சனி, 24 பிப்ரவரி, 2018

அச்சுதானந்தன் பினராய் விஜயன் பெரிய வேறுபாடு இல்லை படகு மின்சாரம் இடைஞ்சல் கேரளா மலையாளி இனவெறி

aathi1956 aathi1956@gmail.com

22/11/17
பெறுநர்: எனக்கு

கதிர் நிலவன் Mathi Vanan உடன்.
அச்சுதானந்தன் வழியில்
முதல்வர் பினராய் விஜயன்!
முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற தீவிர கருத்துடையவர் முன்னாள் மார்க்சிஸ்ட் கட்சி முதல்வர் அச்சுதானந்தன். அவர் முல்லைப் பெரியாறு அணை யை இடிக்க வேண்டும் என்பதிலும், தற்போதுள்ள அணையின் மராமத்துப் பணிகளை தடுக்க வேண்டும் என்பதிலும் பிடிவாதக்காரர்.
அவருக்குப் பின் மார்க்சிஸ்ட் கட்சியின் முதல்வராக பினராய் விஜயன் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகிறார்.
அவர் பதவியேற்ற போது, "அணை பலமாக உள்ளது என்ற நிபுணர் குழுவின் ஆய்வு முடிவுகளை புறந்தள்ளி விட முடியாது என்றும், அச்சத்தின் அடிப்படையில் இந்த பிரச்னையை அணுக முடியாது" என்றும் கூறினார்.
அதன்பிறகு கேரள சட்டமன்றத்தில்,
"கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பது தான் எங்கள் அரசின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை. மாநில மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்" என்று பல்டி அடித்துப் பேசினார். முன்பிருந்த அச்சுதானந்தன் வழியில் எள்ளவும் மாற மாட்டேன் என்பதுதான் பினராய் விஜயன் எடுத்துக் கொண்ட சத்தியப் பிரமாணமாகும்.
இவருக்கும், அவருக்குமுள்ள வேறுபாடு என்னவெனில், அச்சுதானந்தன் தமிழர்களுக்கு எதிராகப் பேசி, வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்வார். இவர் அப்படியல்ல: வாய் திறக்க மாட்டார். ஆனால், இவர் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதிலே தந்திர நரிப்புத்தி கொண்டவர்.
இவர் உச்ச நீதிமன்றம் அமைத்த மூவர் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு தடைக்கல்லாக இன்று வரை இருந்து வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.
2014ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் மட்டத்தை உயர்த்தும்படி தீர்ப்பு வழங்கியது. அத்தோடு சிற்றணையின் மராமத்துப் பணிகளை முடித்து விட்டு 152 அடி நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும்
கூறியிருந்தது. அப்போது மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் என்.ஏ. வி. நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டத
ு.
அக்குழுவானது மூன்றாண்டுகளுக்
கு முன்பு வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்குச் செல்லும் சாலையை சீரமைப்பது, அணைப்பகுதிக்கு தரை வழியாக மின்சாரம் கொண்டு செல்வது, பிரதான அணையிலிருந்து பேபி அணைக்கு இடைப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைப்பது என்றும் முடிவு செய்தது.
19.6.2000 இல் அணைப்பகுதியில் மின்வயரில் யானை ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதனை சாக்காக வைத்து கேரள அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் மின்சாரத்தை துண்டித்தது. கடந்த 17 ஆண்டுகளாக குறைவான திறன் கொண்ட மின்னாக்கியை (ஜெனரேட்டர்) வைத்து தமிழகப் பொறியாளர்கள் படாதபாடு பட்டுவந்தனர். இதை உணர்ந்த மூவர் கண்காணிப்புக் குழு தரை வழியாக மின்சாரம் வழங்கும் முடிவை எடுத்தது. இதற்காக தமிழக அரசு ரூ.1.65 கோடி கேரள அரசுக்கு வழங்கியது. அதுபோல், சிற்றணையைப் பலப்படுத்துவற்கும் தமிழக அரசு ரூ. 7.85 கோடி வழங்கியது. இந்தப் பணம் வழங்கி மூன்றாண்டு கடந்து விட்டது. ஆனால் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், தமிழக அரசின் பொதுப்பணித்துறையினர் மூன்றாண்டுகளுக்கு முன்பு தேக்கடியிலிருந்து அணைப்பகுதிக்கு செல்ல ரூ 1 கோடி செலவில் "தமிழன்னை" பெயரில் படகு வாங்கியது. இப்படகை இயக்குவதற்கு கேரள அரசு இன்றுவரை அனுமதி தரவில்லை.
பினராய் விஜயனுக்கு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமான பிறகும் நெஞ்சில் ஈரம் சுரக்க மறுக்கிறது. மலையாள இனவெறி அவரது கண்ணை மறைத்து வருகிறது.
கேரளாவில் உள்ள இந்து கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்க சட்டம் கொண்டு வந்ததை தமிழகம் வரவேற்றது. அவருக்கு தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் கொடுத்து தமிழக மார்க்சிஸ்ட் கட்சி உட்பட பல தலித்திய, திராவிட அமைப்புகள் " சமூகநீதிக் காவலர்" என்றும், " கேரளப் பெரியார்" என்றும் வரவேற்பு கொடுத்தன. இது அளவுக்கு அதிகமான பாராட்டுதான்.
இருப்பினும், வகுப்புவாத வெறியின் மென்மையான முகம் வாஜ்பாய் என்றால், மலையாள இனவெறியின் மென்மையான முகம் பினராயி விஜயன் என்பதை வரவேற்பு கொடுத்த இயக்கங்கள் உணர வேண்டும்.
"சமூக நீதி" என்ற கிலுகிலுப்பையை காட்டி பினராய் விஜயனை தப்பிக்க நாம் விட்டுவிடக் கூடாது. முல்லைப் பெரியாற்று உரிமையைப் பறிக்கும் பினராய் விஜயனுக்கு தமிழக இயக்கங்கள் இப்போதே தமது கடும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும்.
அடுத்த முறை அவர் தமிழகம் வந்தால் தமிழர்களாகிய நாம் அவருக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்டுவோம்!
தரவு: தினமணி (14.11.2017, மதுரைப் பதிப்பு)
15 நவம்பர், 08:57 AM
கம்யூனிஸ்ட் பிணராய் பினராயி பிணராயி 

Sent from my Samsung Galaxy smartphone.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக