தஞ்சை கோ.கண்ணன்
பாண்டிய நாட்டு ஆய்வழி செம்பவள ராணி
கொரிய நாட்டின் முதல் அரசி
****************************** *********
செம்பவள ராணி கொரிய நாட்டு இளவரசி, அவள் பாண்டிய நாட்டிலிருந்து கி .பி.
48 - ல் கொரிய நாட்டிற்கு கப்பலில் வந்தாள்..
கொரிய மன்னர் சுரா கயா வழியின் முதல் அரசராவார். இருவர் கனவிலும் தோன்றி
ஒருவரை ஒருவர் கண்டு பாண்டி நாட்டு செம்பவளம் சுராவைத் தேடி கப்பலில்
வந்து ஒருவரை ஒருவர் சந்தித்து கடிமணம் புரிந்தனர்.
. செம்பவளம் என்ற பெயரை கொரிய மொழியில் ஃகியோ ஃகுவாங் ஓக் என்று
பெயரிட்டு அழைத்தார்.
சென்னையில் கொரிய துணை தூதர் கிம் தமிழ்ச் சொற்கள் 4000 க்கு மேல்
கொரியாவில் உள்ளதாகக் கூறுகிறார். அது மட்டுமல்லாது வீடு கட்டுவது
பாத்திரங்கள், உரல், உலக்கை போன்றவை இரு நாடுகளிலும் உள்ளன. வேளாண்மை,
பானை செய்த,மணிகள் , துணிகள் , ஆமைப் படகுகள், பல பழமையான தொழிற்சாலைகள்,
பண்பாடுகள் வியக்கத்தக்க ஒற்றுமைகளுடன் உள.
முதன் முதலாகத் தமிழ் கொரிய மொழித் தொடர்புகள் பற்றி பிரஞ்சு
பாதிரியார்கள் வெளியிட்டனர்.
சங்க காலக் கடலோடிகள் கடல் வணிகம் அந்த காலக் கணக்கீட்டில்,
சீனத்துடனும், யப்பானுடனும் செய்தார்கள் என்ற வரலாற்றுப் பதிவுகள்
உள்ளது. இடைப்பட்ட நாடான கொரியாவிற்கும் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தவிர நம் பண்பாட்டுக் கூறுகள், மொழி என பல தொடர்புகள் இதனை உறுதி
செய்கின்றன.
தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் நா .கண்ணன் அவர்தம் பணி கொரியாவில்
அமைந்தமையால் ஆய்வில் ஈடுபட்டு, செம்பவள ராணி, அயுக்தா வழி என்ற கொரிய
சொல்லைக் கொண்டு - அயோத்யாவிலிருந்து வந்தவள் என்றது தவறான கருதுகோள்
என்றார். சங்க கால பாண்டி நாட்டு மன்னன் ஆய் வழி என்றும், மீன்கொடி
உ.பி.யில் 19 -ம் நூ.ஆண்டு என்று நிறுவி பாண்டி நாட்டு மீன் கொடி
என்றார்.
கொரிய – தமிழ் மொழி பண்பாடு பற்றிய ஆய்வரங்கத்தில், இந்த மொழி பண்பாட்டு
ஒற்றுமை தானாக வரவில்லை என்றும் தமிழ்நாட்டிலிருந்து கொரியாவுக்குப் 2000
ஆண்டுகட்கு முன்னரே புலம் பெயர்ந்தனர் தமிழர்கள் என்றும் நா.கண்ணன்,
ஒரிசா பாலு , கொரியத் துணை தூதர் கிம் கலந்து கொண்டு தமிழ் கொரிய மொழித்
தொடர்புகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்தனர்.
மொழியியல் அறிஞர் கிமுன் யங் "தமிழ்" அரிய ஆய்வு நூலை வெளியிட்டு
இருக்கிறார். அதில் தமிழ்- கொரிய-சீன- ஆங்கில சொற்பிறப்பியல் ஆய்வைப்
பதிவு செய்துள்ளார்.
என்னிடம் தொடர்பில் உள்ள என் தம்பி அவர். அண்ணா என்றும் என்னை அழைப்பார்.
தமிழ் நாடு விரைவில் வர இருக்கிறார்.
செம்பவளராணி - முதல் கொரிய அரசி
பாண்டிய நாட்டு ஆய்வழி செம்பவள ராணி
கொரிய நாட்டின் முதல் அரசி
******************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக