ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

தமிழி எழுத்து படிக்க பயிற்சி மையம் கல்வெட்டு

(14/09/2017)
பண்டைய தமிழ்ப் பிராமி எழுத்துகள் பயில வாங்க - சென்னைப் பல்கலைக்கழகம் அழைப்பு

"தொன்முது நாகரிகங்களில் முன்முது நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகம்,
தமிழரின் நாகரிகம். அந்தக் கால தமிழ்ப் பிராமி  எழுத்துகளைப் பயில
வாருங்கள்" என்று அழைப்பு விடுக்கிறது, சிந்துவெளி எழுத்தாய்வு நடுவம்.
மொழி வரலாறு, இலக்கிய வரலாறு போல தமிழ்மொழியின் 5,000 ஆண்டு கால எழுத்து
வரலாற்றைக் கூர்ந்து ஆராயும் நோக்கில், சிந்து வெளி எழுத்தாய்வு நடுவம்,
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையுடன் இணைந்து, சிந்துவெளித் தமிழ்
எழுத்தாய்வுப் பயிலரங்கத்தை நடத்துகிறது. இந்தப் பயிலரங்கம், வரும் 16
முதல் அக்டோபர் 28-ம் தேதி வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி
முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிலரங்கத்தில், பண்டைய
தமிழ்ப் பிராமி எழுத்துகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இறுதியாகத் தேர்வு
நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழும், ஊக்கப்பரிசுகளும்
வழங்கப்பட உள்ளன. இதில் கலந்துகொள்ள விரும்பும் கல்லூரி - பல்கலைக்கழக
மாணவர்கள், தம் துறைத்தலைவர் வாயிலாகவோ அல்லது சென்னைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைத் தலைவரை நேரடியாகவோ தொடர்புகொள்ளலாம்.
பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,
தமிழ் மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
கடற்கரைச் சாலை,
(திருவள்ளுவர் சிலை எதிரில்)
சென்னை - 600 005
தொடர்புகொள்ளவேண்டிய அலைபேசி எண்: 9962949787. இரா.செந்தில் குமார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக