) உற்பத்தி செய்து தன்னிறைவு அடைவது
/// பசுமை தற்சார்பு மூலம் கிராமபுற வேலைவாய்பு பொருளாதாரம் ஏற்றம்
அடையும் //// அறிவியல் சார்ந்த எந்த பொருளையும் தற்சார்பில் உள்ளடக்க
முடியாது

Dharmaraj Raj
நான் புரிந்து கொன்ட நாம்தமிழர் கட்சியின் தற்சார்பு பொருளாதாரம் என்பது
பசுமை தற்சார்பு பொருளாதாரம் ../// நமக்கு தேவையான விவசாய விலை பொருட்களை
நம்மலே (அரசாங்கம் சேர்த்து) உற்பத்தி செய்து தன்னிறைவு அடைவது
/// பசுமை தற்சார்பு மூலம் கிராமபுற வேலைவாய்பு பொருளாதாரம் ஏற்றம்
அடையும் //// அறிவியல் சார்ந்த எந்த பொருளையும் தற்சார்பில் உள்ளடக்க
முடியாது

சீனி. மாணிக்கவாசகம்
உணவு வந்திருச்சு...
உடையும் இருப்பிடமும் எங்கே?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு
Dharmaraj Raj
இன்றைய காலத்தில் விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கிரதா சகோ
சீனி. மாணிக்கவாசகம்
நல்ல முதலீடு செய்தால்
விவசாயம் லாபகரமான தொழில் தான்...

பிரபாகரன் தம்பி மகிராஜா
அமேரிக்காவின் பீசா பர்கரை காசு கொடுத்து வாங்கித்திண்ணாமல் நம்முடைய
பாட்டியின் கைருசியில் உருவான கூழையோ கஞ்சியையோ குடித்துவிட்டு
கிடப்பது.(எமக்க
ு தெரிந்ததை சொன்னேன். அவ்வளவே)

ரமேஷ் முத்துச்சாமி
விளம்பர மோகத்தால் தரமான உணவு பொருட்களை மறந்து விட்டோம்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:46 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
விளம்பரங்களை தடை செய்து விடலாமே?
தரமான உணவுப் பொருட்கள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்து விடும்....
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:47 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
விளம்பரம் பெருக காரணம் தனியார் மயம், இது ஒரு வலைப்பின்னல் போல்,
ஒவ்வொன்றும் ஒன்னுக்கொன்று தொடர்புடையது.
தனியார்மய கொள்கையை கை விட்டால் தானாக ஒவ்வொன்றாக சரி ஆகும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 10:18 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
ரஷ்யா வில் விளம்பரங்கள் இல்லாமலா இருந்தது?
சீனா வில் விளம்பரங்கள் இல்லையா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 10:20 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
இருந்தது, இந்தியா அளவுக்கு இல்ல

சீனி. மாணிக்கவாசகம்
ஹாஹாஹா....
சும்மா அடிச்சு விடக்கூடாது...
தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் விளம்பரங்களுக்கு எவ்வளவு செலவு
செய்கின்றன என்ற பட்டியலின் அடிப்படையில் பேசனும்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 10:26 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
சரி தான், ஆனால் தற்சார்பு பொருளாதாரத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின்
தாக்கம் குறையும்

Radhakrishnan Seetharaman
ஒவ்வொருவரும் உலகை அவரவர் சூழ்நிலைகள் கொண்டே அணுகுவர்...
விவசாயம், உணவு, அபிரிமிதமா உற்பத்தி செய்து, விவசாயம் இல்லாத நாட்டுக்கு
ஏற்றுமதி செய்து,
ஆடம்பர பொருளை வாங்குவோம்....வரை தற்சார்பு பொருளாதாரம் புரிந்து
கொள்ளப்பட்டுள்ளது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 10:07 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
அனைத்து விவசாயப் பொருட்களையும் ஏற்றுமதி செய்ய முடியுமா முடியாதா என்பதே
இவர்களுக்கு தெரியவில்லை.
அதிக விளைச்சல் காலங்களில், கிலோ 2 ரூபாய் என்று உள்ளூர் சந்தையில்
நாறுவது இவர்களுக்கு தெரிகிறதா, அல்லது தெரியாதது போல நடிக்கிறார்களா
என்பதே புரியவில்லை
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 10:13 AM க்கு
Radhakrishnan Seetharaman
வாழை மரங்கள் குலையை அறுக்காமல் மடித்து உழுகிறார்கள்....காரணம் பழத்தின்
விலை கூலிக்கு கூட கட்டாது.
உவிங்களுக்காக எல்லாரும் பத்து பழம் சாப்பிட்டு.....பீச்சிகிட்டு..போவாங்களா என்ன?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 10:14 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
காலக்கொடுமை....

Dav Veera
தற்சார்பு பொருளாதாரம் என்பது,
தங்களின் வளங்களை கொண்டு அதன் மூலமாக அதிக உற்பத்தி செய்வது (
utilisation of optimum resource)

சீனி. மாணிக்கவாசகம்
உற்பத்தி மேலாண்மை அல்லது உற்பத்தி சிறப்பு தான் "தற்சார்பு பொருளாதாரமா"?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:42 AM க்கு
Dav Veera
இதில் உற்பத்தி மட்டும் இல்லை அனைத்துமே வரும் அண்ணா

சீனி. மாணிக்கவாசகம்
Optimum utilisation of locally available resources for self
consumption is one thing...
Optimum utilisation of resources to increase production over and above
own requirement is another thing....

Radhakrishnan Seetharaman
மற்றொன்று..... பெல்லாரியிலிருந்து இரும்பு கனிமம் சீனாவிற்கு ஏற்றுமதி
நடந்த்து, நடப்பது தெரியுமா?
கனிமத்தை ஏற்றுமதி செய்தார்கள் ரெட்டி பிரதர்ஸ் இரும்பை இறக்குமதி
செய்தது இந்தியா!!
ஏழுமலையாண்டவன் வைரகிரீடம் சூட்டிக்கொண்டார்.
தற்சார்பு பொருளாதாரம் நுண்ணரசியல்
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
சீனி. மாணிக்கவாசகம்
இரும்புக் கணிமத்தை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால்,
இந்தியா - சீனா ஏற்றுமதி இறக்குமதி வேறுபாடு (Balance of Trade) அதள
பாதாளத்திற்குப் போய்விடும் அண்ணன்....
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
Radhakrishnan Seetharaman
Value addition ல் நாம் இழக்கும் வேலை வாய்ப்புகள் எத்தனை.
அதை ஒப்பிடும் போது ஒடிசாவில் POSCO வை விரட்டியது தவறா சரியா

மணி கண்டன்
உலகில் போர் வந்துவிட்டது
பணம் செல்லாது வங்கி இல்லை போக்குவரத்து இல்லை இணையம் இல்லை அரசின் எந்த
உதவியும் இல்லை
நாட்டில்
இப்படி இருந்தும் நீங்கள் உங்களது உணவை தேவையை பூர்த்தி செய்தால் நீங்கள்
தற்சார்பு வாழ்க்கையை வாழ்பவர்
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 08:51 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
உணவு மட்டும் தான் வாழ்க்கையா?
அல்லது, போர்க் காலத்தில் தேவையான அளவு உணவுப் பொருட்கள் இருப்பது தான்
தற்சார்பு பொருளாதாரமா?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:01 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
உணவு, விவசாயம் தான் முக்கியம், முதலில் அதில் அபரிமிதமான மாற வேண்டும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:29 AM க்கு
ரமேஷ் முத்துச்சாமி
வெரும் விவசாயம் மட்டும் செய்தால் நாடு வல்லரசா ஆயிடுமா என்பது போல
இருக்கிறது உங்கள் கேள்வி,
ஆம் அப்படி தான்,
விவசாயமே பார்க்க முடியாத நாடுகள் இங்கு அதிகம் உள்ளன. அங்கு ஏற்றுமதி
செய்து, அங்கிருந்து நமக்கு தேவையான ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்து
கொள்ளலாம்

Mohan
அப்படியே இந்த கலப்புப் பொருளாதாரத்தப் பத்தியும் சொன்னா நல்லாருக்கும்
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 7 மணி நேரம் முன்பு
சீனி. மாணிக்கவாசகம்
அடிப்படை பொருளாதாரம், கலப்பு பொருளாதாரம், நவீன பொருளாதாரம், அரசுடைமை
பொருளாதாரம் ன்னு நிறைய படிச்சிருக்கேன்...
இங்கே ஏன் # கலப்பு_பொருளாதாரம் (Mixed Economy) இங்கே பேச வேண்டும்
என்று ஏன் சொல்கிறீர்கள் Mohan ?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 7 மணி நேரம் முன்பு
Mohan
இந்தியா ஒரு முதலாளித்துவ நாடும் இல்ல, சோசலிச நாடும் இல்ல, கலப்புப்
பொருளாதாரத்த பின்பற்றுவதால தான் இந்தியாவால 2008&2009கள்ல கூட பொருளாதார
வீழ்ச்சியடையாம இருந்துச்சுன்னு சொல்றாங்க, என்னோட சின்ன சந்தேகம் Mixed
economyங்கறது Pro capitalism இல்லயாங்கறது தான்.

Kanagasabai Natarajan
கற்கால கோட்பாடு
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 08:53 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
ம்ம்ம்ம்.... அப்படி சொல்ல முடியாது ஐயா
Kanagasabai Natarajan ...
தற்சார்பு பொருளாதாரம் என்ன மாதிரியில் (model) இயங்க வேண்டும் என்று
"பஞ்சாயத்து ராஜ்" சட்டத்தில் நிறைய சொல்லி இருக்கிறார்கள்...
From bottom to top approach..
Not from Top to Down....
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · இன்று, 09:08 AM க்கு
Kanagasabai Natarajan
சீனி. மாணிக்கவாசகம் ஆமாம் ஒரு நெறிமுறை தேவை. தாராளமயமென்று அடிப்படை
வணிகம் சிதையவும் கூடாதுதான்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · இன்று, 10:14 AM க்கு
சீனி. மாணிக்கவாசகம்
பஞ்சாயத்து ராஜ் திட்டம் சரியான நெறிமுறை ஐயா Kanagasabai Natarajan...
இதில் அதிக முணைப்புக் காட்ட வேண்டும்....

Radhakrishnan Seetharaman
யாராயினும் நியூசிலாந்து பற்றி படித்து விட்டு வாருங்கள்.
உண்மை.
அந்த மக்கள் அடிப்படையிலேயே ஆசைகள் அதிகம் இல்லாதவர்கள்
அதனால் ஆடு வளர்ப்பு, கோகோ கோதுமை, பால் பொருட்களை கொண்டு வாழ்வியலை
அமைத்துக் கொண்டதாக.....பட
ித்திருக்கிறேன்.
அந்த மனநிலை நம் மக்களிடம் வாராது.
பூகோள ரீதியிலும், இந்தியாவின் நட்பு பகை காரணிகள் இல்லாத தேசம்.
அவர்களின் ஒரே எதிரி ஆஸ்திரலியா...கி
ரிகெட்டில்

மரம் வளர்ப்போம் மழைநீரை சேமிப்போம்
தன்னுடைய மனித இயற்கை வளங்களை பயன் படுத்தி நம் நாட்டின் பல துறைகளை
அந்நிய நாட்டில் சந்தைபடுத்தி நம்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதே
தற்சார்பு பொருளாதாரமாக இருக்கமுடியும் நமக்கு தேவையானதை நாமே உற்பத்தி
செய்து கொள்வது மட்டுமே தற்சார்பு பொருளாதாரமாக இருக்காது
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 11 மணி நேரம் முன்பு
காக்கரமுத்து வெள்ளைக்கண்ணு
பிறரை சார்ந்து வாழ்வதில் தவறு இல்லை ஆனால் மற்றவர்களின் ரத்தத்தை
உறிஞ்சும் வாழும் ஒட்டுண்ணிகளாக இருக்கக்கூடாது தான் பார்க்காத நிலம்
தரிசு
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி ·
புகாரளி · இன்று, 09:05 AM க்கு
Raja S
எனக்கு தெரிந்து பொருளாதார கொள்கையே ஒரு திணிப்பு தான்
ஆதியில் பொருளாதார கோட்பாடு இல்லாத காலத்தில் பிரச்சினைகள் குறைவு
சந்தை பொருளாதாரத்தில் நாம் எதையாவது சார்ந்தே உள்ளோம் ஆனால் தற்சார்பில்
அவ்வாறு அல்ல
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Raja Venkat
அனைத்து தேவைகளுக்கும் நம்மையே சார்ந்திருப்பது!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · இன்று, 09:19 AM க்கு
Rajeswari Words Worth
நம்மிடம் இருக்கும் வளங்களைக் காப்பாற்றி அதன் மூலம் நம்மை
வலுப்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தை பெருக்குவது;அதனை அடிப்படையாக
வைத்து படிப்படியாக பெரிய அடிகளை ஆழமறிந்து எடுத்து வைப்பது!வளம் என நான்
குறிப்பிட்டு இருப்பது வேளாண்மையோ தொழிலோ பெட்ரோலியமோ எதுவானாலும்
சரி,ஆனால் இயற்கையோடு இயைந்ததாக இருக்கவேண்டும்!

Sakkaraipalani Palani
சகோ.தற்சார்பு பொருளாதாரம் மனிதரிடம் இருந்து மறைந்து வெகுநாட்கள்
ஆகிவிட்டது.அது மிருகத்திடம் மட்டும்தான் உள்ளது. அதுகளிடம் கேட்டு
தெரிந்து கொள்ள நமக்கு மிருகத்தின் மொழி தெரியவேண்டும்.நாமும்
மிருகமாகணும்.முதலில் ஆடையை இழக்க வேண்டும்.அப்போ நம் ஆசையும் இழந்து
ஆதிமனிதனாகி அனைத்தும் பெற்று வாழலாம். முடியுமா தற்சார்போடு நம்மை
தலைநிமிர்ந்து வாழவிடுமா இந்த வர்த்தக உலகம்

Karthik Sudar
உங்க வீட்டோட தற்சார்பு பொருளாதாரம் என்பது எத்தனை பொருட்கள் விலைக்கு
வாங்குகிறீர்கள்...எத்தனை உற்பத்தி செய்கிறீர்கள் என்பதில் உள்ளது..

David Rajan
சொந்த கடையை வாடகைக்கு விடாமல் தானே கடையை நடத்துவது ...

உற்பத்தி ஏற்றுமதி இறக்குமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக