புதன், 20 செப்டம்பர், 2017

லேகியம் வேர்ச்சொல் இளகியம் சொல்லாய்வு

Nakkeeran Balasubramanyam
மூலிகைபல, தேன், வெல்லம் எனப் பல்வேறு சரக்கினையிட்டுச் செய்யும்,
மருத்துவக் குணமிக்க, இளகிய நிலையிலுள்ள ஒன்று, 'இளகியம்' எனப்பட்டது.
இஃதே, தமிழிலுள்ள 'ல, ள,ர, ற, ந, ன, ண' வேறுபாட்டினைத் தமக்கு வாகாக
எடுத்துக்கொண்டு நம்மையே ஏமாற்றியாண்டுவரும் வந்தேறியோரால்,
'லேஹ்யம்'
என்று நம் தலையிற் திணிக்கப்பட, அதனை மீண்டும் தமிழ்ப்படுத்துவ
தாக எண்ணிக்கொண்டு 'லேகியம்' என்று கூறத் தலைப்பட்டான் தமிழன். உண்மையில்
இளகியம் என்பது தமிழிலக்கணப்படியே லேகியம் எனத் திரிந்திருந்தாலும்,
அச்சொல்லைப் பின்னர் திருடிக்கொண்ட அந்தச் சமைத்தமொழிக் கூட்டம் தமதென்று
கொண்டாடியது.
உண்மை இன்னதென்று எடுத்துரைத்தால் தமிழன் கற்றுத் தன்நிலையுணர்வான்,
ஆனால் இவர் கற்றுக்கொள்வரோ! எனில் மண்டைக்குள் மூளையோடு புழுவுழற்றும்
செம்மறியாட்டுக் கூட்டம் நாமா இல்லை அதனை மேய்த்துக்கொண்டே இங்கு நுழைந்த
அந்த வெண்தோலரா?
கூறு தமிழா கூறு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக