திங்கள், 3 டிசம்பர், 2018

அனில் அகர்வால் தூத்துக்குடி தவிர ஏற்காடு கொல்லிமலை தாது வெட்டி மலை அழிப்பு tneb இவனிடம் வாங்குகிறது மின்சாரம்

aathi1956 aathi1956@gmail.com

மே 29, செவ்., பிற்பகல் 12:09
பெறுநர்: நான்
Arul Raja Pillai, Mathi Vanan மற்றும் 38 பேருடன் இருக்கிறார்.
நாம என்னமோ அந்த சொட்ட தலையன் அனில் அகர்வால் தூத்துக்குடில தான் குத்தவச்சிருக்கான் தொரத்தனும்ன்னு கெளப்புனா அவன் கிளை பரப்பி வேர் பரப்பி நங்கூரம் போட்டு இங்க குத்த வச்சிருக்கான்னு இப்பதான் தெரியுது.
மெட்ராஸ் அலுமினியம் கம்பெனி (MALCO) என்ற பேர்ல வேதாந்தா நிறுவனம் 1973ல ஏற்காடு மலைல அலுமினிய தாது (Bauxite) வெட்டி எடுக்க சுரங்கம் ஆரம்பிச்சிருக்கான். அதனால என்னங்குறீங்களா பாக்சைட் பாறைகள் நீரை வெகுகாலத்திற்கு சேமித்து வைக்கும் தன்மை கொண்டவையாம். வெயில் காலத்திலும் அதிலிருந்து நீர சுரந்து வருமாம். அத வெட்டி எடுத்ததால மலையும் அதன் சுற்றியுள்ள நிலங்கள் அனைத்திலும் நீர் ஆதாரம் வெகுவா குறைந்து போயிடுச்சு. மலைகள் ஆழிவதோடு அங்கு வாழும் பழங்குடியினர் தம் வாழ்வாதார வனத்தை இழந்ததால கடந்த
# 2011முதல் போராடி வருகின்றனர். நமக்கு அவுங்கள பத்தியெல்லாம் என்ன அக்கறை இல்ல.
ஏற்காடோட நிக்கல அவன் சுரங்கம் கொல்லிமலை கொடைக்கானல் வரை நீளுது. இவன் மட்டும்னு நெனைக்காதீங்க திருவண்ணாமல பக்கம் கவுத்திமலை வேடியப்பன் மலைல இரும்புத்தாது வெட்டியெடுக்க ஜிண்ட்டால் குத்தவச்சிருக்கான். நாம அவ்ளோதான்.
தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) யாரோட முதன்மை வாடிக்கையார் தெரியுமா மேட்டூர்ல இருக்குற அனல்மின் நிலையம் (Malco Energy Limited - MEL) இவனுது தான் என்பது கூடுதல் தகவல்.
# SterliteKillings # Vedanta #Thoothukudi # MALCO
# Yercaud # KolliHills # Kodaikanal # MEL

கார்ப்பரேட் வேதாந்தா ஸ்டெர்லைட் தூத்துக்குடி வளங்கள் சுரண்டல் மண்ணழிப்பு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக