விதிகளை மீறி கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதால் குடிநீருக்கும் வந்தது ஆபத்து
மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதால் கடல் நீர் உட்புகுந்து
வருகிறது. எனவே பெட் டேம் கட்டித்தர வேண்்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தில் மணல்மேடு அருகே
செல்லும் கொள்ளிடம் ஆற்றில் முடிகண்டநல்லூர் பகுதியிலிருந்து கிழக்கே
கொள்ளிடக்கரை வரை சுமார் 20 கிமீ தூரத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக மணல்
குவாரி செயல்பட்டு வந்தது. சீர்காழி தாலுகா கொள்ளிடம் அருகில் உள்ள
பட்டியமேடு, மாதிரவேளூர், பனங்காட்டாங்குடி, சித்தமல்லி, கடக்கம்,
பாப்பாக்குடி மற்றும் முடிகண்டநல்லூர் பகுதிகளில் தொடர்ந்து
மணல்குவாரிகள் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டு தினந்தோறும் 1000 லாரி, 200
டிராக்டர், 200 மாட்டுவண்டி என மணல் லோடு ஏற்றப்பட்டு பல மாவட்டங்கள்
மட்டுமில்லாமல் புதுச்சேரி காரைக்கால் பகுதிக்கும் அனுப்பப்பட்டு வந்தது.
இதனால் கொள்ளிடம் ஆற்றின் அகலம் 1.5 கி.மீ தூரத்திலிருந்து 2 கிமீ தூரம்
வரை பாலைவனம் போல் இருந்தது.
தொடர்ச்சியாக மணல் விற்பனை செய்து வந்ததால் ஆற்றில் பள்ளம் ஏற்பட்டது. 20
ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றின் அருகில் உள்ள கிராமங்கள் மட்டுமல்லாமல்
சுற்றுவட்டாரத்தில் 15 கிமீ தூரத்திற்கு நிலத்தில் 10 அடியில் தண்ணீர்
கிடைத்து வந்தது. மணல் குவாரியால் இன்றைக்கு 170 அடி ஆழத்திற்கு கீழே
தண்ணீர் சென்று விட்டது. கடந்த 3 மாதங்களாக மணல் குவாரிகள் மயிலாடுதுறை
பகுதிகளில் இயங்கவில்லை. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி தாலுகா
ஆழங்காத்தான் பகுதியில் குவாரி அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்று
வருகிறது. மணலை தொடர்ந்து அள்ளி வருவதால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக
குறைந்து வருவதை சரி செய்ய உடனடியாக பல இடங்களில் பெட் டேம் கட்ட
வேண்டும் இல்லை என்றால் குடிநீர் பஞசம் ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சம்
தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வக்காரமாரியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறுகையில்,'
கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் ஆற்று தண்ணீர் பெரும்பாலும் வருவதில்லை.
நிலத்தடி நீரை கொண்டு தான் விவசாயம் செய்து வருகிறோம், நிலத்தடி நீர்
குறைந்து கொண்டே வருகிறது. கோடை காலத்தில் போர்வெல்லில் தண்ணீர் லெவல்
குறைய குறைய பைப் லைன் இறங்கி கொண்டே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது,
இருந்தும் மணல் அள்ளுவது நிற்கவில்லை. இங்கிருந்து குடிநீர் கொண்டு
செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, நிலத்தடி நீர் குறைவதை தடுக்க அரசு
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, பெட் டேம் கட்டும் திட்டம் கிடப்பில்
போடப்பட்டுள்ளது வருந்தத்தக்கது. கோடியக்கரை வரை இங்கிருந்து தான்
குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீருக்காவது முக்கியத்துவம்
அளித்து பெட் டேம் கட்ட நடவடிக்கை வேண்டும் என்றார்.
சூரியன்பேட்டை ராஜாராமன் கூறுகையில்,' மணல் குவாரியால்தான் தண்ணீர்
மட்டம் குறைந்து கொண்டே வருகிறது அந்த மணல் குவாரிகளை செயல்பட தடை
விதிக்க வேண்டும், நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்று மயிலாடுதுறை பொதுநல வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்திருந்தார், அதற்கு பதில் அளித்த தமிழக அரசு முடிகண்டநல்லூர்
பகுதியில் ரூ.400 கோடி செலவில் தடுப்பணை கட்டுகிறோம் என்று வாக்குறுதி
அளித்ததுடன், அப்போதைய முதல்வர் ஜெயலலிதால 110 விதியின் கீழ் அறிக்கை
ஒன்றை வாசித்தார், வாசித்து பல ஆண்டுகள் ஆகியதுடன் அவரும் மறைந்து
விட்டார், இந்த தடுப்பணையை ஏற்படுத்தினால் தான் இப்பகுதியில் நிலத்தடி
நீரை உயர்த்த முடியும். இல்லை என்றால் வறண்ட பூமியாக மாறும் சூழல் உள்ளது
என்றார்.
மணல்மேடு அஜித் என்பவர்கூறுகையில், வங்க கடல் நீர் கொள்ளிடம் என்ற
ஊரையும் தாண்டி பனங்காட்டாங்குடி வரை வந்து விட்டது. மணல் குவாரி
செயல்பாட்டால் அது மணல்மேடு பகுதியையும் விட்டு வைக்காது, காவிரியில்
தண்ணீர் வந்தால்தான் வீராணம் ஏரியில் தண்ணீர் நிரப்பி சென்னைக்கு அனுப்ப
முடிந்தது. தற்போது காவிரியில் தண்ணீர் இல்லை, வீராணம் மூலம் சென்னைக்கு
அனுப்பும் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. அதேபோன்றுதான் கொள்ளிடம்
ஆற்றில் தண்ணீர் லெவல் குறைந்து விட்டதால் இந்த ஆற்றை நம்பி மயிலாடுதுறை,
சீர்காழி நகரங்கள் மட்டுமில்லாமல் கடற்கரையோரமாக உள்ள 133 கிராமங்களுக்கு
பாப்பாக்குடி பகுதியிலிருந்து 6 பம்ப்செட் பாயின்ட் மூலம் தண்ணீர்
எடுக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது, ஆனால் ஆற்றிலேயே
போர்லெவல் கீழே இறங்கி விட்டதால் 250 அடி வரை ஆழம் தோண்டி இன்றைக்கு 9
கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படியே போனால் கொள்ளிடம் ஆற்றில் மணல் இருக்காது. பெரும் பள்ளமாகத்தான்
காட்சியளிக்கும். கொள்ளிடத்தின் இரண்டு கரை ஓரங்களிலும் எங்கு
பார்த்தாலும் நீர்மூழ்கி பம்புகள் தான் தெரியும். போர்க்கால அடிப்படையில்
முடிகண்டநல்லூர் பகுதி மற்றும் கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் தடுப்பணை
கட்டினால் தான் குடிக்கவாவது தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருக்கும்.இல்லை
என்றால் குடிப்பதற்கும் தண்ணீர் இருக்காது. கொஞ்சநஞ்சம் இருக்கும்
நிலத்தடி நீரிலும் கடல்நீர் கலந்து உப்பாக மாறி விடும். ஆகவே உடனடியாக
போர்க்கால அடிப்படையில் இரண்டு தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும் என்று
கேட்டு கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக