அதிகாரம்: அரண்
The Fortification - Aran
குறள் இயல்: அரணியல்
The Essentials of a State - Araniyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:742 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
குறள் விளக்கம்
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல்
உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும்
நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய
காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்'
என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த
காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார்.மதிற்புறத்து மருநிலம்
பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என
இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக