திங்கள், 3 டிசம்பர், 2018

லண்டன் சென்று வேதாந்தா எதிராக வழக்கு ஏற்கனவே ஜாம்பியா நாடு

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்மே 27, ஞாயி., பிற்பகல் 12:13
பெறுநர்: நான்
Krishna Muthukumarappan, கலைச்செல்வம் சண்முகம் மற்றும் 4 பேருடன் இருக்கிறார்.
ஜாம்பியாவில் இருக்கும் வேதாந்தாவின் Konkola Copper Mines (KCM) ஐ எதிர்த்து லண்டனில் நடைபெறும் வழக்கு இது (இடது). வழக்கை பிரிட்டனில் ஏற்க கூடாது என்று வேதாந்தா போராடி பார்த்தது.
ஆனால், பிரிட்டானிய நீதிமன்றம் வழக்கை சென்ற ஆண்டு ஆக்டொபரில் ஏற்றுக் கொண்டு விட்டது. ஜாம்பியாவை சுற்றி இருக்கும் பல கிராமங்களில் 1,800 கிராம வாசிகளின் சார்பாக வழக்கு பதிவாகி இருக்கிறது.
காரணம்: வேதாந்தாவின் KCM ஐ சுற்றி குடிதண்ணீரை மாசுபடுத்தி குடிக்க இயலாமல் செய்து விட்டதாகும்.
வலது புறம் இருக்கும் படம் தூத்துக்குடி.
ஜாம்பியாவைப்போலவே தூத்துகுடியிலும் அதே நிலை. நீரின் தன்மையை பார்க்க முடிகிறது. நீரில் கடும் அமிலத்தன்மையும், நச்சுக்களும் கலந்திருப்பது ஆய்வுகளில் தெரிய வருகிறது.
தூத்துக்குடி வழக்கையும், ஜாம்பியா மக்களின் வழக்கோடு இணைத்து பிரிட்டனில் வழக்கு தொடுக்கலாம். சம்பந்தப்பட்ட மனித உரிமை அமைப்புகளின் மூலம் இதை முன்னெடுப்பது அவசியம்!

ஸ்டெர்லைட் தூத்துக்குடி
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக