திங்கள், 3 டிசம்பர், 2018

வீரப்பனார் நிரபராதி நீதிமன்றம் 18 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு யானை தந்தம்

aathi1956 aathi1956@gmail.com

மே 28, திங்., பிற்பகல் 2:56
பெறுநர்: நான்

தந்தம் கடத்தல் வழக்கு: வீரப்பன் விடுதலை
 Web Team
 Published: 25 Apr, 2018 10:47 pm
தந்தம் கடத்தல் வழக்கில் இருந்து மறைந்த வீரப்பன் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2000-ஆம் ஆண்டு வீரப்பன் கூட்டாளிகளான பெரியகுளம் சண்முகம், ராஜேந்திரன், ஜவஹர் ஆகியோர் 12 யானை தந்தம், ஒரு நாட்டுத் துப்பாக்கி, வெடிமருந்துகளுடன் அதிரடி படையினரால் பிடிபட்டனர். இதுகுறித்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் கே.குமார சிவம், போதிய சாட்சியம் இல்லாததாலும் குற்றம் நிரூபிக்கப்படாத காரணத்தினாலும் 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் 7-வது குற்றவாளியான வீரப்பன் இறந்து விட்டதால் அவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்

குற்றவாளி வீரப்பன் கூட்டாளிகள் வழக்கு 

சென்ற ஆண்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது எத்தனை பேர் கவனித்தீர்கள் என்று தெரிய வில்லை, (நமக்குதான் டிவி சீரியல் பார்க்கவே நேரம் பத்தலியே) வீரப்பன் காட்டில் யானைகளை கொல்லவில்லை தந்தங்களை கடத்த வில்லை என்று ஆராய்ந்து பல  சாட்சிகளை  குறுக்கு விசாரணை செய்து ஐயா வீரப்பனார் மீது இருந்த அத்தனை குற்ற சாட்டுகளையும்  தள்ளுபடி செய்தது, வீரப்பன் குற்றமற்றவர் என்பதை நிறுவி இருக்கு ,
செத்தும் தான் ஒரு குற்றமற்ற மக்கள் போராளி என்பதை நிருபித்து விட்டார் எங்கள்  தமிழர்களின்  பாதுகாவலன்  வீரப்பனார்,

அவரை பயங்கர வாதியாக சித்தரித்து சர்க்கரை நோயால் இருந்தவருக்கு விசத்தை வைத்து கொடுத்து கொன்றுவிட்டு பிறகு சுட்டதாக நாடகத்தை நடத்திய காவல்துறைக்கு இதே நீதிமன்றம் தண்டனை வழங்குமா? என்றால் உறுதியாக வழங்காது, காரணம் நீதி மன்றத்திற்கு தெரியும் வீரப்பனை அவளவு எளிதில் அப்பாவி பொதுமக்களை சுடுவது போன்று சுட்டு கொல்ல முடியாது என்று ,


இதில் நகைசுவையும் ஓன்று இருக்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா  தான் வீரப்பனை சுட்டு கொல்ல உத்தரவிட்ட முதல்வர், அவர் இப்போது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளி  *எ ஒன் அக்கியுஸ்ட்* செத்தாலும் அந்த வழக்கில் முதல் குற்றவாளி  ,
*ஜெயலலிதா*
செத்தாலும் எங்கள் சியான் வீரப்பனார் குற்றமற்ற  நீதிமான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக