ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

9 கேரளா மாணவர் போலி சான்று காட்டி தமிழகம் மருத்துவம் படிக்க நுழைவு சீட் அட்மிசன் நீட்

(25/08/2017)
தமிழக மருத்துவக் கலந்தாய்வில் போலி சான்றிதழ் வழங்கிய கேரள மாணவர்கள்!

மருத்துவக் கலந்தாய்வில் 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ்
வழங்கியிருப்பதைத் தமிழகசுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதி
செய்துள்ளார்.

நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அரசு
ஒதுக்கீட்டு இடங்களுக்கும், சுயநிதி மருத்துவக் கல்லூரி மேனேஜ்மென்ட்
ஒதுக்கீட்டு இடங்களுக்குமான தர வரிசைப்பட்டியலை ராதாகிருஷ்ணன் நேற்று
முன்தினம் வெளியிட்டார். அதன் அடிப்படையில், நேற்று முதல் மருத்துவக்
கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள்,
விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புக்
கலந்தாய்வு நடைபெற்றது. இன்று
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்குத்
தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று சேர்க்கை ஆணை
வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராதாகிருஷ்ணன்,
’மருத்துவக் கலந்தாய்வில் கேரளாவைச் சேர்ந்த
9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கியிருப்பது உறுதியானது.
அவர்கள் மீது முறைப்படி புகார் பதியப்பட்டு கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். போலி இருப்பிடச் சான்றிதழ் வழங்கும் மாணவர்கள் மீது கடும்
நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

போலி சான்றிதழ் மூலம் மருத்துவ படிப்பில் சேர ‌முயற்சி: மாணவருக்கு சம்மன்
 Web Team கல்வி & வேலைவாய்ப்பு 28 Aug, 2017 08:05 PM
0 0
போலி இருப்பிடச்சான்று மூலம் மருத்துவப் படிப்பில் சேர முயன்ற மாணவர்
ஆஷிக் கலைமானுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்
அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு போலி இருப்பிட ‌சான்றிதழ்
தயார் செய்து கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக, திண்டிவனத்தை
சேர்ந்த வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார்
அளித்திருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு
காவல்துறைக்கு உத்தரவிட்டுருந்த நிலையில், இரட்டை இருப்பிட சான்று மூலம்
மருத்துவ படிப்பில் சேர முயற்சி செய்ததாக, ஆஷிக் கலைமான் எனும்
மாணவருக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மேலும் போலி இருப்பிடச்சான்று மூலம் ஏழு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு
விண்ணப்பித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக