Kumarimainthan
1981 அல்லது 82இல் கேரளத்தின் கொச்சி துறைமுகத்தில் கப்பல்களிலிருந்து
கன்னெய்யத்தை (பெட்ரோலியத்தை) இறக்கும் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட இரண்டு
மாதங்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தமிழகத்தின் தென் மாவடங்களுக்கு
கன்னெய்யப் பொருட்கள் அங்கிருந்துதான் வரவேண்டும். இதனால் தமிழகத்தின்
ஊர்திப் போக்குவரத்து நிலைகுத்திப் போனது.
அன்று இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டி அனைத்திந்திய
சரக்கி(லாரி)ப் போக்குவரத்தில் நாமக்கல் வட்டாரத்துக்கு இணையாக
உச்சத்தில் இருந்தது. தமிழகச் சாலைகளில் ஓடிய அனைத்திந்திய உரிமம்
(National Permit) சரக்கிகளில் கோயில்பட்டி வட்டாரச் சரக்கிகளையே எங்கு
பார்த்தாலும் காண முடிந்தது. ஆனால் இந்த செயற்கைக் கன்னெய்யத்
தட்டுப்பாட்டுக் காலத்தில் வடக்கிலிருந்து புதிய அனைத்திந்திய உரிமம்
பெற்ற சரக்கிகள் வரத் தொடங்கின. நாளடைவில் கோயில்பட்டி அனைத்திந்திய
சரக்கிப் பேருந்து பட்டியலிலிருந்து முழுவதுமாக அகற்றப்பட்டுவிட்டது.
இதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் வேலை இழப்பை நினைத்துப்
பாருங்கள்.
நம் பொதுமைக் கட்சியினர் பொதுவாக தமிழ், தமிழக வெறுப்பாளர்கள் மட்டுமல்ல,
பனியா – பார்சிகள்தாம் இந்தியாவின் தேசிய முதலாளிகள் என்று வெளிப்படையாக
அறிவித்தவர்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்படியானால்தான் கொச்சித் துறைமுகத்தில் நடைபெற்ற வெலைநிறுத்தத்தின்
உண்மையான பின்னணி பற்றியும் புரிந்துகொள்ள முடியும்.
தூத்துக்குடி நகராட்சித் தலைவராக இருந்த மீனவர் வகுப்பைச் சேர்ந்தவர்,
ஏதோ பெர்னாண்டோ என்று நினைவு, பெரும் செல்வந்தர். அவர் தூத்துக்குடியில்
கிடைக்கும் உப்பு, உப்பு சார்ந்த பொருட்களைக் கொண்டு ஒரு வேதிப்பொருள்
தொழிற்சாலை அமைக்க நடுவரசுக்கு வேண்டுகை வைத்திருந்தார். அது பொறுக்காத
கே.டி.கோசல்ராம் என்ற தமிழர்களின் கோடாலிக்கொம்பு, உடன்பிறந்தே கொல்லும்
நோய், கருங்காலி, அரசியல் பகையையும் சாதிக் காழ்ப்பையும் மனதில் வைத்து
அப்போதைய தலைமை அமைச்சர், மார்வாரிகளின் எடுபிடி நேருவிடம் கெஞ்சியது
மட்டுமின்றி இங்கு வருவதற்குத் தயக்கம் காட்டிய சாகு செயின் என்ற
மார்வாரியைப் பிடித்து உனக்கு நிறைய சலுகைகளை நேருவிடம் சொல்லி
வாங்கித்தருகிறேன் என்று தட்டித் தடவி தாரங்கதாரா வேதிப்பொருள்
தொழிற்சாலையைத் தொடங்கவைத்தான். இப்போது அந்த வட்டாரமே மார்வாரிகளின்
கைகளில். அது மட்டுமல்ல,
ஆசியாவிலேயே சிறந்த தரமுள்ள உப்பாகத் தூத்துக்குடி உப்பு கூறப்படுகிறது.
ஆனால் இவர்கள் இதை மார்வாரிகள் மூலமாகவே ஏற்றுமதி செய்ய முடியும் என்று
கூறப்படுகிறது.
தூத்துக்குடி உப்பளங்கள் அனைத்தும் அரசுப் புறம்போக்கில் உள்ளதாக
1990களில் ஒருமுறை தூத்துக்குடி உப்பள உரிமையாளர்கள் சங்கத் தலைவராக
இருந்த சுப்பிரமணியன் நாடார் என்பவரை தமிழக மக்கள் பொருளியல் உரிமைக்
கழகத்தின் சார்பாகச் சந்தித்த போது கூறினார். அதனால் உப்பளங்களை
விரிவுபடுத்திப் பெருந்தொழிலாக்க முடியாதிருப்பதையும் கூறினார்.
கே.டி.கோசல்ராமின் இரண்டகத்தையும் அவர்தான் கூறினார்.
இதே நேரத்தில் இராமநாதபுரம் வாலிநோக்கத்தில் ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு
முன் பார்சி டாட்டா வாங்கிப்போட்ட 20,000 ஏக்கர் நிலத்தில் உப்பு
விளைத்து அரசின் துணையோடு கடும் பரப்புரை செய்து மக்களின் உடல்
நலனுக்குத் தீங்குதரும் அயோடின் உப்பை வாணிகம் செய்து பெரும் ஆதாயம் பெற,
தமிழக அரசும் அதே போல் அயோடின் உப்பை விற்க, அயோடின் கலக்காத உப்பை,
மருந்துப் பொருள் என்ற பெயரில் பதுங்கிப் பதுங்கி கள்ளத்தனமாக விற்க
வேபண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.
அந்தந்த வட்டாரத்திலுள்ள நண்பர்கள் இது போன்று உள்ளூர் மக்களின் தொழில்
வாணிக முனைவுகளைக் கருவறுக்கும் மார்வாரிகளின், இந்திய – மாநில அரசுகளின்
செயற்பாடுகளை எடுத்துக் கூறினால் அனைவரும் தெரிந்துகொள்ளலாம். இன்னும்
செய்திகள் உள்ளன. கொஞ்சம் காத்திருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக