கும்கி யானைகள் பற்றிய நூற்றாண்டைத் தாண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!
0 0
"விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை அட்டகாசம் செய்த காட்டு யானைகள்,
கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர்.."
Advertisement
இதுபோன்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள்களில் பார்க்கலாம். அது என்ன
கும்கி யானை? காட்டுயானைகளை விரட்டத் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்ட
யானையின் பெயர் தான் 'கும்கி'. அவ்வளவுதானா கும்கியின் அடையாளம்?
நிச்சயமில்லை.
கும்கியின் வரலாறு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மாவட்டம்
ஊட்டியிலிருந்து துவங்குகிறது. 1910 ஆம் ஆண்டு ஊட்டியில், யானைகள்
வளர்ப்பு மற்றும் பயிற்சி முகாம் ஒன்று வனத்துறையால் தொடங்கப்பட்டது.
இந்தியாவில், யானைகளுக்கு என்று முதன் முதலாக துவங்கப்பட்ட முகாம்
இதுதான். சுமார் 107 ஆண்டுகளுக்கு முன் இங்கு தொடங்கப்பட்ட
முகாமிலிருக்கும் யானைகளுக்கு, காட்டில் வெட்டப்பட்ட மரங்களை இழுக்க,
மரங்களை லாரிகளில் ஏற்ற மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். இதைத்தவிர,
காட்டு யானைகளைப் பிடிக்கும் முயற்சியிலும் வளர்ப்பு யானைகள்
ஈடுபடுத்தப்பட்டன. பிடிக்கப்பட்ட காட்டு யானைகளும் நேராக பயிற்சி
முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு மரம் தூக்க
அனுப்பிவைக்கப்படும். ஒரு புறம் பயிற்சியும், மறுபுறம் வேலையும்
நடந்துகொண்டே இருக்கும்.
Advertisement
காட்டு யானைகளைப் பிடிக்க அந்தக்காலத்தில் ஓர் எளிய வழியைக்
கடைபிடித்தார்கள். பருவத்துக்கு வந்த பெண் யானையைக் காட்டுக்குள்
இருக்கும் ஒரு பெரிய மரத்தில் கட்டி வைப்பார்களாம். அந்தப் பெண் யானையின்
உடலிலிருந்து வெளிப்படும் ஒருவகையான வாசனையால் ஈர்க்கப்பட்டு,
காட்டுக்குள் சுற்றித்திரியும் ஆண் யானைகள் அந்தப் பெண் யானையைச் சுற்றி
வட்டமடிக்கும். காதல் மயக்கத்தில் சுற்றிவரும் அதை அதிகம் சிரமம்
இல்லாமல் பிடித்துவிடுவார்கள். இப்படி ஆண் யானைகளைப் பிடிக்க உதவும் பெண்
யானைகளைத்தான் ஆரம்ப காலத்தில் 'கும்கி' என அழைத்தனர். கும்கி என்ற
வார்த்தைக்கான விளக்கம் கொடுக்கும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும்
இதைத்தான் சொல்கிறது. ஆனால் இப்போது காட்டு யானைகளை மடக்கிப்பிடிக்கும்
ஆண் யானைகளையே 'கும்கி' என்று அழைக்கிறார்கள். இதை யார் எப்போது
மாற்றினார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
பிடிபட்ட காட்டு யானைகளுக்கான பயிற்சிகள் மிகக்கடுமையாக இருக்கும்.
யானைகளுக்கான முதல் பயிற்சியாக அதன் துதிக்கையில் ஒரு குச்சியைக்
கொடுத்து பாகனுடன் நடந்து வர பழக்குவார்கள். பின்னர், காலை மடக்குவது,
முட்டி போடுவது போன்ற பயிற்சிகள் இருக்கும். காதை தும்பிக்கையால்
பிடித்துக் கொண்டு இடது, வலது என சுற்ற வைக்கும் பயிற்சியும் உண்டு. யானை
சின்னதோ, பெரியதோ, குட்டியோ, வயதானதோ, வா, போ, முட்டி போடு, இதைத் தூக்கு
என்று ஒருமையில் மட்டுமே பாகன்கள் அதை அழைப்பார்கள். வயதான பெண் யானையாக
இருந்தால் அடிப்படை பயிற்சியோடு சில கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும்.
காரணம் பெண் யானைகளுக்குப் புத்திக்கூர்மையும், நுண் உணர்வுகளும் அதிகம்.
பாகன்களுடன் நெருங்கிப்பழகும் குணம் அவற்றுக்குண்டு. பிடிபட்டது ஆண் யானை
என்றால், அது பருவமடைந்த பிறகுதான் பயிற்சிக்கு அனுப்பப்படும்.
அப்போதுதான் வேகமும், மூர்க்க குணமும் நிறைந்ததாக விளங்கும்.
பயிற்சி கொடுக்கும் பாகனின் உத்தரவுதான் யானையைச் செயல்படத்தூண்டும்.
மற்ற நேரங்களில் அமைதியாகவே இருக்கும். குரல் கட்டளைகளின் முதல் பாடம்,
'ஜமத்'. தன் காலில் கட்டியிருக்கும் இரும்புச்சங்கிலியை இறுக்கமாக
பிடித்துக்கொள்ளும் கட்டளையே இது. பாகனிடமிருந்து இந்தக் குரல் வந்ததும்
உடனே சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொள்ளும். மரங்களை
இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துவரும்போது சங்கிலிக்குக் கொடுக்கும்
இறுக்கம்தான் மரங்கள் தவறி கீழே விழாமல் காக்கும். அதற்காகத்தான் இந்தப்
பயிற்சி. அடுத்ததாக வெட்டப்பட்ட மரங்களை கீழே சாய்ப்பதும், அதைத்
தூக்குவதும், நகர்த்துவதும், இழுத்துவருவதுமாகவே இருக்கும். அதற்கான
கட்டளைகளைப் பாகன்கள் சொல்லிக்கொடுப்பார்கள். இப்படிக் கொடுக்கப்படும்
அனைத்து அடிப்படியான பயிற்சிகளுமே பாகனுக்குக் கீழ் படிதல் மற்றும்
மரங்களுடன் தொடர்பு படுத்துவதாகவே இருக்கும்.
காட்டுயானைகளைப் பிடிக்கும் பயிற்சி வேறு விதமாக இருக்கும். அவை இன்னும்
கடுமையானவை. இந்தப் பயிற்சியில் பாகனின் பங்கு அதிகம். ஒவ்வொரு
கட்டளையும் யானையை உற்சாகப்படுத்தி வேகமாக செயல்படவைப்பதாக இருக்கும்.
குறிப்பாக, 'நிர்கே' என்ற கட்டளை. காட்டு யானைகளை மடக்கிப்
பிடிக்கும்போது அவை அதிக மூர்க்கமாக இருந்தலோ அல்லது பிடிபடாமல்
தப்பிச்செல்ல முயன்றாலோ, பாகன் நிர்கே என்று சொல்வார். அதைக் கேட்டதும்,
கொஞ்சமும் யோசிக்காமல் எதிரே நிற்கும் காட்டு யானையை முட்டித் தள்ளி கீழே
சாய்த்துவிடும்.
'கும்கி' என்ற வார்த்தை இந்தி மொழியிலிருந்து உருவாகியிருக்கலாம் என்று
நம்பப்படுகிறது. ஒரு சில முரட்டு காட்டு யானைகள் சிறிதும் அச்சமின்றி
கும்கி யானைகளை தனது தந்தத்தால் குத்த ஆக்ரோஷத்துடன் ஓடி வரும். அப்படி
வரும் யானைகளை இரும்புச் சங்கிலி மற்றும் மரக்கட்டையால் திருப்பித்
தாக்கும் டெரர் பயிற்சியும் கும்கிகளுக்கு உண்டு. கும்கி பயிற்சி,
தினமும் இருவேளை என்று 15 முதல் 30 தினங்கள் வரை கொடுக்கப்படும். பயிற்சி
முடிந்ததும் யானையை முகாமில் வைத்து ஒத்திகை நடக்கும். தமிழகத்தில்
முதுமலை மற்றும் டாப்சிலிப் பகுதிகளில் மட்டுமே கும்கிகள் உள்ளன. நமது
நாட்டில் மிகச் சிறந்த கும்கி யானைகள் கர்நாடக மாநிலத்தில் உள்ளன.
அபிமன்யூ, அர்ஜூனன், கஜேந்திரன் போன்ற கும்கி யானைகள் இந்திய அளவில்
பிரபலமானவை. வேட்டைக்கு புறப்பட்டுவிட்டால் வெற்றி மட்டுமே முடிவாக
இருக்கும். தென் இந்தியாவில் இருந்து வட மாநில காட்டு யானைகளையும் அடக்க
இவை அழைக்கப்படுமாம். இப்படி வெற்றி டேட்டாக்களுக்கு இடையில்,
களத்துக்குச் சென்ற கும்கி யானையும், அதன் பாகனும் காட்டு யானைகளால்
கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்திருக்கிறன.
ஒரு காலத்தில் காடுகளில் வெட்டப்படும் மரங்களைத் தூக்குவதற்காவும்,
அற்காக தேவைப்படும் யானைகளைப் பிடிக்கவுமே பயன்பட்ட கும்கி யானைகள்,
இன்று
ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுவது வரலாற்றுப்
பிழையல்ல. மனிதர்களான நாம் செய்த பிழையின் வெளிப்பாடுதான். நகரீயம் என்ற
போர்வைக்குள் ஒளிந்துகொண்டு யானைகளின் வாழிடத்தையும், வழித்தடத்தையும்
ஆக்கிரமித்து யானைகள் மீதான மறைமுகப்போரைத்தொடுத்திருக்கும் நாம்
இனியாவது, காடுகளைக் காத்து கும்கிகளை சுதந்திரமாக விடுவோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக