சனி, 10 பிப்ரவரி, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் எண்ணம் இல்லை ஹிந்தியா

aathi tamil aathi1956@gmail.com

27/10/17
பெறுநர்: எனக்கு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் இல்லை : ஆர்டிஐயில் மத்திய
அரசு அதிர்ச்சி தகவல்
2017-10-27@ 01:33:19
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு
உச்சநீதிமன்றத்தில் இருப்பதால், எந்த முடிவும் எடுக்க முடியாது என்று
மத்திய அரசு தற்போது கைவிரித்துள்ள தகவல்கள் தற்போது
வெளியாகியுள்ளது.தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, புதுச்சேரி மாநிலங்கள்
காவிரி நீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையம் கடந்த
2007ம் ஆண்டு பிப்ரவரி 5ம் ேததி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு கடந்த
2013ம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவை கர்நாடகம்
பின்பற்றவில்லை. இந்த உத்தரவை எதிர்த்து  கர்நாடக அரசு சீராய்வு மனு
தாக்கல் செய்தது. தமிழக அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தது. இந்த வழக்கு
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  இந்தநிலையில், திமுக செய்தி
தொடர்பாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் காவிரி  மேலாண்மை வாரியம் மற்றும்
காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை
சட்டத்தில் கேள்வி எழுப்பி கடந்த  5ம் தேதி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய நீர்வள அமைச்சகம் கர்நாடக அரசு மேகதாது அணை
கட்டுவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. அதிலுள்ள சில குறைபாடுகளை
சுட்டிக்காட்டி திருத்தி மீண்டும் கொண்டு வரும் படி திருப்பி
அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.காவிரி தொடர்பான
வழக்குகளில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயாராக உள்ளதாக
உச்சநீதிமன்றத்தில் பலமுறை தெரிவித்துள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை
வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ளதால், அது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது என்று
ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளது. இதன் மூலம்
நீதிமன்றத்தில் ஒரு நிலையையும், தற்போது தகவல் அறியும் சட்டத்திற்கு
அளித்த பதில் மற்றொரு நிலையையும் தெரிவித்திருப்பது, மத்திய அரசின்
இரட்டை நிலையை  தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
கர்நாடகாவில் நடைபெற உள்ள ேதர்தலை மனதில் வைத்து ஓட்டு வங்கியை பெற இது
போன்று கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு இருந்து
வருகிறது. இதை நிரூபிக்கும் வகையில் மத்திய அரசின் பதில் அமைந்துள்ளது.
ஓட்டுக்காக தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை
விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=346248

காவிரி மேலாண்மை வாரியம்.. தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு
டி.எல்.சஞ்சீவிகுமார் சென்னை
Published :  27 Oct 2017  08:43 IST Updated :  27 Oct 2017  08:44 IST
மேட்டூர் அணை திறக்கப்பட்டு 23 நாட்கள் ஆகியும், காவிரியின் கடைமடையான
கொள்ளிடத்துக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. நடவு வேலைகளை முடித்து
தண்ணீருக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இது சோதனையான காலம்.
ஏற்கெனவே அடி மேல் அடி வாங்கி இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்
விவசாயிகள். ஆனால், அரசியல் ஆதாயங்களுக்காக இந்த விஷயத்தில்
தமிழகத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது.
சமீபத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய
நீர்வளத் துறை அனுப்பிய கடிதமே இதற்கு சாட்சி.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிநீர் இணைப்பு தொடர்பாக
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்டு மத்திய
நீர்வளத் துறைக்கும், பிரதமர் மோடிக்கும் கடந்த ஜூலையில்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடி தம் எழுதினார். அதற்கு சமீபத்தில் பதில்
அளித்துள்ள நீர்வளத் துறை, ‘காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள்
அமைக்குமாறு மத்திய அரசுக்கு 2016 செப்டம்பர் 20-ல் உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டது. அக்டோபர் 4-ம் தேதி அந்த உத்தரவு தள்ளிவைக்கப்பட்டது.
மீண்டும் டிசம்பர் 9-ம் தேதி இரு மாநிலங்களும் இந்த விஷயத்தில் இருவேறான
நிலைப்பாடுகளை எடுத்து மனு தாக்கல் செய்துள்ளன. மேலும் 2007-ல் காவிரி
நதிநீர் பகிர்வு தீர்ப்பாயம் கொடுத்த உத்தரவின் மீதான வழக்கில் காவிரி
மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழக்கு
நிலுவையில் உள்ளது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை’ என
விளக்கெண்ணெயில் தோய்த்த வெண்டைக்காயை போன்ற பதிலை அனுப்பியிருக்கிறது.
இந்தக் கடிதம் வந்ததும், ‘தி இந்து’வை தொடர்புகொண்ட ராதாகிருஷ்ணன்,
‘தமிழக மக்களை மட்டுமின்றி, உச்ச நீதிமன்றத்தையே மத்திய அரசு
ஏமாற்றுகிறது. இதை எல்லாம் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?’ என்று தனது
ஆற்றாமையை வெளிப்படுத்தினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
என்ற உத்தரவை நிறைவேற்றாததற்காக மத்திய அரசை உச்ச நீதிமன்றம் பலமுறை
கண்டித்துவந்த நிலையில் இப்படி ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறது மத்திய
நீர்வளத் துறை.
இதுதொடர்பான வழக்கு 2016 அக்டோபரில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு
வந்தபோது, மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றத்துக்கு
அதிகாரம் இல்லை. உச்ச நீதிமன்றம் வரம்பு மீறி உத்தரவிடுவதால் தேவையற்ற
சிக்கல்கள் உருவாகும். அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 252 மற்றும்
மாநிலங்களுக்கு இடையிலான 1956 நதிநீர் பங்கீட்டுச் சட்டப் பிரிவு 11-ன்
படி நாடாளுமன்றம்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக
முடிவெடுக்க முடியும். காவிரி நடுவர் மன்றப் பரிந்துரையை ஏற்பதா,
மறுப்பதா என்பது பற்றியும் மத்திய அரசும் நாடாளுமன்றமும்தான் இறுதி
முடிவு எடுக்க முடியும். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க
உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை திருத்தம் செய்ய வேண்டும்” என்றார்.
அதற்கு சில நாட்கள் முன்பு தான் இதே மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்றது. இதுகுறித்து நீதிபதிகள்
கேள்வி எழுப்பியபோது, “வாரியம் அமைக்க ஒப்புக்கொண்டது தவறுதான். சட்டப்
பிரிவுகள் குறுக்கிடுவதால் இப்போது இந்த மனுவை தாக்கல் செய்திருக்கிறோம்”
என்றது மத்திய அரசு. தேவகவுடா உண்ணாவிரதம் உட்பட அப்போது கர்நாடகாவில்
நடந்த சில அரசியல் நகர்வுகளே மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம்
என்பதே உண்மை.
இதன் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்கிற தனது
நிலைப்பாட்டை முதன்முறையாக உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியது மத்திய
பாஜக அரசு. கடந்த செப்டம்பரில் நடந்த விசாரணையின்போதும், “இது மாநில
அரசுகள் இடையிலான பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக
நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும். இதில் மத்திய
அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது” என மத்திய அரசு
தெரிவித்தது. அப்போதும் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கண்டனம்
தெரிவித்தது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வைக்கும் வாதங்களுக்கு
பதில் தந்திருக்கிறது தமிழ் நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள்
சங்கம். பொறியாளர்களான கார்கில் சுப்பிரமணியம், வீரப்பன், முன்னாள்
நீதிபதி ராஜன் கூறும்போது, “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2007
பிப்ரவரி 5-ம் தேதி அரசுக்கு அளிக்கப்பட்டது. இது 6 ஆண்டுகளுக்குப் பிறகு
2013 பிப்ரவரி 19-ம் தேதி மத்திய அரசு அரசிதழில் அறிவிக்கையாக
வெளியிடப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நடுவர் மன்றத் தீர்ப்பு பற்றி
மத்திய அரசு மறுப்பு, குறிப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அரசிதழில்
வெளியிட்டதாலேயே, நடுவர் மன்ற அறிக்கையை மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகவே
பொருள். எனவே, பன்மாநில நதிநீர் வழக்கு சட்டம் 1956 மற்றும் அரசியல்
சாசனச் சட்டம் 144-ன் படி காவிரி மேலாண்மை வாரியத்தை நாடாளுமன்ற
ஆய்வின்றியே அமைக்க முடியும். நர்மதா நதி கட்டுப்பாடு ஆணையம் 1979-ல்
அரசிதழில் வெளியிடப்பட்ட மறு ஆண்டே அமைக்கப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணா
மேலாண்மை வாரியங்களும் 2013-ல் நடுவர் மன்ற தீர்ப்பு வந்த 6 மாதங்களில்
அமைக்கப்பட்டது. இதற்காக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.
உண்மை இப்படி இருக்க அரசியல் ஆதாயங்களுக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு
துரோகம் இழைக்கிறது” என்றனர்.
இத்தனை நாளாக காவிரி நீர் தமிழகத்துக்கு கிடையாது என்று கர்நாடகா மட்டுமே
கூறியது. இப்போது மத்திய அரசும் சொல்கிறது என்பது கசப்பான உண்மை. இதை
தமிழக அரசு எப்படி எதிர்கொள்ளப் போகி றது என்பதைப் பொறுத்தே தமிழக
விவசாயத்தின் எதிர்காலம் அமையும்.
http://tamil.thehindu.com/tamilnadu/article19930596.ece

நதிநீர் காவேரி கர்நாடகா ஹிந்தியா மத்திய அரசு நடுவணரசு செய்தி பத்திரிகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக