திங்கள், 3 டிசம்பர், 2018

25 சென்ட் நிலம் கொஞ்சம் உழைப்பு நால்வர் வாழலாம்

aathi1956 aathi1956@gmail.com

மே 2, புத., முற்பகல் 9:31
பெறுநர்: நான்

உழைப்பாளிகள் தினமல்ல அடிமைகள் தினம்
முதலாளித்துவத்தின் முதன்மை Fake ID பொதுவுடமை மக்களை ஏமாற்ற கண்டுபிடித்த சொல்லே உழைப்பாளி. உழைப்பாளிகள் தினம் எதுக்கு கொண்டாடுறீங்கனு கேட்டுப்பாருங்க. பொதுவுடமை தான் 16 மணிநேர வேலையை 8 மணிநேர வேலையாக மாற்றி பொரச்சி செஞ்சதா
பெருமை பேசுவானுங்க.
வெங்காயம் 16 மணி நேர அடிமையா இருந்த நீ கடுப்பேறிப்போய் தற்சார்பை நோக்கி நகர்ந்து விடக்கூடாது என திட்டமிட்டே தான் முதாலித்துவம் தன் Fake ID பொதுவுடமையை வைத்து உன்னை 8 மணி நேர சமத்துவ உழைப்பாளியாய் சிந்திக்க வைத்தது.
ஆனால் உண்மை என்ன என்றால் 16 மணி நேர அடிமையாய் இருந்த நீ 8 மணி நேர அடிமையாய் மாறியிருக்கிறாய் என்பதே உண்மை. அடிமையில் என்னடா 16 மணி நேர அடிமை 8 மணி நேர சமத்துவ அடிமை.?!?
உலகின் தற்சார்பு முன்னோடிகளான மசனோபு புக்குவோக்கா, நம்மாழ்வார், மராட்டிய வேளாண் அறிஞர்கள் (மார்வாடி பணியா அல்ல) பலர் கால்காணி நிலமும் (25 சென்டு) ஒரு குடும்பத்தில் ஒரு நாளுக்கு ஒருவரின் 4 மணி நேர உழைப்பும் வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத்தந்துவிடும் என்கின்றனர். எனில் தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழருக்கு ஏறக்குறைய 41 லட்சம் ஏக்கர் நிலம் வேண்டும். அதாவது ஒருவருக்கு 6.25 சென்டு. நான்கு நபர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு கால்காணி நிலம். (25 சென்டு)
இந்த தற்சார்பு நோக்கிய நகர்வு மட்டுமே உங்களை அடிமை நிலையில் இருந்து மாற்றும். அதை விட்டுட்டு அடிமைகள் தினத்தை உழைப்பாளிகள் தினம் என்று சொல்வதை எல்லாம் நம்பி ஏமாந்து கொண்டிருந்தால் துணை இராணுவம் எல்லாம் தேவையில்லை. சில முதலாளிகள் போதும் உங்களை ஊதித்தள்ள.
அடிமைகள் தினத்தை தற்சார்பு நோக்கி நகரும் வரை துக்க நாளாக கடைபிடிக்க வேண்டும். அனைவருக்கும் துக்க தின இரங்கல்களை தெரிவித்துக்கொள
்கிறேன்.
- தென்காசி சுப்பிரமணியன்
Rajasubramanian Sundaram Muthiah

நம்மாழ்வார் புதுமுயற்சி விவசாயம் இயற்கை கம்யூனிசம் கம்யூனிஸ்ட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக