வெ.பார்கவன் தமிழன் .
'மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்'
-திருக்குறள்.
காடுகளில் இருந்து ஊறிப் பெருகி வருகிறது தண்ணீர். முழுமுதற்
கடவுளர்களின் வேலையைக் காடு செய்கிறது உவப்போடு, ஓயாமல் ஒழியாமல்.
பெய்கின்ற மழையைக் காடு பிடித்து வைத்துக்கொண்டு சிற்றோடையாக, கால்வாயாக,
ஆறாக, பெரு நதியாகக் கசியவிட்டுக்கொண்டு இருக்கிறது.
காடு எனில் பெருமரங்கள், குறுமரங்கள், தாவரங்கள், குற்றுச்செடிகள்,
புதர்கள், கொடிகள், பேரணிகள், பாசிகள், காளான்கள் கொண்ட சோலைகள்,
புல்வெளிகள், பல்வகைத் தாவர மடிப்புகள், அடுக்குகள் ஆகும். பெய்யும்
மழையை அவை மண்ணில் தக்கவைத்துக்கொண்டு, காலம்தோறும் சன்னஞ்சன்னமாகக்
கசியவிட்டுக்கொண்டு இருப்பது காடு. நீரின் வழித் தடங்கள்தான் ஓடைகள்,
ஆறுகள் என்பன.
சாளுக்கிய சோழர் காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை வணிகத்திற்காக காடுகள்
அழிக்கபட்டு கொண்டுதான் இருந்தது. ஆங்கிலேயர் காலத்தில் மொத்த
மலைகாடுகளின் பகுதிக்கு மேலாக அழிக்கபட்டு தேயிலை காப்பி தோட்டங்கள்
உருவாக்கபட்டது. விடுதலைக்கு பின் நாம் தெரிவு செய்த அரசு அதிகார
வர்க்கம் என்ன செய்தது. அந்த காடுகளை சுற்றுலா தளங்களாக மாற்றியது.
இவைகளின் ஆக்கிரமிப்புகளுக்கு அப்பால் எஞ்சியிருக்கும் காடுகளின்
பரப்புதான் எவ்வளவு ?
எஞ்சிய பரப்பில் இருந்து வடியும் நீர் தான் இன்றைய நமது பயன்பாட்டுக்கு
வருகிறது- இதனால் நம் ஒட்டுமொத்த நீர்தேவையையும் எப்படி பூர்த்தி செய்ய
முடியும் ?
காடுகள் அழிவில் காக்கபட முதலில்
சுற்றுலாதளங்களை தடை செய்ய வேண்டும் ; பின் மலைகளை மலடாக்கும் தேயிலை
தோட்டங்களை அழிக்க வேண்டும் - பின் அதன் இயல்பு நிலைக்கே விடல் வேண்டும்.
இதை செய்தால் மட்டுமே
வறட்சியை தடுக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக