திங்கள், 3 டிசம்பர், 2018

தூத்துக்குடி நீதிபதி இருவர் களத்தில் பணி

aathi1956 aathi1956@gmail.com

மே 27, ஞாயி., முற்பகல் 11:55
பெறுநர்: நான்
Ranga Rasu Ra
தூத்துக்குடி மாவட்ட நீதிபதி சாரு ஹாசினியின் பணி வணங்கத்தக்கது. இரவு இரண்டு மணி வரை பணியாற்றி உள்ளார்.. தட்டச்சர் இல்லாத போதும் இவரே டைப் செய்து உத்தரவுகளை வெளியிட்டுள்ளார். நல்லவேளையாக இதற்கு முன் இருந்த ஒருவர் இருந்திருந்தால் பெருஞ்சாபத்தை நீதித்துறை அடைந்திருக்கும்.
அதே போல் நீதிபதி அண்ணாமலை அவர்களின் பங்களிப்பு நினைவுகூரத்தக்கது.. தன் உயிருக்கு ஆபத்து என்பதை கூட பொருட்படுத்தாமல் ஒவ்வொரு காவல்நிலையமாக ஏறி இறங்கி பல அப்பாவிகளை விடுவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களையும் புகார்களையும் பதிவு செய்துள்ளார்.. இவை பின்னர் மிகப்பெரிய ஆதாரங்களாக மாறும்.
இலவச சட்ட உதவி மையத்தின் செயலரின் பணிகளும் மகத்தானது.
இந்த நீதிபதிகள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மிக மனிதநேயத்துடனும் சட்டப்பூர்வமாகவும் செய்துள்ளது பாராட்டுக்கும் நன்றிக்கும் உரியது. ஒரு அரைபுள்ளி தவறாக விழுந்தமைக்காக மனுவை தள்ளுபடி செய்யும் ஈகோ கொண்டவர்கள் மத்தியில் இவர்களை போன்றவர்களினால் நீதித்துறையின் மாண்பு சிறக்கிறது.
வழக்கறிஞர்களுக்கிடையே கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பல பிணக்குகள் இருந்தும் .. எல்லாம் மறந்து மக்களுக்காக ஒன்று பட்டு நின்று காயம் பட்டவர்களுக்கு உணவளித்தும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு பெரும் பலமாய் நின்ற தூத்துக்குடி வழக்கறிஞர்களுக்
கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உங்கள் பணி இப்போது தான் தொடங்கி உள்ளது.
நெல்லை..குமரி .. மதுரை.. சென்னை வழக்கறிஞர்களுக்கும் நன்றி.
தலைவர்கள் நம்மை தவிக்க விட்டாலும்
தமிழின உணர்வே நம்மை இணைக்கும்.-வழக்கறிஞர் பா.அசோக்

மனிதநேயம் துப்பாக்கிச்சூடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக