|
27/10/17
| |||
பெண்விடுதலை போற்றிய மருதுபாண்டியர்கள் !!!
நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தில் விழாவிற்கு சென்றிந்த
மருதுபாண்டிகள் வெள்ளை சேலை கட்டி இளம்பெண்கள் தனியாக நிற்பதை பார்த்து
யார் இவர்கள் என விசாரித்து இவ்வளவு இளம்பெண்களுக்கு ஏன் மறுமணம்
செய்யவில்லை என்று கேட்டனர்
எங்கள் குலத்தில் அறுத்து கெட்டுகிற வழக்கம் இல்லை மன்னர் இதை மட்டும்
செய்ய சொல்லாதீர்கள் என்று கூறுகின்றனர் மருதுபாண்டியர்கள் எவ்வளவோ
கூறியும் ஏற்க மறுக்கின்றனர்
அடுத்த ஒரு மாதத்தில் அறுவடை மாதம் ஒருகிறது அந்தசமயம் சிவகங்கை
அரண்மனையில் இருந்து இனி முக்குளம் கிராமத்தில் அறுத்ததை கெட்டக்கூடாது
என உத்தரவு வருகிறது
அறுத்த நெல்லை கட்டாவிட்டால் அது வயலிலிலேயே வீணாய் போய்விடும் மன்னர்கள்
தயவுசெய்து உத்தரவை திரும்ப்பெற வேண்டும் என ஊர்மக்கள் மன்றாடுகின்றனர்
நீங்கள்தானே அறுத்ததை கெட்டுகிற வழக்கம் எங்கள் குலத்தில் இல்லை என
சொன்னீர்கள் முதலில் உங்கள் ஊர் விதவைப்பெண்களுக்கு மறுமணம் செய்து
வையுங்கள் பிறகு நீங்கள் அறுத்ததை கட்டிக்கொள்ளுங்கள் என்று
உத்தரவிட்டனர்
250 ஆண்டுகளுக்கு முன்பே விதைவைகள் மறுமணத்தை ஊக்குவத்தி பெண்விடுதலையை
போற்றியவர்கள் மருதுபாண்டியர்கள்
ஈ.வே.ரா இல்ல அவங்க தாத்தனுக்கே முன்னோடி எங்கள் பாட்டன்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக