புதன், 20 செப்டம்பர், 2017

பொறியியல் கல்லூரிகள் நாயுடு கைகளில் தெலுங்கர் வந்தேறி ஆதிக்கம் மாபியா கல்வி

வெ. பார்கவன் தமிழன்
தமிழகத்திலிருக்கும் கல்வி நிறுவனங்கள் - குறிப்பாக, பொறியியல்
கல்லூரிகள், தொழிற்பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள் முதலானவை -
பெரும்பாலும் வடுகரிடமும் வடவரிடமுமே உள்ளன.
அண்ணாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராயிருந்த பாலகுருசாமி,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான தாமோதரன், பாரதியார்
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராயிருந்த சுப்பையன் முதலானோர்
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தனிக்கொற்றம் புரிந்துவந்த கம்மா
நாயுடுகளாவர். கம்மவார் நாயுடுகளுடைய குன்றத்தூர் சென்னை இன்சுட்டியூட்
ஆஃப் டெக்னாலசியில் சேர்வதற்கு ஆந்திரத்திலிருந்து வரும் தெலுங்கு
மாணவர்களுக்கெனத் தனியாக 20% இடம் ஒதுக்கப்படுகிறத
ு. அதில் பணிபுரியும் எல்லாருமே தெலுங்கராவர்.
ஐந்து பெரிய மருத்துவமனைகளும் (அவற்றின் கிளைகளும்) கம்மா நாயுடு என்னும்
ஒரு தெலுங்குச் சாதியருக்குச் சொந்தமானவை. அரவிந்த் கண்மருத்துவமனை,
(பக்தவச்சலத்துக்குச் சொந்தமான) KG மருத்துவமனை முதலானவை அவற்றில்
குறிப்பிடத் தக்கவை.
கும்மிடிப்பூண்டியிலிருக்கும் RMK பொறியியல் கல்லூரியும் RMD பொறியியல்
கல்லூரியும், திருவள்ளூரிலிருக்கும் சிறீராம் பொறியியல் கல்லூரியும் செயா
பொறியியல் கல்லூரியும் LCR பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும் தீனதயாள்
பொறியியல் கல்லூரியும் JNN பொறியியல் கழகமும் ஈசுவரி பொறியியல்
கல்லூரியும் இந்திரா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியும் சிறீ கலைமகள்
பொறியியல் கல்லூரியும் சிறீ வெங்கடேசுவரா பொறியியல் தொழில்நுட்பக்
கல்லூரியும் சிறீ வெங்கடேசுவரா அறிவியல் தொழில்நுட்பக் கழகமும்,
திருநின்றவூரிலிருக்கும் சக்தி பொறியியல் கல்லூரி, சென்னையிலுள்ள
சீனிவாசா பொறியியல் தொழில்நுட்பக் கழகமும் பிரத்யுசா பொறியியல் கல்லூரி
யும் (நந்தம்பாக்கம்), சென்னை தொழில்நுட்பக் கழகமும், திருத்தணியிலுள்ள
BKR பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் இருக்கும் சிறீ
வெங்கடேசுவரா பொறியியல் கல்லூரியும் ஆதி பொறியியல் தொழில்நுட்பக்
கல்லூரியும், திருவண்ணாமலையிலிருக்கும் அருணைப் பொறியியல் கல்லூரி,
மாமண்டூரிலுள்ள சிறீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி, தேனியிலிருக்கும்
கம்மவார் பொறியில் கல்லூரி, திருவேற்காட்டிலுள்ள SA பொறியியல் கல்லூரி,
பெரியகுளத்திலுள்ள SAMS பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, நாமக்கல்
இராசிபுரத்தில் இருக்கும் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி,
விருதுநகரிலிருக்கும் ரெங்கநாயகி வரதராசன் பொறியியல் கல்லூரியும்
சிறீவித்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும், சிவகாசியிலிருக்கும்
PSR பொறியியல் கல்லூரியும் PSR ரெங்கசாமி பெண்கள் பொறியியல் கல்லூரியும்,
கோவையிலிருக்கும் PS கோவிந்தசாமி நாயுடு பொறியியல் கல்லூரியும் PSG
தொழில்நுட்பக் கல்லூரியும், KGISL பொறியியல் கல்லூரியும் (வட்டப்பாளையம்)
கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழகமும் சிறீ இராமகிருட்டினா பொறியியல்
கல்லூரியும் (பச்சப்பாளையம்) சிறீ இராமகிருட்டினா தொழில்நுட்பக் கழகமும்
கிருட்டினா பொறி யியல் தொழில்நுட்பக் கல்லூரியும் (முன்னாள் VLB
சானகியம்மாள் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியும்) கற்பகம்
கல்விக்குழுவின் பொறியியல் கல்லூரியும் கம்மவார் நாயுடுகளுக்குச்
சொந்தமான பொறியியல் கல்லூரிகளாகும்.
விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூரிலிருக்கும்SRNM பல்நுட்பக்
(Polytechnic) கல்லூரியும் சீனிவாசா தொழிற்பள்ளியும், சிவகாசியில் உள்ள
சிறீ பத்மநாபா தொழிற்பள்ளி, கோவையிலுள்ள GRG பல்நுட்பக் கல்லூரியும் PSG
பல்நுட்பக் கல்லூரியும் சிறீ இராமகிருட்டினா பல்நுட்பக் கல்லூரியும் அதே
கம்மவார் நாயுடுகள் நடத்தும் பல்நுட்பக் கல்விக்கூடங்களாகும்.
தேனி மாவட்டத்திலிருக்கும் தேனி கம்மவார் கலை-அறிவியல் கல்லூரி,
விருதுநகர் மாவட்டத்திலுள்ள (சாத்தூர்) SRNM கல்லூரி, ஆர். பொன்னுசாமி
நாயுடு ஆசிரியர் பட்டயக் கல்லூரி, SR நாயுடு ஆசிரியர் பயிற்சிக் கழகம்,
கோவில்பட்டி GVN கல்லூரி, கோவையி லுள்ள PSG கிருட்டினம்மாள் பெண்கள்
கலை-அறிவியல் கல்லூரியும் PSG கலை-அறிவியல் கல்லூரியும் GR தாமோதரன்
அறிவியல் கல்லூரியும் கற்பகம் கல்வி நிறுவனங்களும் கம்மவார் நாயுடுகள்
நடத்திவரும் கலை-அறிவியல் கல்லூரிகளாகும்.
திருநெல்வேலி விசுவநாதன்பட்டி
யிலிருக்கும் கம்மவார் உயர்நிலைப் பள்ளி, கோவில்பட்டியிலிருக்கும் CKT
மெட்ரிக்குலேசன் பள்ளியும் கம்மவார் பெண்கள் மேனிலைப் பள்ளியும் இலட்சுமி
மில் மேனிலைப் பள்ளியும், கழுகுமலையிலிருக்கும் கம்மவார் மேனிலைப்
பள்ளியும், ஓட்டபிடாரத்திலிருக்கும் கம்மவார் தொடக்கப்பள்ளியும்,
அருப்புக்கோட்டையிலுள்ள சாது டி. இராமசாமி நாயக்கர் அறக்கட் டளை மேனிலைப்
பள்ளியும் கம்மவார் தொடக்கப் பள்ளியும், இராசபாளையத்திலிருக்கும் சிறீ
இரமணா வித்யாலயா மாண்டசோரி மெட் ரிக்குலேசன் பள்ளியும், சாத்துரிலுள்ள
தேனி கம்மவார் பெண்கள் மேனிலைப் பள்ளியும், சிவகாசி கம்மவார் நாயக்கர்
மகமை நிதிய மெட்ரிக்குலேசன் பள்ளியும் சேவல்பட்டியிலுள்ள தானு நினைவு
மெட்ரிக் பள்ளித் தொகுப்பும், கோவை உடுமலைப்பேட்டையிலுள்ள இராசலட்சுமி
கெங்குசாமி மெட்ரிக் மேனிலைப் பள்ளியும் பீளமேட்டி லிருக்கும் சிறீ
கோபால் நாயுடு மேனிலைப் பள்ளியும், ஒண்டிப்புதூரிலுள்ள கதிரி மில்
மேனிலைப் பள்ளியும் ஆந்திராவின் நாகலாபுரத்தி லுள்ள SKK
உயர்நிலைப்பள்ளியும் தமிழ் நாட்டில் வாழும் கம்மவார் நாயுடுகளுக்குச்
சொந்தமான பள்ளிகளாகும்.
PSG குழுமம் (அறக்கட்டளை) கோவையை தலைமையிடமாகக்கொண்டு இயங்கி வருகிறது.
பி.எஸ்.கோவிந்தசாமி நாயுடுவால் (கம்மா) தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை
தமிழர்களை சுரண்டி நச்சுமரமாய் விழுதூன்றி வளர்ந்துவருகிறது. பின்வரும்
29 நிறுவனங்களும் இந்தக் குழுமத்திற்குரியன:
PSG சன்சு & சாரிட்டி, PSG சர்வசனா உயர்நிலைப்பள்ளி, (பெங்களூர்,
விசயவாடா, சித்தூர், புனே , நாக்பூர், இந்தூர், ஜபல்பூர் என்று இந்தியா
முழுவதும் விற்பனைக் கிளைகளைகொண்ட) PSG தொழிற் துறை நிறுவனம், PSG
தொழில்நுட்பக் கல்லூரி, PSG நடுநிலைப் பள்ளி (வேடப்பட்டி), PSG தொடக்கப்
பள்ளி(பீளமேடு), PSG கலை-அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), PSG
தொழில்நுட்பக் கல்லூரி, PSG நகர்புற நலவாழ்வு மையம், PSG மாழை ஆக்க
நிறுவனம் (நிலாம்பூர்), PSG மருத்துவ அறிவியல்+ ஆய்வகம், PSG தொழிற்துறை
பயிற்சி நிறுவனம், PSG மருத்துவ மனைகள், PSG முறைசாரா கல்வி மையம்,PSG
அன்ட் சன்ஸ் ஆடை ஆராய்ச்சி+பயிற்சி மையம், PSG ஊரக நல்வாழ்வு மையம், PSG
மேலாண்மை தொழில்நுட்பகம், PSG செவிலியர் கல்லூரி,PSG அறிவியல்+தொழில்
முனைவோர் தொழிற்நுட்பப் பூங்கா, PSG ஆக்கம்+ வணிகத் தொழிற்நுட்ப பயிலகம்,
PSG உடற்பயிற்சி மருத்துவக் கல்லூரி, PSG மருந்தியல் கல்லூரி,PSG
விளம்பரம்+செய்திதொடர்பு மையம், PSG மழலையர் பள்ளி, PSG
கடல்உடல்நலம்+மேலாண்மை பயிற்சியகம், PSG உயர்நிலைப் பள்ளி(வேடப்பட்டி),
PSG உயர்தரக் கல்வி தொழில்நுட்பகம், PSG பள்ளி, PSG தொழில்நுட்பம்
மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், PSG பட்டுத் துணியகம் (சிறுமுகை, கோவை) .
ஜி. ஆர். வரதராசுலு பெயரில் இயங்கிவரும் நிறுவனங்கள் (GRG Foundations) பின்வருவன:
கோவையில் அமைந்துள்ள பையனியர் கலை-அறிவியல் கல்லூரி (சோதிபுரம்),
பையனியர் ஆலை மேல்நிலைப் பள்ளி (சோதிபுரம்), GRG ஆங்கில மேனிலைப் பள்ளி
(பீளமேடு), சந்திரா ஆங்கில மேனிலைப் பள்ளி (கோவை), சந்திரகாந்தி பள்ளி
(பீளமேடு), GRG மேனிலைக் கல்வி மையம் (பீளமேடு), GRG தொழிற்நுட்ப கல்லூரி
(குப்பேப்பாளையம்), GRG மேலாண்மைக் கல்விப் பள்ளி(பீளமேடு), PSGR
கிருட்டினம்மாள் மகளிர் கல்லூரி (பீளமேடு), PSGR கிருட்டினம்மாள் பெண்கள்
மேனிலைப் பள்ளி (பீளமேடு), PSGR கிருட்டினம்மாள் மழலையர்+தொடக்கப் பள்ளி
(கோவை), GR வரதராசுலு மேனிலைப்பள்ளி (மயிலாடும்பாறை, தேனி), GRG நினைவு
மேல்நிலைப்பள்ளி (நீலகிரி).
சென்னையிலுள்ள பெரியார் பகுத்தறிவு ஆய்வகமும் நூலகமும், பெரியார் கணிணி
ஆய்வுக் கல்வியகம், .பெரியார் ஐ .ஏ. எசு- ஐ .பி.எசு. பயிற்சி மையம்,
பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், பெரியார் தொழிற்கல்வி நிறுவனம்
(CA/ICWA/
ACS), பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, மகளிர்
மேம்பாட்டுக்கும் மறுமலர்ச்சிக்கு
மான பெரியார் அமைப்பு (பவர்), பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்,
பெரியார் இலவச சட்ட உதவி மையம் ஆகியனவும்; திருச்சிராப்பள்
ளியிலுள்ள நாகம்மை குழந்தைகள் இல்லம், பெரியார் தொடக்கப் பள்ளி, பெரியார்
மணியம்மை பெண்கள் மேனிலைப் பள்ளி, பெரியார் நூற்றாண்டு நினைவு
மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளி, நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்,
பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பெரியார் மருந்தியல் மகளிர்
கல்லூரி, பெரியார் கணினி மையம், பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி, பெரியார்
செவிலியர் கல்லூரி ஆகியனவும்; தஞ்சாவூரிலிருக்
கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் நூற்றாண்டு பல்நுட்பக்
கல்லூரி, பெரியார் சமூகத் தொடர்கல்விக் கல்லூரி, பெரியார் உயிரி
தொழில்நுட்ப-உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம், பெரியார் புத்தாக்க
எரியாற்றல் பயிற்சி நிறுவனம் ஆகியனவும் பலிசா நாயுடுவான ஈ. வெ. இராமசாமி
நாயக்கரின் பெயரில் அமைந்த பெரியார் அறக்கட்டளை நடத்தும்
நிறுவனங்களாகும். மாவட்டம் தோறும் நகரந்தோறும் பெரியார் பள்ளிகள்
இருக்கின்றன. சென்னையிலிருக்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர
குடும்பநல மையமும் புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மையமும், திருச்சியில்
இருக்கும் பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, தஞ்சையிலிருக்கும்
பெரியார் மருத்துவமனை குடும்பநல மையம், சோழங்கநல்லூரிலுள்ள பெரியார்
மருத்துவமனை குடும்பநல மையம், சேலத்திலுள்ள டாக்டர் மரகதம் மாரியப்பன்
மருத்துவமனை முதலான மருத்து வமனைகளையும்கூடப் பெரியார் அறக்கட்டளை
நடத்திவருகிறது.
புதுடில்லியில் பாம்நோலி, சசோலா ஆகிய இடங்களில் பெரியார் மையங்கள் உள்ளன.
விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு ஆகிய ஏடுகளையும் பெரியார் அறக்கட்டளை
நடத்திவருகிறது.
புதுச்சேரியிலுள்ள அரியூர் வெங்கடேசுவரா மருத்துவ
கல்லூரி-மருத்துவமனையும், வெங்கடேசுவரா பொறியியல் தொழில்நுட்பக்
கல்லூரியும், மாமண்டூரிலுள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி முதலானவை
கவரை நாயுடுவான நடிகர் விசயகாந்துக்குச் சொந்தமானவை.
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு ராசுக்களுக்குரிய கல்வி நிறுவ னங்களும்
பலவாகும். அவற்றில் (பி. ஆர். ராமசுப்பிரமணிய ராசுவுக்குச் சொந்தமான)
ராம்கோ குழுமம் நடுவண் பாடத்திட்டத்துடன் ஆங்கிலவழியில் நடத்திவரும்
பள்ளிகள் 17 ஆகும். இராசபாளயத்திலிருக்கும் .பி. ஏ. சி. ராமசாமி ராசா
பல்தொழில்நுட்பப் கல்லூரி, ராசுக்கள் கலை-அறிவியல் கல்லூரி, பி. ஏ. சி.
ராமசாமி ராசா பல்தொழில்நுட்பப் பயிலகம், ஏ. கே. டி. தர்மராசா மகளிர்
கல்லூரி, .என். ஏ. மஞ்சம்மாள் மகளிர் பல்தொழில்நுட்பப் பயிலகம், பி. ஏ.
சின்னையா ராசா நினைவுப் பள்ளி, ஏ. கே. டி தர்மராசா பள்ளி, என். ஏ. அன்னம்
ராசா பள்ளி, தேனி என். ஏ. கொண்டுராசா நினைவு உயர்நிலைப்பள்ளி முதலானவை
குறிப்பிடத்தக்கவை.
சீனிவாச இரெட்டிக்குச் சொந்தமான தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரிகள்
(மொத்தம் 17), பெண்களுக்கான தனலெட்சுமி சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரி,
சீனிவாசன் கலை-அறிவியல் கல்லூரி, தனலெட்சுமி சீனிவாசன் தொழில்நுட்பக்
கல்லூரி, சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி, பெரம்பலூரிலும்
திருச்சியிலும் சென்னையிலும் கோவையிலும் உள்ள 57 பொறியியல் கல்லூரிகள்,
திருச்சியிலுள்ள கே. என். நேரு ரெட்டியின் CARE பொறியியல் பள்ளி, CARE
கட்டடக்கலைப் பள்ளி, கே. ராமசாமி இரெட்டியின் தேசிய பொறியியல் கல்லூரி,
இலட்சுமி அம்மாள் பல்தொழில்நுட்பக் கல்லூரி, கடலூரிலுள்ள கிருஷ்ணசாமி
இரெட்டிக்குச் சொந்தமான கிருஷ்ணசாமி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி,
CARE மேலாண்மை பள்ளி, தனலெட்சுமி சீனிவாசன் செவிலியர் கல்லூரி, சீனிவாசன்
செவிலியர் கல்லூரி, பெரம்பலூரிலுள்ள தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவக்
கல்லூரி மருத்துவமனை, தமிழ்வழியிலும் ஆங்கிலவழியிலும் பெரம்பலூரில்
நடத்தப்படும் .உயர்நிலைப்பள்ளிகள், திருச்சியிலுள்ள ஆங்கில
உயர்நிலைப்பள்ளி, CARE இன்டெர்நேசனல் பள்ளி, தூத்துக்குடி மாவட்டத்துக்
கோவில்பட்டி வட்டத்திலுள்ள கே. ஆர். கல்வி குழுமம் நடத்துகிற கே. ஆர்.
மெட்ரிக்குலேசன் பள்ளி முதலான எண்ணரிய பள்ளிகளையும் கல்லூரிகளையும்
இரெட்டிகள் நடத்திவருகின்றனர்.
தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு நிறுவனங்களிலும்
தெலுங்கர் முதலான வடுகர்களே கோலோச்சுகின்றனர். ‘ஆய்வு’ என்னும் பெயரில்
உருப்படியாக எதுவுமே செய்யவியலாத இவர்கள், தமிழரின் வரலாற்றையும்
மரபுகளையும் திரித்தும் புரட்டியும் கூறித் தமிழர்களின் தேசிய
இனநலன்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மிக நுட்பமாகச் செயல்பட்டு
வருகின்றனர். பள்ளிகளில் தமிழாசிரியர்களா
கவும் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியர்களாகவும் ஆழ அமுங்க குந்திக்கொண்டிர
ுப்பவரும் இவர்களேயாவர். தமிழ்வழிக் கல்வி ஒழியவும், தமிழ் படிப்பதும்
பேசுவதும் தாழ்வு எனும் உளத்தியலைத் தமிழர்களின் அடிமனங்களில் ஊன்றவும்
செய்பவர்கள் வடுகர்களேயாவர். தொடக்கக்கல்வியில் அடிமட்டம் வரையில்
ஊடுருவித் தமிழக அர சால் வரும் அத்தனை பயன்களையும் நுகர்ந்து
வருபவர்களும் வடுகர்களேயாவர். தமிழர்களுக்குத் தம் சொந்த நாட்டில்
வேலைவாய்ப்பே கிடைக்காவண்ணம் எல்லாத் துறைகளிலும் கோலோச்சி வருகின்ற
வடுகர்களில் தெலுங்கர்களே பெரும்பான்மையர்.
தமிழ்நாட்டுக் கல்வித்துறை, வந்தேறிகளின் மிகப் பெரிய வணிக வளாகமாகும்.
தமிழரின் தேசிய இன அடையாளங்களைக் கொத்திக் கூறாடுகிற கசாப்புக்கடைகளே
வடுகர்கள் நடத்தும் கல்விக்கூடங்கள்.
தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் படிக்கக் கூடாது; தமிழில் அவர்கள் பேசக் கூடாது;
தமிழர் என்னும் இன ஓர்மை தமிழர்க்கு வரக் கூடாது எனும் கரவான எண்ணத்துடன்
வடுகரின் திராவிட அரசியல் திட்டமிட்டுக் காய் நகர்த்தி வருகிறது.
வரலாற்றை எப்படிக் கற்பிக்க வேண்டுமெனச் சொல்லித் தில்லித்
தர்பாரிலிருந்து தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு அவ்வப்போது ஓலை வருகிறது.
கல்விக்கூடங்களி
லும் பல்கலைக்கழகங்களிலும் தமிழர்களுக்கு நீண்ட நெடும் வரலாறு உள்ளதெனக்
கற்பிக்கக் கூடாது; அவர்களின் நல்ல மரபுகளும் விழுமியங்களும் பண்பாடும்
அவர்களிட மிருந்து மறைக்கப்பட வேண்டும்; வடஇந்திய வரலாறு மட்டுமே
வரலாற்றுப் பாடங்களாக இருக்க வேண்டுமேயன்றி, சேர, சோழ, பாண்டிய, தமிழ்
வேளிர் வரலாறுகள் தமிழ்நாட்டுப் பாடத்திட்டங்களில் இருக்கக் கூடாது
என்பதே வடுகர்களுக்கும் ‘இந்தி’யர்களுக்
குமான பொதுவான கல்விக் கொள்கை. விசயநகர வந்தேறிகளின் வரலாற்றையும்
‘திராவிட இயக்க’ வரலாற்றையும் மட்டுமே வரலாறு என்று வடுகர்கள் தமிழ்ப்
பிள்ளைகளுக்கு வலிந்து புகட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டு அரசு இனித் தமிழ்தான் தமிழ்நாட்டின் கல்விமொழியெனத் தப்பித்
தவறிச் சட்டம் கொண்டுவந்தாலும், ஆளவந்த வடுகர்களோ ‘இந்தி’யர்களோ அவரது
உயர்நீதிமன்றங்களோ உச்சநீதிமன்றமோ அதனை நடைமுறைப்படுத்த
விடமாட்டாவென்பதைச் சொல்லித்தானா தெரிய வேண்டும்? தமிழ்நாடு இறைமையுடன்
கூடிய தனிநாடானாலன்றி, தமிழகக் கல்விக்கூடங்களில் தமிழ் அரியணை ஏறவே
முடியாது.
‘தமிழ்வழிக் கல்வி வேண்டும்!’ என்று என்னதான் கூக்குரலிட்டாலும் கூடிப்
புலம்பினாலும், தமிழ் நாட்டுக்குள் தமிழ்க் கல்வியை மீட்கவே இயலாது.
தமிழகத்திலிருக்
கும் பெரும்பான்மைப் பள்ளிகளும் கல்லூரிகளும் கல்விக்கூடங்களும்
தெலுங்கர் முதலான வடுகர்களிடம் இருக்கின்ற உண்மை தெரிந்தும் தெரியாமலும்
மறைத்தும் போராடித் தமிழ்வழிக் கல்வியை மீட்க முடியுமென்பவர்கள்
பேதைகளாகவோ போலிகளாகவோ கயவர்களாகவோதாம் இருக்கவியலும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக