திங்கள், 3 டிசம்பர், 2018

கோசர் தமிழரே கோளர் கைகோளர் சேனைத்தலைவர் செங்குந்தர் பாவாணர்

aathi1956 aathi1956@gmail.com

மே 18, வெள்., பிற்பகல் 4:51
பெறுநர்: நான்

Suresh N
பகுதி_1
பூட்கை, மேற்கோள், கோள் என்பன ஒருபொருட்சொற்கள். ஒன்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதென மேற்கொள்வது மேற்கோள். அங்ஙனமே உள்ளத்தில் அல்லது செயன்முறையிற் கொள்வது கோள்,
"மாட்சியின் மாசற்றார் கோள்"
(குறள். 646)
என்று திருவள்ளுவரும் கூறுதல் காண்க. கொள்வதும் பூணுவதும் மேற்கொள்வதும் நன்றிற்கும் தீதிற்கும் பொதுவேனும், கோள் பூட்கை மேற்கோள் என்னும் முச் சொல்லும் வழக்காற்றில் நற்கொள்கையையே குறிக்கும்.
பூட்கை மறவரும் அவர் தலைவரும் உறுதியான # கோளுடைமைப் பற்றிக்
# கோளர் என்னப்பட்டனர். கை என்பது படையுறுப்பாதலின், படையுறுப்பைச் சேர்ந்த கோளர்
# கைக்கோளர் என்னப்பட்டனர். ஏனெனில், படையுறுப்பைச் சேராது தற்சார்பான கோளருமிருந்தனர் (free lance):
"ஒப்பன படையுறுப் பொழுக்கம் சிறுமை
கரமும் பின்பிறந் தாளும் கையே"
என்பது பிங்கலம்.
++++
++++
பகுதி_2
# மறம் ,உண்மை,பணிவு ,நன்றியறிவு,அன்பு, கடைப்பிடி, வலிமை முதலிய பண்பிற் சிறந்தவராக வேந்தரால் தெரிந்தெடுக்கப்பெற்ற கைக்கோளர், தெரிந்த கைக்கோளர் என்னப்பட்டனர்.
1."பராந்தகன் தெரிந்த கைக்கோளர்," 2."சுந்தரசோழர் தெரிஞ்ச கைக்கோளர்",
3."பாண்டிய குலாசனி தெரிஞ்ச கைக்கோளர்" எனக் கல்வெட்டில் வருதல் காண்க.
அரசரின் முழு நம்பிக்கைக்குரி
யவராயிருந்த கைக்கோளர் அரண்மனையிலும் உவளகத்திலும் அகப் பரிவாரமாகவும் அமர்த்தப் பெற்றனர் என்பது,
"நம்பிராட்டியார் நேரியன் மாதேவி
யகப்பரிவாரத்துக் கைக்கோளன் சோறுடையா
னருக்கனான அன்பார பாணதி ராயன்"
(S. I. I. Vol. No, 700) எனவரும் கல்வெட்டுப் பகுதியால் அறியலாம்.
+++++
+++++
பகுதி_3
" # கோசர் என்னும் சொல்லே நாளடைவிற் கோளர் என மரீஇயினதென்று (கோசர் பக். 57) என்று இராகவையங்கார் தலைகீழாகக் கூறியிருப்பது பொருந்தாது. "ள"கரம் "ச"கரமாகத் திரிதலன்றிச் சகரம் ளகரமாகத் திரிதலில்லை.
தூளி, தூசி என வருதலும் நினைக" என அவர் எடுத்துக்காட்டியிருப்பதே அதற்குச் சான்றாம்.
ஆகவே, கோசர் என்று கடைக்கழகச் செய்யுட்களிலும், கோளர் என்று பிற்காலச் செய்யுளிலும், கைக்கோளர் என்று கல்வெட்டுகளிலும், குறிக்கப்பெற்றவர் ஒரேவகுப்பினர் என்று துணியத்தகும். பண்டைச் செய்யுட்களில் கோசர் என்ற வடிவமே காணப்பெறுவதால், அதுவே முந்தினதாகும் என்று ஒருபாலர் கருதலாம். உலக வழக்கு செய்யுள் வழக்கினும் முந்தியதென்றும், செய்யுள் வழக்குச் சொல்லெல்லாம் மூலவடிவத்தைக் காட்டாவென்றும், தெரிந்துகொள்க.
நீ என்னும் முன்னிலை யொருமைப்பெயரின் மூலவடிவம் நீன் என்பதே யாயினும், முன்னதே செய்யுள் வழக்காகவும் பின்னது உலக வழக்காகவும் இருத்தல் காண்க.
"நன்றல் காலையு நட்பிற் கோடார்
சென்று வழிப்படூஉந் திரிபில் சூழ்ச்சியிற்
... ... ... ... ... ... ... ... ... ... கோசர்"
(அகம். 113)
எனவும்
"ஒன்றுமொழிக் கோசர்"
(அகம். 196)
எனவும்
"வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர்"
(அகம். 205)
எனவும்
"கோசர் நன்மொழி போல வாயாகின்றே"
(குறுந். 15)
எனவும் வருவனவெல்லாம், கோசர் ஒரு பூட்கையை அல்லது கோட் பாட்டை யுடையவரென்றே புலப்படுத்தல் காண்க. இனி,
"இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர்"
(அகம். 90)
எனவும்
"துணைகா லன்ன புனைதேர்க் கோசர்"
(அகம். 251)
எனவும்
"வளங்கெழு கோசர் விளங்குபடை"
(அகம். 205)
எனவும்
.. ... ... ... ... .... .... .... .... வென்வேல்
இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
இகலின ரெறிந்த அகலிலை முருக்கிற்
பெருமரக் கம்பம் போல
(புறம். 169)
எனவும்
"வலம்புரி கோசர் அவைக்களத் தானும்"
(புறம். 283)
எனவும்
"மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர்'
(அகம். 15)
எனவும்
"கோசர் துளுநாட் டன்ன
வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின்"
(அகம். 15)
எனவும் வருவனவெல்லாம், #கோசர் தமிழர்க்கு மாறான ஓரியல்பும் உடையரல்லர் எனக் காட்டுதல் காண்க.
++++
+++-+
பகுதி_4
1.முத்தமிழ் நாட்டிலும் கோசர் இருந்தனர். அவருட் சிலர் துளுநாட்டைக் கைப்பற்றினர். அதனால் கோசர்நாடு துளு நாடெனப்பட்டது. இது, 'சேரர், கொங்கு' என்பது போன்றதே.
2.அன்னி மிஞிலியின் தந்தை கண்ணை கோசர் ஒருசிலர் பிடுங்கிய கொடுமை பற்றிக் கோசர் எல்லாரையும் அயலார் என்று கொள்ளமுடியாது. வாய்க்காலில் விழுந்த மாங்கனியைத் தின்ற சிறுமியைக் கொன்ற நன்னனும் தமிழனே.
3.செங்குந்தர் குடிப்பிறந்த ஒட்டக்கூத்தர் போன்ற கழகக்காலக் கோசருள்ளும் தமிழ்ப்புலவர் ஒருசிலர் இருந்தனர்.
4.இற்றைக் கைக்கோளரும் செங்குந்தரும் கடுகளவேனும் அயன்மயுடையவரல்லர்; அங்ஙனமே கழகக்காலக் கோசரும்.
5.மோரியப் படையெடுப்பிற்கு முன்பே கோசர் தமிழகத் திருந்தனர். ஆதலால், அவர் மோரியரொடு வந்தவரல்லர்.
- தென்மொழி, பொங்கல் மலர் 1960
கோளர்= #கோசர்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக