திங்கள், 3 டிசம்பர், 2018

தமிழகம் புகுந்த சிங்களவர் படையை படையாச்சி வன்னியர் தோற்கடித்தனர் கச்சத்தீவு கோவில் கட்டினர் மண்மீட்பு

aathi1956 aathi1956@gmail.com

22 மே, 2018, பிற்பகல் 6:10
பெறுநர்: நான்
தமிழ்ச் செல்வன்
“கச்சத்தீவு: வன்னியர்களின் வீர வரலாறும் - இந்திய அரசின் துரோகமும்!”
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கும் கைது செய்யப்படுவதற்கும் கச்சத்தீவை தமிழர்கள் இழந்ததுதான் முதன்மைக் காரணமாகும். இந்த நேரத்தில், கச்சத்தீவுக்கும் வன்னியர்களின் வீர வரலாற்றுக்குமான தொடர்பினை அறிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.
# 850 ஆண்டுகளுக்கு முன்பு சிங்களப்படையினர் தென் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கிராமங்களைக் கொளுத்தினர், மக்களைக் கொன்றனர். சிங்களப் படையின் அட்டூழியத்தைத் தடுக்க சோழ மன்னர் வன்னியப் படைவீரர்களை அனுப்பினார்.
சோழப்படையினர் சிங்களப் படையைத் தோற்கடித்து, சிங்களத் தளபதிகளின் தலையைக் கொய்து மதுரைக் கோட்டை முகப்பில் தொங்கவிட்டனர். அப்போது சிங்களப்படையினைத் தோற்கடித்த வன்னியர்கள் இப்போதும் புதுக்கோட்டை - இராமநாதபுரம் மாவட்டங்களில் வாழ்கின்றனர்.
# 100 ஆண்டுகளுக்கு முன்பு கச்சத்தீவு தமிழ் நாட்டுக்கு சொந்தம் என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு கோவில் கட்டியவர்களும் இதே வன்னியர்கள்தான்.
அந்த வீரவரலாற்றை விரிவாகக் காண்போம்:
---------------------------------------------------------------------------
----------
"வீர மரபில் வந்த தொண்டி வன்னியர்கள்"
இரண்டாம் இராசாதிராச சோழன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1163 – 1173) பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியனுக்கும், குலசேகர பாண்டியனுக்கும் இடையே அரசுரிமை மோதல் ஏற்பட்டது.
சிங்கள மன்னன் பராக்கிரம பாகுவின் உதவியை பாராக்கிரம பாண்டியன் நாடினான். பராக்கிரம பாகு தனது தளபதி 'லங்காபுர தண்டநாதா' என்பவன் தலைமையில் படையை அனுப்பினான். பின்னர் ‘ஜகத் விஜயன்’ என்பவன் தலைமையில் இன்னொரு படையையும் அனுப்பினான்.
இராமேசுவரம், சிறுவயல், பொன்னமராவதி, தேவிப்பட்டனம், காளையார் கோவில், தேவிக்கோட்டை, மணமேல்குடி என பல ஊர்களிலும் சிங்களப் படையினர் கொடும் தாக்குதல் நடத்தினர். குலசேகரப் பாண்டியனைத் தோற்கடித்து பராக்கிரம பாண்டியனுடைய மகனாகிய வீரபாண்டியனை அரியணை ஏற்றினர்.
அக்காலத்தில் 'சிங்களப் படையினரின் அட்டூழியங்கள் சோழநாட்டிலும் கடும் சினத்தை ஏற்படுத்தி இருந்ததை' ஆர்ப்பாக்கம் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
இந்நிலையில், சிங்கள படையிடம் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன், இரண்டாம் இராசாதிராச சோழனிடம் உதவி கேட்டான். இராசாதிராச சோழன் தனது படைத்தலைவர் 'திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன்' தலைமையில் பெரும் படையினரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி மற்றும் பாசிப்பட்டினத்த
ுக்கு அனுப்பினார்.
இரண்டாம் இராசாதிராசன் அனுப்பிய சோழப் படை வீரர்கள், சிங்கள மன்னனின் படையைத் தோற்கடித்தனர். 'லங்காபுர தண்டநாதா' மற்றும் ‘ஜகத் விஜயன்’ ஆகிய இரு சிங்களப் படைத்தளபதிகளின் தலையைக் கம்பில் குத்தி மதுரைக் கோட்டை முகப்பில் வைத்தனர். பின்பு வீரபாண்டியனை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு, குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினர்.
"சிங்கள ஊடுருவலைத் தடுக்கும் அரணாக வன்னியர்கள்"
சிங்களர்கள் மீண்டும் தென் தமிழ்நாட்டின் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது என்பதனால் பாண்டிய நாட்டு கடற்கரை பகுதியில் சோழப் படைகளை காவலுக்கு வைத்தான் இரண்டாம் இராசாதிராசன். அவ்வாறு சிங்களப் படைகள் பாண்டிய நாட்டுக்குள் நுழையாமல் அரணாக நிறுத்தப்பட்ட வன்னியர்கள் இப்போதும் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கடலோரங்களில் வாழ்கின்றனர்.
பொன்னகரம், வடக்குப் புதுக்குடி, தெற்கு புதுக்குடி, அய்யம்பட்டினம், பாசிப்பட்டினம், தாமோதரன்பட்டினம், சோழன் தொண்டி, நம்புதாளை, தேவிப்பட்டினம், முடிவீரன் பட்டினம் என பாண்டியநாட்டுக் கடலோர எல்லைப் பகுதியில் சுமார் 30,000 வன்னியர்கள் இப்போதும் வாழ்கிறார்கள்.
சிங்களர்களின் கொட்டத்தை அடக்க சோழ மன்னன் அனுப்பிய அந்த படையினர்தான் அங்கு பூர்விக மக்களாக உள்ளனர். அவர்கள் படை நடத்தியதால் படையாட்சி என்று அழைக்கபடுகிறார்கள். புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் வாழ்ந்த வன்னியர்கள், காலப்போக்கில் மீன்பிடிப்பதை முதன்மைத் தொழிலாகக் கொண்டனர்.
---------------------------------------------------------------------------
----------
"வரலாற்று ஆதாரம்"
1. இலங்கையின் வரலாற்று நூலான 'மகாவம்சம்', பராக்கிரம பாகுவின் தளபதியான 'லங்காபுர தண்டநாதா' என்பவன் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்தததைக் குறிப்பிடுகிறது. ஆனால், அவன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு திரும்பிச் சென்றானா என்பதைக் குறிப்பிடவில்லை.
2. சிங்களத் தளபதி லங்காபுர தண்டநாதா என்ன ஆனான் என்பதை 'திருவாலங்காடு‘ மற்றும் ‘பல்லவராயன் பேட்டை‘ கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சிங்களப்படையைத் தோற்கடித்து 'லங்காபுர தண்டநாதா' மற்றும் 'ஜகத் விஜயன்' ஆகிய படைத்தளபதிகளின் தலையைக் கொய்து, அதனை கம்பில் குத்தி மதுரைக் கோட்டையின் வாயிலில் சோழப்படையினர் தொங்கவிட்டனர் - என பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டுக் கூறுகிறது.
3. சிங்களர்களுக்கு எதிராக இராசாதிராசன் வெற்றிகொண்டதைக் குறிப்பிடும் இக்கல்வெட்டு மயிலாடுதுறைக்கு அருகே உள்ள பல்லவராயன் பேட்டையில் இருக்கிறது. இந்த ஊரின் பெயரே - சோழப்படைத் தளபதி பல்லவராயன் பெயரில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலைக் கட்டியதும் இதே பல்லவராயன்தான். இப்போதும் இந்த ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வன்னியர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்.
4. சிங்களப்படையைத் தோற்கடித்த பல்லவராயனின் தந்தையின் பெயர் எதிரிலிச் சோழ சம்புவராயர் என்று HISTORICAL SKETCHES OF ANCIENT DEKHAN எனும் நூலில் வரலாற்று அறிஞர் சுப்பிரமணிய அய்யர் குறிப்பிட்டுள்ள
ார் (படம் - 3). இதே தகவலை வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்காரும் குறிப்பிட்டுள்ளார் (படம் - 4)
5. இரண்டாம் இராசாதிராசன் தனது படையினரை பல்லவராயன் தலைமையில் கடற்கரை நகரமான தொண்டிக்கும், பாசிப்பட்டனத்துக்கும் அனுப்பிய செய்தியை SOUTH INDIA AND HER MUHAMMADAN INVADERS எனும் நூலில் வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார் குறிப்பிட்டுள்ளார் (படம் - 2). இப்போதும் பாசிப்பட்டினத்தில் பெரும்பான்மையினராகவும் தொண்டியில் கணிசமாகவும் வன்னியர்கள் வாழ்கின்றனர்.
6. சிங்களப்படைகளுக்கு எதிராக படையெடுத்துச் சென்றவர்களில் ஒருவராக 'அம்மையப்பன் பாண்டிநாடு கொண்டானான கண்டர் சூரியன் சம்புவராயன்' என்பவரின் பெயரை 'பிற்கால சோழர் வரலாறு’ எனும் நூலில் வரலாற்று அறிஞர் சதாசிவப் பண்டாரத்தார் குறிப்பிட்டுள்ளார்.
7. இரண்டாம் ராசாதிராசன் காலத்திலும், அவருக்குப் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்திலும் சோழ ஆட்சிப்பகுதிகளி
ல் குறுநில மன்னர்கள் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருந்தனர், உறவினர்களாகவும் இருந்தனர். அவ்வாறு பல்லவராயரின் தந்தை எதிரிலி சோழ சம்புவராயர், பொன்பரப்பி வானகோவராயன், கிளியூர் மலையமான் (சேதிராயர்), குலோத்துங்கச் சோழனின் மருமகன் காடவராயன் என்கிற பெயர்களை வரலாற்று அறிஞர் கிருஷ்ணசாமி அய்யங்கார் குறிப்பிட்டுள்ளார். சம்புவராயர், சேதிராயர், காடவராயர் என்கிற பெயர்கள் வன்னியர்களைக் குறிப்பிடும் பட்டப்பெயர்கள் ஆகும்.
---------------------------------------------------------------------------
----------
"கச்சத்தீவில் வன்னியர் கட்டிய கோவில்"
கச்சத்தீவு இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974-ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இந்த தீவில் புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் ஒன்று உள்ளது. மனிதர்கள் வசிக்காத இந்த 285 ஏக்கர் தீவில் உள்ள ஒரே கட்டுமானம் இக்கோவில் மட்டும்தான். இதனை 1907 ஆம் ஆண்டில் அமைத்தவர் சீனிக்குப்பன் படையாட்சி என்பவர் ஆவார் (படம் - 5).
இரண்டாம் இராசாதிராசனால், சிங்களப் படைகளை எதிர்கொள்வதற்கா
க இராமநாதபுரம் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட சோழப்படையினரின் பரம்பரையில் வந்தவர்தான் சீனிக்குப்பன் படையாட்சி. 850 ஆண்டுகளுக்கு முன்பு போருக்காக வந்தவர்கள் பிற்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈட்பட்டு வருகின்றனர்.
“இந்தத் தேவாலயம் இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவரான சீனிக்குப்பன் படையாட்சியால் கட்டப்பட்டது” என்று ‘கச்சத்தீவு: அன்றும் இன்றும்’ என்ற நூலில் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ. சூசை ஆனந்தன் கூறியுள்ளார்.
“இராமநாதபுர மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாழையைச் சார்ந்த மீனவர், சீனிக்குப்பன் என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோவிலை எழுப்பினார்” என்று ‘வரலாற்றில் கச்சத்தீவு’ என்ற நூலில் உணர்ச்சிக்கவிஞர் சிங்காரவேலன் கூறியுள்ளார்.
---------------------------------------------------------------------------
----------
"இந்திய அரசின் துரோகம்"
# பாண்டிய நாடும் சோழ நாடும் வெவ்வேறு நாடுகள் என்று பார்க்காமல் "பாண்டிய நாட்டினை சிங்களப் படைகள் அழித்ததால், சிங்களத் தளபதிகளின் தலைகளை மதுரைக் கோட்டையில் தொங்கவிட்டார்" சோழநாட்டின் தளபதி பல்லவராயர் (இக்காலத்தில், தமிழீழத்தை அழித்த சிங்களத் தளபதிகளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் வேடிக்கைத்தான் பார்க்கிறோம்).
# தமிழ்நாட்டை சிங்களர்களிடமிருந்து காப்பாற்ற சோழ மன்னனால் தொண்டியில் நிறுத்தப்பட்ட படை வீரர்கள் மரபில் வந்த சீனிக்குப்பன் படையாட்சி கச்சத்தீவில் கோவில் கட்டி அதனை தமிழ்நாட்டின் சொத்தாக அடையாளம் காட்டினார்.
ஆனால், வரலாற்று அடிப்படையிலும், புவியியல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக உள்ள கச்சத்தீவை 1974 ஆம் ஆண்டு இலங்கை - இந்தியா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது இந்திய அரசு.
எந்த சிங்களர்களை சோழமன்னன் எதிர்த்து தோர்க்கடித்தானோ, அதே சிங்களர்களிடம் கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டது இந்திய அரசு. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வருவதற்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதே முக்கிய காரணம் ஆகும்.
---------------------------------------------------------------------------
----------
# தமிழனுக்கு உரிமையான கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்கள் காக்கப்பட வேண்டும். தமிழீழத்தை அழித்த சிங்கள இனவெறியர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழீழ நாடு விடுதலை அடைய வேண்டும். தொண்டி வன்னியர்களின் வரலாறு அதற்கு தூண்டுகோலாக அமையட்டும்!
குறிப்பு: தமிழர்களின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் - சாதிகளின் வரலாறுகளும் பண்பாடும் உள்ளடங்கி இருப்பதைத் தமிழ்த் தேசியர்கள் உணர வேண்டும். சாதிகள் வரலாறு என்பதற்காக எல்லாவற்றையும் புறக்கணித்தால், தமிழனின் வரலாறும் இல்லாமல் போகும். அதற்கு கச்சத்தீவின் அந்தோணியார் கோவிலும் தொண்டியும் எடுத்துக்காட்டு.
---------------------------------------------------------------------------
----------
படம்: 1. கச்சத்தீவில் சீனிக்குப்பன் படையாட்சி கட்டிய ஆலயம்.
படம் 2: சோழப் படைகள் தொண்டிக்கு சென்றதைக் குறிப்பிடும் வரலாற்று நூல்: SOUTH INDIA AND HER MUHAMMADAN INVADERS, by S. Krishnaswami Aiyangar 1921
படம் 3. பல்லவராயரின் தந்தை பெயர் சம்புவராயர் என்று குறிப்பிடும் வரலாற்று நூல்: SOUTH INDIA AND HER MUHAMMADAN INVADERS, by S. Krishnaswami Aiyangar 1921
படம் 4. பல்லவராயரின் தந்தை பெயர் சம்புவராயர் என்று குறிப்பிடும் வரலாற்று நூல்: HISTORICAL SKETCHES OF ANCIENT DEKHAN, by K. V. Subrahmanya Aiyer 1917
படம் 5. கச்சத்தீவில் சீனிக்குப்பன் படையாட்சி கட்டிய ஆலயம் குறித்து குறிப்பிடும் அண்ணமலைப் பல்கலைக் கழக நூல்: PALK BAY - INFORMATION AND BIBLIOGRAPHY, Annamalai University 2008

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக