புதன், 20 செப்டம்பர், 2017

இராமானுசர் தமிழ்த்தொண்டு சாதிமறுப்பு ராமானுஜர் வைணவம்

கத்திவாக்கம் நவீனன் .
உடையவர் இராமானுசர் # 1000வது திருநாள்
==============================
========
வரும் மேழ ஞாயிறு, 19 ஆம் நாள், சித்திரை திங்கள், திருவாதிரை நாள்மீன்
அன்று (1-5-2017), தமிழகம் கண்ட பெரும்பேறு, உடையவர் இராமானுசரின்
1000வது திருநாள் விழா!!!
# தமிழ் மொழியை கோயில் கருவறைகளில் கட்டாயமாக்கியவர்.
# சமஸ்கிருத நூல்களுக்கு தமிழில் உரை எழுதுவது மாறாக, தமிழ்
பாசுரங்களுக்கு சமஸ்கிருதத்தில்
# ஸ்ரீபாஷ்யம் என்றை உரை எழுதி தமிழின் மேன்மையை நிலைநாட்டியவர்.
# தாழ்த்தப்பட்ட மக்களை
# திருக்குலத்தார் (மேன்மைமிக்க குலத்தினர்/திருமகளின் மக்கள்) என்று
பெயர் வைத்து அழைத்து, 1000ஆண்டுகளுக்கு முன்பே ஆலயப்பிரவேசம் நடத்தி
புரட்சி செய்தவர்.
# குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த ‘ஓம் நமோ நாரயணாய’ என்ற
எட்டெழுத்து மந்திரத்தை, குருவின் கட்டளையையும் மீறி, நரகம் சென்றாலும்
பரவாயில்லை, மக்கள் வைகுந்தம் செல்ல வேண்டும் என்று கோயில் கோபுரம் ஏறி
உரக்க உபதேசித்தவர்...
# மக்கள் அனைவரும் ஒரு குலத்தவரே!!! சாதிய ஏற்றத்தாழ்வுகளை பார்ப்பவர்
நெஞ்சத்தில் இறைவன் ஒருபோதும் உறைவதில்லை என்ற உண்மையை உலகிற்கு
அறிவித்தவர்....
உடையவர் இராமானுசர் அவதரித்த இந்த புனித தமிழகத்தில் நானும் பிறந்தேன்
என்பதில் பெருமைக்கொள்கிறேன். ஆனால் இப்படிப்பட்ட அண்ணலின் திருநாளின்
தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன்.....
எனவே மக்களாகிய நாம்தான் உடையவரின் திருநாளின் சீரும் சிறப்போடும்
கொண்டாட வேண்டும்...
எம்பெருமனாரின் 1000ஆவது திருநாளில் தமிழர் அனைவரும் ஒருக்குலத்தவரே
என்று உறுதியேற்று, சாதிய ஏற்றத்தாழ்வுகளை பாராமல், மீண்டும் தருமமிகு
தமிழகத்தை உருவாக்க பாடுவோம்!!!
ஓம் நமோ நாராயணாய!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக